IND W vs SA W: ஹாட்ரிக் வெற்றிக்காக களமிறங்கும் IND W.. பழிதீர்க்க களமிறங்கும் SA W.. வெற்றி யாருக்கு..?
IND W vs SA W Head to Head: கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நினைவுகளையும் மீண்டும் கொண்டுவருகிறது. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் போட்டியாக இருந்தாலும், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி பழிதீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்.
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் (ICC Womens T20 World Cup) தொடர்ச்சியாக 2 போட்டிகளில் வெற்றி பெற்ற ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி (Indian Womens Cricket Team), இன்று அதாவது 2026 ஜூன் 21ம் தேதி எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்டில் தென்னாப்பிரிக்காவை எதிர்கொண்டு ஹாட்ரிக் வெற்றியை இலக்காகக் கொண்டுள்ளது. மகளிர் டி20 உலகக் கோப்பையில் இவ்விரு அணிகளும் நேருக்கு நேர் மோதுவது இதுவே முதல் முறையாகும். இதுமட்டுமின்றி, இந்தப் போட்டியானது கடந்த 2025ம் ஆண்டு நடைபெற்ற ஒருநாள் உலகக் கோப்பை இறுதிப் போட்டியின் நினைவுகளையும் மீண்டும் கொண்டுவருகிறது. அதில் இந்தியா, தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை வென்றது. டி20 உலகக் கோப்பையில் இரு அணிகளுக்கும் போட்டியாக இருந்தாலும், தென்னாப்பிரிக்கா மகளிர் அணி பழிதீர்த்துக் கொள்ள முயற்சிக்கும்.
போட்டி எத்தனை மணிக்கு தொடங்கும்..?
இந்திய மகளிர் அணிக்கும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிக்கும் இடையிலான உலகக் கோப்பை போட்டியானது இன்று அதாவது 2026 ஜூன் 21ம் தேதி இந்திய நேரப்படி இரவு 7:00 மணிக்குத் தொடங்கும், டாஸ் அதற்கு அரை மணி நேரம் முன்னதாக நடைபெறும்.




இரு அணிகளும் இதுவரை நேருக்குநேர்:
மகளிர் டி20 உலகக் கோப்பையின் 10 பதிப்புகளிலும் இந்திய மகளிர் மற்றும் தென்னாப்பிரிக்க மகளிர் அணிகள் விளையாடியிருந்தாலும், ஆச்சரியப்படும் விதமாக இதுவே இத்தொடரில் அவை சந்திக்கும் முதல் போட்டியாகும். ஆரம்பச் சுற்றுகளுக்குப் பிறகு குரூப் ஸ்டேஜ் மிகவும் விறுவிறுப்பாக இருப்பதால், இந்தப் போட்டி ஒரு முக்கியமான நேரத்தில் வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே இதுவரை மொத்தம் 24 டி20 போட்டிகள் நடைபெற்றுள்ளன.
இதில் இந்தியா ஆதிக்கம் செலுத்தி வருகிறது. இந்திய அணி 11 போட்டிகளிலும், தென்னாப்பிரிக்கா 10 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. 3 போட்டிகள் சமனில் முடிந்துள்ளன. இருப்பினும், சமீபத்திய போட்டிகளில் தென்னாப்பிரிக்கா அதிக வெற்றிகளைப் பெற்றுள்ளது. இரு அணிகளுக்கும் இடையே நடைபெற்ற கடைசி 15 டி20 போட்டிகளில், தென்னாப்பிரிக்கா 9 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது.
இரு அணிகளின் முழு விவரம்:
தென்னாப்பிரிக்கா மகளிர் கிரிக்கெட் அணி:
லாரா வோல்வார்ட் (கேப்டன்), தாஜ்மின் பிரிட்ஸ், நாடின் டி க்ளெர்க், அன்னேரி டிர்க்சன், ஷப்னிம் இஸ்மாயில், சினாலோ ஜஃப்டா, மரிசான் கப், அயபோங்கா காக்கா, சுனே லூஸ், கராபோ மெசோ, நோன்குலுலேகோ மலாபா, கெய்லா செக்ஹூன், டுமிலோ செக்ஹூன், டமிலோ ரெனேக், நீகெர்க்.
இந்திய மகளிர் கிரிக்கெட் அணி:
ஹர்மன்ப்ரீத் கவுர் (கேப்டன்), ஸ்மிருதி மந்தனா, ஷஃபாலி வர்மா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், பார்தி ஃபுல்மாலி, தீப்தி ஷர்மா, ரிச்சா கோஷ், ஸ்ரீ சரணி, யாஸ்திகா பாட்டியா, நந்தனி சர்மா, அருந்ததி ரெட்டி, ரேணுகா சிங், ராமா ரத்வா கவுட், பிரேமா ரத்வா கவுட்.