சீன எல்லையையொட்டிய அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில், தொழிலாளர்களை ஏற்றிச் சென்ற லாரி, பள்ளத்தில் விழுந்ததில் அசாம் மாநிலத்தைச் சேர்ந்த 21 பேர் உயிரிழந்தனர். 22 தொழிலாளர்கள் பயணம் செய்த அந்த லாரி, அஞ்சாவ் மாவட்டத்தின், சாக்லாகம் பகுதியில் விபத்துக்குள்ளானது. இந்த தொழிலாளர்கள் அனைவரும் அசாம் மாநிலம் தின்சுகியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்.