பீகார் மாநிலத்தில், தனியாக பயணம் செய்த பெண் ஒருவர், ரயிலில் நடந்த கலவரத்தால் கழிப்பறைக்குள் சென்று போராடிய சம்பவம், அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. பீகார் மாநிலம் கடிஹார் சந்திப்பில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு ரயில் நிறுத்தப்பட்ட உடன், 30 முதல் 40 இளைஞர்கள் வரை மொத்தமாக அவர் இருந்த ரயில் பெட்டிக்குள் ஏறியுள்ளனர். இதனால் ரயில் பெட்டிக்குள் பெரும் வாக்குவாதம் மற்றும் மோதல் ஏற்பட்டது.