MS Dhoni: தோனிக்கு கோபம் வந்தா என்ன நடக்கும் தெரியுமா? – மறக்க முடியாத சம்பவம்!
2013 சாம்பியன்ஸ் லீக் போட்டியின் போது, தோனியின் கோபத்தை சந்தித்த முன்னாள் சென்னை சூப்பர் கிங்ஸ் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, அந்த அனுபவத்தைப் பகிர்ந்துள்ளார். ஒரு ஓவரில் தோனி ஈஸ்வர் பாண்டேவை அழைத்த போது, மோஹித் தவறுதலாக ஓடி வந்து பந்து வீசத் தொடங்கியதால் இந்த சம்பவம் நடைபெற்றுள்ளது.

பொதுவாக உலகளவில் பல்வேறு வகையான விளையாட்டுகள் இருந்தாலும் கிரிக்கெட்டுக்கு இருக்கும் ரசிகர் கூட்டமே தனி ரகம் தான். பல நாடுகளைச் சேர்ந்த ஒவ்வொரு வீரர்களுக்கும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். பேட்டிங் ஸ்டைல், பந்து வீச்சு தனித்துவம், களத்தில் நடக்கும் விதம் என பல விஷயங்களில் நாம் ஒரு வீரருக்கு ரசிகராக மாறி விடுவோம். அப்படியாக இன்றைய இளைஞர்கள் மத்தியில் ரோல் மாடலாக திகழ்பவர் முன்னாள் இந்திய அணி கேப்டன் மகேந்திர சிங் தோனி. கேப்டன் கூல் என ரசிகர்கள் இவரை அழைக்கிறார்கள். அந்த அளவுக்கு எவ்வளவு பெரிய பதட்டமான சூழல் வந்தாலும் அதனை சிறப்பாக கையாள்வார். மேலும் வெற்றி, தோல்வி பற்றியெல்லாம் கவலைப்படாமல் அடுத்து என்ன நடக்க வேண்டும் என்ற திட்டமிடலும் தோனியிடம் மிகவும் பிடித்தது என பலரும் கூறுவார்கள். அவரிடம் கோபத்தை பார்ப்பதே அரிது என சொல்லப்படும் நிலையில் தோனி கோபப்பட்ட சம்பவம் ஒன்று கடந்த சில நாட்களாக பேசுபொருளாக மாறியுள்ளது.
என்ன நடந்தது?
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் மோஹித் சர்மா, தோனி தனது பொறுமையை இழந்தது குறித்து நேர்காணல் ஒன்றில் பேசியுள்ளார். அதில், 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் லீக் தொடர் நடைபெற்றது. அப்போது கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் விளையாடிக் கொண்டிருந்தோம். நாங்கள் பந்து வீச்சில் ஈடுபடும்போது தோனி அடுத்த ஓவரை வீச ஈஸ்வர் பாண்டேவை அழைத்தார்.
Also Read: ஐபிஎல்லில் விளையாடுவேனா..? டிசம்பர் மாதத்திற்குள் முடிவு.. எம்.எஸ்.தோனி சொன்ன எதிர்கால திட்டம்!




ஆனால் நானோ அவர் என்னை அழைத்தார் என்று நான் நினைத்து விட்டேன். பந்தை பெற்றுக் கொண்டு நான் ஓவரை வீச தயாராக ஓடி வர தொடங்கினேன், ஆனால் தோனி என்னை பந்து வீச அழைக்கவில்லை என்று கூறினார். மேலும் அவர் ஈஸ்வரை பந்து வீச அழைத்தார்.
Also Read: ஐபிஎல் ஓய்வுக்குப் பிறகு தோனி இந்திய அணி பயிற்சியாளரா? வைரலாகும் தகவல்!
இதற்கிடையில் நான் பந்து வீசும் வகையில் ஓடி வர தொடங்கியதால் பந்து வீசுவதைத் தொடர வேண்டும் என்று நடுவர் கூறி விட்டார். அவ்வளவு தான், தோனியின் பொறுமை முடிவுக்கு வந்தது. அவர் அந்த ஓவர் முடிந்ததும் என்னைத் திட்டினார் என்று மோஹித் சர்மா கூறியுள்ளார். ஆனால் நான் அந்த ஓவரில் விக்கெட் வீழ்த்தியும் அவரிடம் திட்டு வாங்கினேன். முதல் பந்தில் கொல்கத்தா அணி வீரர் யூசுப் பதான் ஆட்டமிழந்தார். அந்த கொண்டாட்டத்தின்போது தோனி என்னிடம் கோபப்பட்டார்.
மோஹித் சர்மா தோனி தலைமையின் கீழ் 2013ஆம் ஆண்டு முதல் 2015ஆம் ஆண்டு வரை ஐபிஎல் தொடரில் விளையாடினார். இதேபோல் 2015 ஆம் ஆண்டுக்கான உலகக்கோப்பை அணியிலும் இடம் பிடித்தார். தோனியின் அந்த கோபமான பக்கத்தை கண்டவர்களில் நானும் ஒருவன் எனவும் மோஹித் சர்மா தெரிவித்துள்ளார்.