AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்கிரிக்கெட்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ICC Womens T20 World Cup 2026: 3 போட்டிகளில் ஆடி 3லிலும் தோல்வி.. டி20 உலகக் கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்!

Pakistan Womens Cricket Team: சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தானால் 8 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நடப்பு 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.

ICC Womens T20 World Cup 2026: 3 போட்டிகளில் ஆடி 3லிலும் தோல்வி.. டி20 உலகக் கோப்பையில் வெளியேறிய பாகிஸ்தான்!
பாகிஸ்தான் மகளிர் அணி
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 21 Jun 2026 16:11 PM IST

2026 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் (ICC Womens T20 World Cup 2026) நேற்று அதாவது 2026 ஜூன் 20ம் தேதி நடைபெற்ற போட்டி ஒன்றில் மிகப்பெரிய அதிர்ச்சியாக, வங்கதேசம் பாகிஸ்தானை 23 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது. இதன்மூலம், பாகிஸ்தான் மகளிர் அணி (Pakistan Womens Cricket Team) மிகப்பெரிய பின்னடைவை சந்தித்தது. தொடர்ச்சியாக மூன்றாவது தோல்வியைச் சந்தித்ததன் மூலம், இன்னும் 2 லீக் போட்டிகள் மீதமிருந்த நிலையில், பாகிஸ்தான் நாக்-அவுட் சுற்றுப் போட்டியிலிருந்து வெளியேறியது. முன்னதாக, இந்தியாவிற்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் மகளிர் அணி மிகப்பெரிய தோல்வியை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.

ALSO READ: பாகிஸ்தானை பதம் பார்த்த இந்திய பவுலர்கள்.. டி20 WCல் வெற்றியுடன் தொடங்கிய ஹர்மன் படை!

வங்கதேசம் vs பாகிஸ்தான்:

சவுத்தாம்ப்டனில் உள்ள ரோஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில், முதலில் பேட் செய்த வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்கள் எடுத்தது. பதிலுக்கு ஆடிய பாகிஸ்தானால் 8 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுக்க முடிந்தது. நடப்பு 2026 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டியில் வங்கதேச அணி இதுவரை 3 போட்டிகளில் விளையாடி, 2 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. அதே நேரத்தில் பாகிஸ்தான் தொடர்ச்சியாக 3வது தோல்வியை சந்தித்தது.

முதலில் பேட்டிங் செய்த வங்கதேசம் மோசமான தொடக்கத்தைப் பெற்றது. முதல் 5 ஓவர்களில் 3 விக்கெட்டுகளை இழந்த வங்கதேச அணி, பவர்பிளே முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 24 ரன்கள் எடுத்திருந்தது. பின்னர் கேப்டன் நிகர் சுல்தானாவும், ஷோபனா மொஸ்டாரியும் 4வது விக்கெட்டுக்கு 35 ரன்கள் சேர்த்து இன்னிங்ஸை நிலைப்படுத்தினர். இருப்பினும், மொஸ்டாரி 22 ரன்களில் ஆட்டமிழந்தார்.

இறுதி கட்ட ஓவர்களில், ஷோர்னா அக்தர் 22 பந்துகளில் 39 ரன்கள் எடுத்து அதிரடியாக ஆடி, வங்கதேசம் 6 விக்கெட் இழப்பிற்கு 123 ரன்களை எட்ட உதவினார். கடைசி 4 ஓவர்களில் வங்கதேச அணி மேலும் 43 ரன்களைச் சேர்த்தது. பாகிஸ்தான் தரப்பில், கேப்டன் பாத்திமா சனா தனது 4 ஓவர்களில் 18 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதே நேரத்தில் நஷ்ரா சந்து தனது 4 ஓவர்களில் வெறும் 14 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்தார்.

100 ரன்களுக்குள் சுருண்ட பாகிஸ்தான் அணி:

124 ரன்கள் என்ற இலக்கைத் துரத்திய பாகிஸ்தான், முனீபா அலி மற்றும் குல் ஃபெரோசாவின் சிறப்பான தொடக்கத்துடன் தொடங்கியது. இருவரும் இணைந்து 45 பந்துகளில் முதல் விக்கெட்டுக்கு 49 ரன்கள் சேர்த்தனர். இருப்பினும், அந்த பார்ட்னர்ஷிப் உடைந்தவுடன், பாகிஸ்தானின் ஆட்டம் சரிந்தது. மேலும் விக்கெட்டுகள் தொடர்ந்து வீழ்ந்தன.

குல் ஃபெரோசா 18 பந்துகளில் 23 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.அதே நேரத்தில் முனீபா அலி 25 ரன்கள் எடுத்தார். ஆயிஷா ஜாஃபர் (11) மற்றும் கேப்டன் ஃபாத்திமா சனா (10) மட்டுமே இரட்டை இலக்க ரன்களை எட்டினர். இதன் விளைவாக, பாகிஸ்தான் 20 ஓவர்களில் 8 விக்கெட் இழப்பிற்கு 100 ரன்கள் மட்டுமே எடுத்தது.

ALSO READ: ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கும் IND W.. பழிதீர்க்க களமிறங்கும் SA W.. வெற்றி யாருக்கு..?

சுழற்பந்து வீச்சாளர்களால் வங்கதேச அணிக்கு கிடைத்த வெற்றி:

வங்கதேசத்தின் பந்துவீச்சாளர்கள் இந்த வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தனர். சஞ்சிதா அக்தர் மற்றும் நஹிதா அக்தர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதில், சஞ்சிதா 21 ரன்களையும், நஹிதா 18 ரன்களையும் விட்டுக்கொடுத்தனர். இதுமட்டுமின்றி, ராபியா கான் மற்றும் ரிது மோனி ஆகியோரும் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர்.

Follow Us