AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: விராட் கோலிக்கு முன்பே ஓய்வு கொடுத்திருக்க வேண்டும்.. வர்ணனையாளரின் பேச்சால் எழுந்த சர்ச்சை!

Simon Doull Controversy Talk: விராட் கோலி தனது முதல் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து மெதுவான தொடக்கத்தை கொடுத்தார்.  இருப்பினும், ஆட்டம் தொடரத் தொடர, அவருக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வகுத்த திட்டங்கள் இருந்த போதிலும் விராட் கோலி 37 பந்துகளில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக வர்ணனையாளர் சைமன் டௌல் தெரிவித்தார்.

IPL 2026: விராட் கோலிக்கு முன்பே ஓய்வு கொடுத்திருக்க வேண்டும்.. வர்ணனையாளரின் பேச்சால் எழுந்த சர்ச்சை!
விராட் கோலிImage Source: RCB/twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 13 Apr 2026 17:37 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நேற்று அதாவது 2026 ஏப்ரல் 12 ஆம் தேதி மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த போட்டியில், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி மும்பை இந்தியன்ஸ் அணியை 18 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. விராட் கோலி மைதானத்தில் இல்லாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டியின் போது ஆர்சிபி முன்னாள் கேப்டன் விராட் கோலி (Virat Kohli) காயமடைந்தார். இது ஐபிஎல் தொடரின் 20வது போட்டியாகும். மும்பை இந்தியன்ஸ் அணி இலக்கை நோக்கி விளையாடியபோது, விராட் கோலி முழுவதுமாக பீல்டிங்கில் களமிறங்கவில்லை. இதையடுத்து, ​​விராட்டிற்குப் பதிலாக ஜேக்கப் பெத்தேல் களமிறங்கினார். போட்டிக்குப் பிந்தைய பேட்டியின்போது இதுகுறித்து பேசிய ஆர்சிபி கேப்டன் ரஜத் படிதார், “எனக்கு இன்னும் தெரியவில்லை, ஆனால் அவர் நலமாக இருக்கிறார் என்று நினைக்கிறேன்” என்று கூறினார்.

ALSO READ: கால்வலியுடன் அரைசதம்.. ஆட்டமிழந்ததும் பறந்த ஹெல்மெட்.. கோலி கோபத்திற்கு காரணம் என்ன?

சைமன் டௌல் கருத்தால் விவாதம்:

நியூசிலாந்து வர்ணனையாளர் சைமன் டௌல், நேற்று அதாவது 2026 ஏப்ரல் 13ம் தேதி  நடைபெற்ற ஐபிஎல் 2026 தொடரின் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதல் இன்னிங்ஸின் நடுவிலேயே ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணி விராட் கோலியை ஓய்வுபெறச் செய்திருக்க வேண்டும் என்று கூறி ஒரு சிறிய சர்ச்சையை ஏற்படுத்தினார். ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் தொடக்க வீரராக விராட் கோலி களமி பவுண்டரிகளை அடிக்கத் திணறியபோது, ​​அவருக்குப் பதிலாக டிம் டேவிட் என்ற இயல்பான ஃபினிஷரை களமிறக்கியிருந்தால் அது RCB அணிக்கு நன்மை பயக்கும் என்று டௌல் கூறினார்.

விராட் கோலி தனது முதல் 11 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து மெதுவான தொடக்கத்தை கொடுத்தார்.  இருப்பினும், ஆட்டம் தொடரத் தொடர, அவருக்கு எதிராக மும்பை இந்தியன்ஸ் வகுத்த திட்டங்கள் இருந்த போதிலும் விராட் கோலி 37 பந்துகளில் 50 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவருக்கு கணுக்காலில் காயம் ஏற்பட்டதாக வர்ணனையாளர் சைமன் டௌல் தெரிவித்தார். போட்டிக்குப் பிறகு, கேப்டன் ரஜத் படிதார் மற்றும் ஆல்-ரவுண்டர் க்ருணால் பாண்டியா ஆகியோர் கோலி குணமடைவார் என்று உறுதியளித்தனர். காயத்தின் தீவிரம் குறித்து இருவருக்கும் உறுதியாகத் தெரியவில்லை.

போட்டிக்குப் பிந்தைய செய்தியாளர் சந்திப்பில் ஆல்-ரவுண்டர் க்ருணால், ”நான் இன்னும் பிசியோதெரபிஸ்ட்டிடம் பேசவில்லை. ஆனால், அவர் நலமாகிவிடுவார் என்று நினைக்கிறேன். கவலைப்பட ஒன்றுமில்லை” என்றார்.

ALSO READ: ஹைதராபாத்தில் மழைக்கு வாய்ப்பு..? நடைபெறுமா SRH vs RR போட்டி..?

சால்ட் மற்றும் விராட் ஜோடி 128 ரன்கள் குவிப்பு:

மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிராக ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக பில் சால்ட் மற்றும் விராட் கோலி தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்கினர். டாஸ் தோற்று பேட்டிங்கைத் தீர்மானித்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, அதிரடியான தொடக்கத்தைப் பெற்றது. விராட் கோலி, பில் சால்ட்டுடன் இணைந்து 120 ரன்கள் தொடக்கக் கூட்டணியில் முக்கியப் பங்காற்றியதுடன், மறுமுனையிலும் நிலைத்து நின்று ஆடினார். சால்ட் 36 பந்துகளில் 6 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகள் உட்பட 78 ரன்கள் எடுத்தார். இதற்கிடையில், விராட் கோலி 38 பந்துகளில் 50 ரன்கள் எடுத்தார். 15வது ஓவரில் ஹர்திக் பாண்டியா பந்துவீச்சில் விராட் ஆட்டமிழந்தார்.

விராட் கோலி தனது காயத்திலிருந்து குணமடைய சில நாட்கள் அவகாசம் உள்ளது. ஆர்சிபியின் அடுத்த போட்டி, ஏப்ரல் 15 ஆம் தேதி அவர்களது சொந்த மைதானத்தில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிக்கு எதிராக நடைபெறும்.

Follow Us