Joe Root: டெஸ்ட் போட்டிகளில் 14,000 ரன்கள்.. சச்சின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட்!
Joe Root Records: டெஸ்ட் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆவார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஜோ ரூட்க்கு முன்னாடி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜோ ரூட்டும், 3ம் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார்.
இங்கிலாந்தின் ஜாம்பவான் பேட்ஸ்மேனான பார்க்கப்படும் ஜோ ரூட் (Joe Root), நியூசிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் 14,000 டெஸ்ட் ரன்களை எட்டினார். இதன்மூலம், ஜோ ரூட் டெஸ்ட் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த சச்சின் டெண்டுல்கரின் (Sachin Tendulkar) சாதனையை முறியடிக்கும் வாய்ப்பை பெற்றுள்ளார். இந்த டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸில் 46 ரன்கள் எடுத்த ஜோ ரூட், அரைசதம் அடிக்கும் வாய்ப்பைத் தவறவிட்டார். இருப்பினும், இரண்டாவது இன்னிங்ஸில் தனது அரைசதத்தை நிறைவு செய்தார்.
ALSO READ: விராட் கோலி உடற்தகுதியுடன் உள்ளாரா? ஜூன் 22ம் தேதி பிட்னஸ் டெஸ்ட்.. உற்றுநோக்கும் பிசிசிஐ!




14,000 ரன்கள் எடுத்த இரண்டாவது பேட்ஸ்மேன்
Joe Root joins 14,000 Test runs Club
🚨ALL-TIME TOP 5 TEST RUN SCORERS🚨
1. Sachin Tendulkar – 15,921 Runs
2. Joe Root – 14,000* Runs
3. Ricky Ponting – 13,378 Runs
4. Jacques Kallis – 13,289 Runs
5. Rahul Dravid – 13,288 Runs #CricketTwitter #JoeRoot #ENGVsNZ @ECB_cricket… pic.twitter.com/UOR7DV68UF— DIGITAL_JANKAY (@Digital_Jankay) June 20, 2026
டெஸ்ட் கிரிக்கெட்டில் 14,000 ரன்கள் என்ற மைல்கல்லை எட்டிய உலகின் இரண்டாவது பேட்ஸ்மேன் ஜோ ரூட் ஆவார். தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரராக இருக்கும் சச்சின் டெண்டுல்கர் மட்டுமே ஜோ ரூட்க்கு முன்னாடி இருக்கிறார். இந்தப் பட்டியலில் இரண்டாம் இடத்தில் ஜோ ரூட்டும், 3ம் இடத்தில் ரிக்கி பாண்டிங் உள்ளார். ரிக்கி பாண்டிங் தனது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கையில் 287 இன்னிங்ஸ்களில் 13,378 ரன்கள் எடுத்துள்ளார்.
டெஸ்ட் போட்டிகளில் எத்தனை ரன்கள் எடுத்துள்ளார் சச்சின் டெண்டுல்கர்..?
சச்சின் டெண்டுல்கர் தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில் 200 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி, 329 இன்னிங்ஸ்களில் 15,921 ரன்கள் எடுத்தார். அவர் டெஸ்ட் போட்டிகளில் 51 சதங்களையும் 68 அரை சதங்களையும் அடித்தார். இந்த டெஸ்ட் வடிவத்தில் 50 அல்லது அதற்கு மேற்பட்ட சதங்களை அடித்த ஒரே பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் மட்டும்தான்.
35 வயதான ரூட், இன்னும் 2 முதல் 3 ஆண்டுகளுக்கு டெஸ்ட் கிரிக்கெட்டை எளிதாக விளையாட முடியும். மேலும் அவர் சச்சினின் சாதனையை முறியடிப்பதற்கான எல்லா வாய்ப்புகளும் உள்ளன.
ALSO READ: அறிமுக ஒருநாள் தொடரில் அதிக விக்கெட்டுகள்.. ரெக்கார்ட் வைத்த குர்னூர் பிரார்!
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் ரூட் 75 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார். இருப்பினும், இப்போட்டியில் நியூசிலாந்து வலுவான நிலையில் உள்ளது. 463 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய இங்கிலாந்து, ஆட்ட நேர முடிவில் 5 விக்கெட்டுகளை இழந்து 182 ரன்கள் எடுத்திருந்தது. போட்டியை நடத்தும் அணி வெற்றிபெற இன்னும் 281 ரன்கள் தேவைப்படும் நிலையில், நியூசிலாந்து வெற்றிபெற 5 விக்கெட்டுகள் மட்டுமே தேவையாக உள்ளது.