AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: ஐபிஎல் 2026ல் ஆர்சிபி டிக்கெட்டின் விலை ரூ. 15,000? ப்ளாக் மார்க்கெட்டில் கல்லா கட்டியதால் பரபரப்பு!

IPL 2026 RCB Tickets Black Market: பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்திற்குள் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி உணவகத்தில் பணிபுரியும் சந்திரசேகரை போலீசார் கைது செய்து, சுமார் 100 போட்டி டிக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, சந்திரசேகர் என்பவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகளை, உண்மையான விலையை விட கணிசமாக அதிகமான விலையான 15,000 முதல் 19,000 ரூபாய் வரை விற்று வந்தார்.

IPL 2026: ஐபிஎல் 2026ல் ஆர்சிபி டிக்கெட்டின் விலை ரூ. 15,000? ப்ளாக் மார்க்கெட்டில் கல்லா கட்டியதால் பரபரப்பு!
பெங்களூரு - லக்னோ
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 18 Apr 2026 17:28 PM IST

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) நடைபெற்ற போட்டியானது கடந்த 2026 ஏப்ரல் 15ம் தேதி பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் நடைபெற்றது. இந்த போட்டிக்கான டிக்கெட்டுகளை ப்ளாக் மார்க்கெட்களில் விற்ற ஒரு பரபரப்பான சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அதாவது, கிடைத்த தகவலின்படி ஒரு டிக்கெட்டின் விலை ரூபாய் 15,000 முதல் 19,000 ரூபாய் வரை விற்கப்பட்டதாகக் கூறப்படுகிறது. பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்தில் அமைந்துள்ள ஒரு சிற்றுண்டிச்சாலையிலிருந்து இந்தக் கள்ளச்சந்தை நடந்ததாக கூறப்படுகிறது. அதன்படி, பெங்களூரு மற்றும் லக்னோ அணிகளுக்கு இடையிலான போட்டியில் டிக்கெட் எப்படி விற்பனையானது என்பதை பற்றி முழுவதுமாக தெரிந்து கொள்வோம்.

ALSO READ: முன்னேறும் குஜராத் அணி.. சிஎஸ்கே, ஆர்சிபி நிலை என்ன? ஐபிஎல் புள்ளி பட்டியல்!

பெங்களூருவில் உள்ள எம்.சின்னசாமி ஸ்டேடியத்திற்குள் உள்ள ஸ்ரீ லக்ஷ்மி உணவகத்தில் பணிபுரியும் சந்திரசேகரை போலீசார் கைது செய்து, சுமார் 100 போட்டி டிக்கெட்டுகளைப் பறிமுதல் செய்தனர். போலீசாரின் கூற்றுப்படி, சந்திரசேகர் என்பவர் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டிக்கான டிக்கெட்டுகளை, உண்மையான விலையை விட கணிசமாக அதிகமான விலையான 15,000 முதல் 19,000 ரூபாய் வரை விற்று வந்தார்.

குற்றம் சாட்டப்பட்டவர் என்ன கூறினார்?

விசாரணையின் போது, ​​கர்நாடக மாநில கிரிக்கெட் சங்க (KSCA) உறுப்பினர் கணேஷ் பரிக்ஷித் இந்த டிக்கெட்டுகளை தனக்கு வழங்கியதாகவும், லாபம் ஈட்டுவதற்காக அவற்றை அதிக விலைக்கு விற்குமாறு தன்னிடம் கூறப்பட்டதாகவும் குற்றம் சாட்டப்பட்டவர் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது. போட்டிக்கான டிக்கெட்டுகளை விநியோகித்ததாகக் கூறப்படும் கணேஷ் பரிக்ஷித் தற்போது தலைமறைவாக உள்ளதால், காவல்துறையினர் அவரைத் தேடி வருகின்றனர். சட்டவிரோதமாக போட்டிக்கான டிக்கெட்டுகளை விற்பனை செய்ததில் தொடர்பு இருப்பதாகக் கூறப்படும் பல தனியார் நிறுவனங்களின் நிர்வாக இயக்குநர்கள் மீது மத்திய குற்றப்பிரிவு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்துள்ளது.

அடுத்தடுத்து சர்ச்சையில் சிக்கும் கர்நாடகா கிரிக்கெட்:

ஐபிஎல் டிக்கெட் விநியோகம் தொடர்பாக கர்நாடகாவில் ஏற்கனவே சர்ச்சை நிலவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. எம்.சின்னசாமி மைதானத்தில் நடைபெறவுள்ள போட்டிகளுக்கு அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களுக்கும் தலா 3 டிக்கெட்டுகள் வழங்கப்படும் என துணை முதலமைச்சர் டி.கே.சிவகுமார் அறிவித்தார். இந்த முடிவு கணிசமான கேள்விகளை எழுப்பியுள்ளது. இது பொது மக்கள் டிக்கெட் பெறுவதை மேலும் கடினமாக்கும் என்று எதிர்க்கட்சிகளும் பல சட்டமன்ற உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.

ALSO READ: டெல்லிக்கு எதிராக RCB வீரர்கள் பச்சை நிற ஜெர்சி.. பெங்களூரு நிர்வாகம் இவ்வாறு செய்தது ஏன்?

அபார ஆட்டத்தை வெளிப்படுத்தும் ஆர்சிபி:

ஐபிஎல் 2026 சீசனில் ஆர்சிபி அணி மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. ஆர்சிபி அணி இதுவரை 5 போட்டிகளில் விளையாடி, 4ல் வெற்றி பெற்று, ஒன்றில் மட்டுமே தோல்வியடைந்துள்ளது. சன்ரைசர்ஸ் ஹைதராபாத், சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் மற்றும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் ஆகிய அணிகளுக்கு எதிரான போட்டிகளில் 4ல் அந்த அணி வெற்றி பெற்றுள்ளது. ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக மட்டுமே அது தோல்வியடைந்தது.

Follow Us