Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India’s New ODI Captain: ரோஹித் சர்மாவிற்கு பிறகு! இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் இவர்தானா..? பிசிசிஐ போடும் திட்டம்!

India ODI Captain: ரோஹித் சர்மா ஓய்வுக்குப் பின், இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் பதவிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் வாய்ப்புள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளன. ஐபிஎல் 2025ல் சிறப்பான தலைமையை வெளிப்படுத்திய ஐயர், சமீபத்திய சாம்பியன்ஸ் டிராஃபி மற்றும் உலகக்கோப்பைகளிலும் சிறந்து விளங்கினார். டெஸ்ட் கிரிக்கெட்டில் இடம் பெறாத ஐயர், ஒருநாள் மற்றும் டி20 அணியில் தனது இடத்தை மீட்டெடுக்க வாய்ப்புள்ளது.

India’s New ODI Captain: ரோஹித் சர்மாவிற்கு பிறகு! இந்திய ஒருநாள் அணியின் கேப்டன் இவர்தானா..? பிசிசிஐ போடும் திட்டம்!
ஷ்ரேயாஸ் ஐயர் - இஷான் கிஷன்Image Source: GETTY
mukesh-kannan
Mukesh Kannan | Published: 09 Jun 2025 19:29 PM

இங்கிலாந்துக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் (India vs England Test Series) இந்திய அணி விளையாட உள்ளது. இந்த டெஸ்ட் தொடரில் இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில் (Shubman Gill) நியமிக்கப்பட்டுள்ளார். சமீபத்தில் ரோஹித் சர்மா (Rohit Sharma) டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்றார். அதன்பிறகு, இளம் வீரரான சுப்மன் கில்லுக்கு டெஸ்ட் அணியின் கேப்டன்சி வழங்கப்பட்டது. இதுபோன்ற சூழ்நிலையில், அனைவரின் பார்வையும் கில்லின் கேப்டன் பதவியில் இருக்கும். ஆனால் அவரது பயணம் தொடங்குவதற்கு முன்பு, இந்திய அணியின் ஒரு புதிய கேப்டன் பற்றிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. அவர் யார், எந்த வடிவத்திற்கு கேப்டனாக நியமிக்க வாய்ப்புள்ளது உள்ளிட்ட விவரங்களை தெரிந்துகொள்வோம்.

ஒருநாள் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயர் நியமனமா..?


ஒருநாள் கிரிக்கெட்டில் ரோஹித் சர்மாவின் வாரிசாக ஷ்ரேயாஸ் ஐயர் கருதப்படுகிறது. ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு தலைமை தாங்கிய ஷ்ரேயாஸ் ஐயர், தனது அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றார். இதுதவிர, ஷ்ரேயாஸ் ஐயர் ஒருநாள் கிரிக்கெட்டிலும் அற்புதமான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார். சில மாதங்களுக்கு முன்பு இந்திய அணி 2025 சாம்பியன்ஸ் டிராபியை வென்றபோது, ஷ்ரேயாஸ் ஐயர் அதில் முக்கிய பங்கு வகித்தார். 2025 சாம்பியன்ஸ் டிராபியில் ஷ்ரேயாஸ் ஐயர் 5 போட்டிகளில் 2 அரைசதங்கள் உள்பட 243 ரன்கள் எடுத்தார். முன்னதாக, 2023 ஒருநாள் உலகக் கோப்பையிலும் ஷ்ரேயாஸ் ஐயர் 11 இன்னிங்ஸ்களில் 2 சதங்கள் மற்றும் 3 அரைசதங்கள் உள்பட 530 ரன்கள் எடுத்துள்ளார்.

டி20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் ஷ்ரேயாஸ் ஐயர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய போதிலும், டெஸ்ட் கிரிக்கெட்டில் அவருக்கு இடம் கிடைக்கவில்லை. வரவிருக்கும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான டெஸ்ட் அணியில் ஷ்ரேயாஸ் ஐயர் தேர்வு செய்யப்படவில்லை. எனவே, ரோஹித் சர்மாவிற்கு பிறகு, இந்திய ஒருநாள் அணியின் கேப்டனாக ஷ்ரேயாஸ் ஐயரை பிசிசிஐ நியமிக்கலாம் என்று கூறப்படுகிறது.

டி20 போட்டிக்கு கம்பேக்..?

ஐபிஎல் 2025 சீசனில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 6 அரைசதங்கள் உள்பட 604 ரன்கள் எடுத்தார். பஞ்சாப் கிங்ஸ் அணியை இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்றதன்மூலம், ஐபிஎல் வரலாற்றில் 3 வெவ்வேறு அணிகளை ஐபிஎல் இறுதிப்போட்டிக்கு அழைத்து சென்ற முதல் கேப்டன் என்ற பெருமையை ஷ்ரேயாஸ் ஐயர் பெற்றார். இதன் காரணமாக, இந்திய டி20 அணிக்கு ஷ்ரேயாஸ் ஐயர் திரும்பலாம் என்று கூறப்படுகிறது. கடந்த 2023ம் ஆண்டு டிசம்பர் மாதம் முதல் இந்திய அணிக்காக ஷ்ரேயாஸ் ஐயர் டி20 போட்டிகளில் விளையாடவில்லை. இந்தியன் எக்ஸ்பிரஸ் வெளியிட்ட செய்திகளின்படி, 2026 டி20 உலகக் கோப்பையில் ஷ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணிக்கு திரும்பலாம். ஷ்ரேயாஸ் ஐயர் தற்போது ஒருநாள் போட்டிகளில் மட்டுமே விளையாடி வருகிறார்.

 

கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!
கொலஸ்ட்ரால் கூடுதா? உடம்பில் காட்டும் சில அறிகுறிகள் இவைதான்!...
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை..
நாளை நீலகிரி மாவட்ட பள்ளிகளுக்கு விடுமுறை.....
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!
ஹெலிகாப்டரில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த ஜீப்ரா - வைரல் வீடியோ!...
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்
விமான விபத்தின் போது விடுதியில் இருந்து தப்பிய சென்னை மருத்துவர்...
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?
சண்முகப் பாண்டியனின் படைத்தலைவன் படம் எப்படி இருக்கு?...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்...
வார்த்தைகள் போதவில்லை… மனமெல்லாம் மகிழ்ச்சியும் நன்றியும்......
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
'நீங்கள் தான் போலி விவசாயி....' எடப்பாடி பழனிசாமி விமர்சனம்...
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்
தமிழக வரலாற்றை அழிக்க துடிக்கும் பாஜக.. முதல்வர் ஸ்டாலின் காட்டம்...
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்
Air India விபத்தில் சிக்கிய சுற்றுலா பயணிகள் - கடைசி வீடியோ வைரல்...
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!
முகம் பளபளனு மாறனுமா? வீட்டில் இருக்கும் சூப்பர் பொருட்கள்!...
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்
தக் லைஃப்... கர்நாடக அரசிற்கு நோட்டீஸ் அனுப்பிய உச்ச நீதிமன்றம்...