Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

MS Dhoni : தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்.. ரசிகர்கள் உற்சாகம்!

ICC Hall of Fame: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனி, ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்றுள்ளார். 2007 டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் டிராபி ஆகிய மூன்று ஐசிசி கோப்பைகளை வென்று கொடுத்த தோனியின் அற்புதமான கேப்டன்சி மற்றும் கிரிக்கெட் பங்களிப்பைப் பாராட்டி இந்த கௌரவம் வழங்கப்பட்டுள்ளது. இந்தியாவின் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான தோனி, ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்ற 11வது இந்திய வீரர் என்ற பெருமையையும் பெற்றுள்ளார்

MS Dhoni : தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்.. ரசிகர்கள் உற்சாகம்!
எம்.எஸ்.தோனிImage Source: Twitter
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2025 22:33 PM

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் எம்.எஸ். தோனிக்கு (MS Dhoni) சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் மிகப்பெரிய கௌரவத்தை வழங்கியுள்ளது. அதன்படி, இந்திய அணிக்கு 3 ஐ.சி.சி விருதுகளை வென்று கொடுத்த முன்னாள் கேப்டன் தோனிக்கு, மதிப்புமிக்க ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் (ICC Hall of Fame) இடம் வழங்கப்பட்டுள்ளது. லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் இறுதிப் போட்டிக்கு முன்பு நடந்த ஒரு சிறப்பு நிகழ்ச்சியின் போது, ​​ஐ.சி.சி உலக கிரிக்கெட்டின் 7 ஜாம்பவான்களுக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம் அளித்து, அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில், தோனியின் பெயர் முதலில் வந்தது. இதன் மூலம், ஹால் ஆஃப் ஃபேமில் இடம் பெற்ற 11வது இந்திய கிரிக்கெட் வீரர் (Indian Cricketer) என்ற பெருமையை எம்.எஸ். தோனி பெற்றார்.

ஹால் ஆஃப் ஃபேம்:

ஒவ்வொரு ஆண்டும் ஐ.சி.சி., உலக கிரிக்கெட்டின் பல சிறந்த வீரர்களுக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம் அளிக்கிறது. இந்த கௌரவம் எதற்கு என்றால் கிரிக்கெட் மரபைப் பாதுகாக்கவும், வருங்கால தலைமுறை கிரிக்கெட் வீரர்களை ஊக்குவிக்கவும், கிரிக்கெட் விளையாட்டை புதிய உயரத்திற்கு கொண்டு சென்ற ஜாம்பவான்களை கௌரவிக்கவும் சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் கடந்த  2009ம் ஆண்டு இதைத் தொடங்கியது. அப்போதிருந்து, இந்த சிறப்பு நிகழ்வை ஐ.சி.சி. ஒவ்வொரு ஆண்டும் ஏற்பாடு செய்து வருகிறது. இந்த முறை இது லண்டனில் நடந்த உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப் போட்டிக்கு சற்று முன்பு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்தாண்டு தோனியை தவிர மேலும் 7 வீரர்கள் சேர்க்கப்பட்டுள்ளனர்.

இந்திய வீரர்களுக்கு கௌரவம்:


கடந்த ஆண்டுகளில் சச்சின் டெண்டுல்கர், சுனில் கவாஸ்கர், ராகுல் டிராவிட் உள்ளிட்ட பல சிறந்த இந்திய வீரர்கள் ஐ.சி.சி ஹால் ஆஃப் ஃபேமில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்த முறை தோனி ஹால் ஆஃப் ஃபேம் என்னும் கௌரவத்தைப் பெற்றார். கடந்த 2004ம் ஆண்டு சர்வதேச அளவில் அறிமுகமான எம்.எஸ். தோனி, 2007 ஆம் ஆண்டு முதல் முறையாக இந்திய அணியின் கேப்டனாக பொறுப்பேற்றார். அவரது அற்புதமான கேப்டன்சி, மறக்கமுடியாத வாழ்க்கை மற்றும் கிரிக்கெட்டுக்கான பங்களிப்புக்காக இந்த கௌரவம் வழங்கப்பட்டது. இந்தியாவுக்காக 500க்கும் மேற்பட்ட சர்வதேச போட்டிகளில் விளையாடியுள்ள எம்.எஸ். தோனி, 2007 ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஆம் ஆண்டு ஒருநாள் உலகக் கோப்பை மற்றும் 2013 ஆம் ஆண்டு சாம்பியன்ஸ் டிராபியை இந்திய அணிக்காக வென்று கொடுத்தார். இது தவிர, டெஸ்ட் கிரிக்கெட்டில் இந்திய அணியை முதலிடத்திற்கு அழைத்துச் சென்றார்.

வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?
வேலை செய்யும்போது பாடல் கேட்பது நல்லதா?...
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?
Curd Vs Yogurt: இரண்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன? எது சிறந்தது?...
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?
குழந்தைகளுக்கு ஏற்படும் கல்லீரல் பாதிப்புகள் - அறிகுறிகள் என்ன?...
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!
தோனிக்கு ஹால் ஆஃப் ஃபேமில் இடம்.. ஐசிசி கொடுத்த சிறப்பு கௌரவம்..!...
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?
இரவில் அடிக்கடி தூக்கத்தில் இருந்து விழித்துக்கொள்கிறீர்களா?...
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ
ஹாட்ஸ்டார் ஓடிடியில் உள்ள பெஸ்ட் மலையாளப் படங்களின் லிஸ்ட் இதோ...
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி
சமூக வலைதள சேலஞ்ச் வீடியோ - உயிரிழந்த 19 வயது மாணவி...
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்
இந்திய அணியின் அடுத்த சூப்பர் ஸ்டார் யார்? மான்டி பனேசர் ட்விஸ்ட்...
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!
விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' படத்தின் முதல் பாடல் வெளியானது!...
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?
ராகவா லாரன்ஸ் - நிவின் பாலியின் 'பென்ஸ்' படத்தில் இணைந்த நடிகர்?...
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?
சிலம்பரசன் - வெற்றிமாறனின் கூட்டணி படத்தின் கதைக்களம் இதுவா?...