எல்-நினோ தாக்கத்தால் தமிழ்நாட்டில் இந்த 12 மாவட்டங்களில் வறட்சி – மத்திய அரசு எச்சரிக்கை
எல்-நினோ என்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுகிய கால பயிர்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அது குறித்து இந்த கட்டுரையில் விரிவாக பார்க்கலாம்.
சென்னை, ஜூன் 24 : எல்-நினோ என்ற காலநிலை மாற்றத்தால் ஏற்படும் தாக்கம் காரணமாக தமிழ்நாட்டில் 12 மாவட்டங்களில் வறட்சி ஏற்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக குறுகிய கால பயிர்களைப் பரிந்துரைக்க மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. காலநிலை மாற்றத்தால் மத்திய, கிழக்கு பசிபிக் பெருங்கடலின் மேற்பரப்பு நீர் வழக்கத்தை வித அதி வெப்பமடையும் நிகழ்வு எல்-நினோ என அழைக்கப்படுகறது. இதன் காரணமாக ஒரு குறிப்பிட்ட பகுதிகளில் கடும் மழை பொழிவையும் மற்ற பகுதிகளில் கடும் வறட்சியையும் ஏற்படுத்த வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
தமிழ்நாட்டில் இந்த 12 மாவட்டங்களில் வறட்சி
இதன் காரணமாக இந்த 2026 ஆம் ஆண்டு தென்மேற்கு பருவமழை இந்தியாவில் வழக்கத்தை விட குறைவாக இருக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் 3 பருவங்களாக பயிர் சாகுபடி கணக்கிடப்படுகிறது. அதன் படி மழை பொழிவின் அளவை பொருத்து நீண்ட கால பயிர், குறுகிய கால பயிர் மத்திய கால பயிர் சாகுபடி செய்வதற்கான திட்டம் தயார் செய்யப்படுகிறது.
இதையும் படிக்க : கத்தார் ஆலை விபத்தில் உயிரிழந்த தமிழர்கள்.. ரூ. 10 லட்சம் நிதியுதவி அறிவித்த தமிழக அரசு..




இந்த நிலையில் தென்மேற்கு பருவக் காற்று மூலம் மழை அளவு குறை்து வறட்சியால் பாதிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியலை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் அரியலூர், தர்மபுரி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, நாமக்கல், நீலகிரி, பெரம்பலூர், ராமநாதபுரம், திருச்சி, திருப்பத்தூர், வேலூர், விருதுநகர் ஆகிய 12 மாவட்டங்கள் எல்-நினோ தாக்கத்தால் கடுமையாக பாதிக்கப்படும் என அறிவக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வறட்சி பாதிப்புக்குள்ளாகும் என கண்டறியப்பட்ட மாவட்டங்களில் குறுகிய கால பயிர் சாகுபடி செய்தவற்கு மத்திய மானாவரி பயிர் ஆராய்ச்சி நிலையம் பரிந்துரைத்து ருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் எள், பயிறு வகைகள் போன்ற குறுகிய கால பயிறு வகைகளை சாகுபடி செய்ய மத்திய அரசு பிரிந்துரைத்திருக்கிறது.
மேலும் இந்த மாவட்டங்களில் குறுகியகாலப் பயிர்கள் மட்டுமன்றி, அதில் கடினப்படுத்தப்பட்ட விதைகளைப் பயன்படுத்தவும், நுண்ணீர்ப் பாசனத் திட்டங்களை முழுமையாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது.
இதையும் படிக்க : வார இறுதி நாட்கள், மொஹரம் பண்டிகை.. 1,829 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..
இதுதொடர்பாக நாடு முழுவதுமுள்ள 226 மாவட்ட வேளாண்மை அதிகாரிகளுடன், காணொலி மூலம் மத்திய வேளாண் அமைச்சர் சிவராஜ்சிங் சௌகான் ஜூன் 23, 2026 நேற்று ஆலோசனை மேற்கொண்டார். தென் மேற்குப் பருவ மழையைப் போன்று, வடகிழக்குப் பருவ மழைக் காலத்திலும் எல்-நினோ பாதிப்பு ஏற்படக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. தமிழகத்தைப் பொருத்தவரை, வடகிழக்குப் பருவக் காற்று மூலமாகவே அதிக மழைப் பொழிவு கிடைக்கும். எல்-நினோ வடகிழக்குப் பருவ மழைக் காலத்தில் ஏற்படுத்தும் பாதிப்பு குறித்து, அதற்கான பட்டியல் வெளியிடப்படும் போதே தெரிய வரும் என கூறப்படுகிறது.