பெங்களூருவில் ஒரு ஆட்டோவில் பயணித்த பெண், தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்ட பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பெங்களூருவில் நள்ளிரவில் ஆட்டோ ரிக்ஷாவில் பயணித்த போது, ஓட்டுநரின் செயலால் தான் பாதுகாப்பாக உணர்ந்ததாக அவர் பகிர்ந்துள்ளார். இது தொடர்பான வீடியோவில், அந்தப் பெண், “இப்போது இரவு 12 மணி ஆகிறது. நான் ஒரு ராப்பிடோ ஆட்டோவில் பயணம் செய்கிறேன். உண்மையில் நான் பாதுகாப்பாக உணர்கிறேன்,” என பதிவிட்டுள்ளார்.