AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Ranking: முதலிடத்தில் தடம் பதித்த சுப்மன் கில்.. தரவரிசையில் டாப் 10க்குள் ரோஹித்-கோலி!

ICC ODI Batting Rankings: ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கில்லின் செயல்திறன் அற்புதமாக இருந்தது. கடந்த 2026 ஜூன் மாதம், இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் கில் இரண்டு இன்னிங்ஸ்களில் 23.8 சராசரியில் 238 ரன்கள் எடுத்தார்.

ICC Ranking: முதலிடத்தில் தடம் பதித்த சுப்மன் கில்.. தரவரிசையில் டாப் 10க்குள் ரோஹித்-கோலி!
சுப்மன் கில் - ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலிImage Source: X
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 29 Jul 2026 15:14 PM IST

ஐசிசி ஒருநாள் தரவரிசையில் இந்திய அணியின் (Indian Cricket Team) கேப்டன் சுப்மன் கில் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ICC) இன்று அதாவது 2026 ஜூலை 29ம் தேதி வெளியிட்ட சமீபத்திய தரவரிசைப் பட்டியலில், சுப்மன் கில் முதலிடத்தைப் பிடித்தார். இதற்கு முன்பு, கில் இரண்டாம் இடத்தில் இருந்தநிலையில், நியூசிலாந்தின் டேரில் மிட்செலை முந்தி அசத்தினார். அதேநேரத்தில், இந்த தரவரிசை பட்டியலில் விராட் கோலி மற்றும் ரோஹித் சர்மா (Rohit Sharma) ஆகியோரும் முதல் 5 இடங்களுக்குள் உள்ளனர். தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம், இந்திய ஒருநாள் கேப்டன் சுப்மன் கில்லின் மதிப்பீடு 801 ஆக உயர்ந்துள்ளது. பட்டியலில் இரண்டாம் இடத்தில் உள்ள மிட்செல், 794 மதிப்பீட்டைக் கொண்டுள்ளார்.

ALSO READ: ஒருநாள் உலகக் கோப்பைக்கு முன்பு ரோஹித் நீக்கமா? ஓய்வா? பிசிசிஐ விளக்கம்!

முதல் 5 இடங்களுக்குள் ரோஹித்-விராட்:


தரவரிசையில் முதல் 5 பேட்ஸ்மேன்களைப் பார்க்கும்போது, ​​விராட் கோலி 3வது இடத்திலும், ரோஹித் சர்மா 4வது இடத்திலும் உள்ளனர். அதன்படி, விராட் கோலி 767 மதிப்பீட்டையும்,ரோஹித் சர்மா 758 மதிப்பீட்டையும் பெற்றுள்ளனர். இந்த பட்டியலில் ஆப்கானிஸ்தானின் இப்ராஹிம் ஜத்ரான் 712 மதிப்பீட்டுடன் ஐந்தாவது இடத்தில் உள்ளார்.

ஆப்கானிஸ்தான் மற்றும் இங்கிலாந்துக்கு எதிரான ஒரு நாள் போட்டிகளில் கில்லின் செயல்திறன் அற்புதமாக இருந்தது. கடந்த 2026 ஜூன் மாதம், இந்திய அணி ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடியது. அதில் கில் இரண்டு இன்னிங்ஸ்களில் 23.8 சராசரியில் 238 ரன்கள் எடுத்தார். முதல் போட்டியில் 84* ரன்களும், இரண்டாவது போட்டியில் 154 ரன்களும் எடுத்தார். அந்தத் தொடரில் அவரே அதிக ரன்கள் எடுத்தவர் ஆவார்.

அதன்பிறகு, இங்கிலாந்துக்கு எதிரான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் கில் சிறப்பாகச் செயல்பட்டார். கில் 3 இன்னிங்ஸ்களில் 94 சராசரியில் 188 ரன்கள் குவித்து, தொடரில் இரண்டாவது அதிக ரன்கள் எடுத்த வீரராகத் திகழ்ந்தார். அந்த 3 போட்டிகளில், கில் முறையே 80*, 31 மற்றும் 77 ரன்களை எடுத்தார்.

ALSO READ: இந்திய அணிக்கு இவர்தான் இனி புதிய பயிற்சியாளர்.. யார் இந்த சுப்தீப் கோஷ்?

சுப்மன் கில்லின் ஒருநாள் சர்வதேச போட்டி வாழ்க்கை:

சுப்மன் கில் இதுவரை இந்திய அணிக்காக 67 சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ளார். 66 இன்னிங்ஸ்களில் பேட்டிங் செய்து, கில் 60.33 சராசரியில் 3379 ரன்கள் எடுத்துள்ளார். இந்தக் காலகட்டத்தில், கில் 9 சதங்கள் மற்றும் 20 அரை சதங்களை அடித்துள்ளார், அவரது அதிகபட்ச ஸ்கோர் 208 ஆகும்.

Follow Us