AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

WI vs PAK: கடைசி இடத்திற்கு சரிந்த பாகிஸ்தான்.. புள்ளிகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்?

World Test Championship Final: உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப் பட்டியலில் இந்திய அணி வங்கதேசத்தை விடவும் பின்தங்கியுள்ளது. இந்தியா 5வது இடத்திலும், வங்கதேசம் 4வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன. 5வது இடத்திலிருந்து முதல் இரண்டு அணிகளுக்குள் முன்னேறி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 இறுதிப் போட்டியில் விளையாட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது.

WI vs PAK: கடைசி இடத்திற்கு சரிந்த பாகிஸ்தான்.. புள்ளிகள் பட்டியலில் இந்தியா எத்தனையாவது இடம்?
வெஸ்ட் இண்டீஸ் Vs பாகிஸ்தான்Image Source: WIPA
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 29 Jul 2026 16:16 PM IST

வெஸ்ட் இண்டீஸ் மற்றும் பாகிஸ்தான் (WI vs PAk)  இடையிலான முதல் டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி வெறும் 4 நாட்களில் பாகிஸ்தானை வீழ்த்தியது. சொந்த மண்ணில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ், முதல் டெஸ்ட் போட்டியை 90 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. இந்த டெஸ்ட் போட்டியின் முடிவு, ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் (WTC 2025-27) புள்ளி அட்டவணையில் முக்கிய மாற்றத்தை கொடுத்துள்ளது. அதன்படி, இதில் பாகிஸ்தான் இப்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. அதேநேரத்தில், வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இடத்தில் இருந்து ஒரு படி முன்னேற்றம் கண்டுள்ளது.

ALSO READ: 5 ஓவர்கள்.. 5 விக்கெட்கள்.. 0 ரன்கள்.. பாகிஸ்தானை பந்தாடிய வெஸ்ட் இண்டீஸ் பவுலர்!

கடைசி இடத்தில் பாகிஸ்தான்:

பாகிஸ்தானுக்கு எதிரான சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் தொடரில் விளையாடுவதற்கு முன்பு, வெஸ்ட் இண்டீஸ் ஐசிசி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் புள்ளி அட்டவணையில் கடைசி இடத்தில் இருந்தது. இருப்பினும், இந்த டெஸ்ட் போட்டிக்குப் பிறகு, நிலைமை மாறியுள்ளது. இப்போது, ​​உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் பட்டியலில் உள்ள 9 அணிகளில், வெஸ்ட் இண்டீஸ் கடைசி இடத்தில் இல்லாமல், 8வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மறுபுறம், பாகிஸ்தான் மிகக் கடைசி இடமான 9வது இடத்திற்குச் சரிந்துள்ளது. இந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் கட்டத்தில் இதுவரை விளையாடிய 11 டெஸ்ட் போட்டிகளில் 2 வெற்றிகள், 7 தோல்விகள் மற்றும் 2 சமன்களுக்குப் பிறகு, வெஸ்ட் இண்டீஸ் அணியின் வெற்றி-தோல்வி சதவீதம் (PCT) 22.73% ஆக உள்ளது. அதேநேரத்தில், பாகிஸ்தானின் PCT வெறும் 6.66% மட்டுமே. இதுவரை விளையாடிய 5 டெஸ்ட் போட்டிகளில் பாகிஸ்தான் 1 போட்டியில் வெற்றி பெற்று 4 போட்டிகளில் தோல்வியடைந்துள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் ஆஸ்திரேலியா முதலிடம்

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் அட்டவணையில் இதுவரை நடைபெற்ற எட்டு டெஸ்ட் போட்டிகளில் 7ல் வெற்றி பெற்றதன் மூலம், ஆஸ்திரேலியா WTC 2025-27 புள்ளிப் பட்டியலில் தனது முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது. தென்னாப்பிரிக்கா இரண்டாம் இடத்தில் உள்ளது. ஆஸ்திரேலியாவின் வெற்றி விகிதம் (PCT) 87.50% ஆகவும், 4 டெஸ்ட் போட்டிகளில் 3ல் வெற்றி பெற்ற தென்னாப்பிரிக்காவின் PCT 75.00% ஆகவும் உள்ளது.

ALSO READ: முதலிடத்தில் தடம் பதித்த சுப்மன் கில்.. தரவரிசையில் டாப் 10க்குள் ரோஹித்-கோலி!

2025-27 உலக சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டியில் இந்தியா எப்படி விளையாடும்?

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 புள்ளிப் பட்டியலில் இந்திய அணி வங்கதேசத்தை விடவும் பின்தங்கியுள்ளது. இந்தியா 5வது இடத்திலும், வங்கதேசம் 4வது இடத்திலும், நியூசிலாந்து 3வது இடத்திலும் உள்ளன. 5வது இடத்திலிருந்து முதல் இரண்டு அணிகளுக்குள் முன்னேறி, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் 2025-27 இறுதிப் போட்டியில் விளையாட சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணிக்கு ஒரே ஒரு வழிதான் உள்ளது. இந்தச் சுற்றில் மீதமுள்ள 9 டெஸ்ட் போட்டிகளிலும் வெற்றி பெறுவது மட்டும்தான்.

Follow Us