AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

GT vs KKR : சுப்மன் கில் அதிரடி அரை சதம் – கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

IPL 2026 : டாஸ் வென்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 180 ரன்கள் எடுத்தது. 181 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை சுப்மன் கில்லின் அசத்தல் அரை சதத்தால் எளிதாக எட்டியது.

GT vs KKR : சுப்மன் கில் அதிரடி அரை சதம் – கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி
கேமரூன் கிரீன் - சுப்மன் கில்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Apr 2026 23:24 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் 25வது லீக் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் குஜராத் டைட்டன்ஸ் அணியும் மோதின. இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 4 தோல்வியடைந்த கொல்கத்தா அணியும், 4 போட்டிகளில் 2ல் வெற்றி பெற்ற குஜராத் அணியும் மோதுவதால் ஆட்டம் மிகுந்த பரபரப்பாக காணப்பட்டது. காரணம் 2 அணிகளும் கட்டாய வெற்றியை நோக்கி களமிறங்கின. அந்த வகையில் இந்த போட்டியில் டாஸ் வென்ற கொல்கத்தா அணி முதலில் பேட்டிங் தேர்வு செய்தது. அந்த வகையில் முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 32 ரன்களுக்குள் 3 முக்கிய விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. அந்த சூழலில் களமிறங்கிய கேமரூன் கிரீன், பொறுப்புடன் விளையாடி அணியை மீட்டெடுத்தார்.

கொல்கத்தாவை வீழ்த்தி குஜராத் அபார வெற்றி

அவர் 55 பந்துகளில் 79 ரன்கள் குவித்தார். இதில் 7 பவுண்டரிகள் மற்றும் 4 சிக்ஸர்கள் அடங்கும். இந்த சீசனில் இதுவரை அவர் விளையாடிய சிறந்த இன்னிங்ஸாக இது பார்க்கப்படுகிறது. இந்த நிலையில் 13வது ஓவரில் அசோக் சர்மா வீசிய பந்தை கிரீன் சிக்சருக்கு பறக்க விட்டார். அந்த பந்து நேராக மைதானத்தின் பக்கத்தில் காட்சிக்காக நிறுத்தப்பட்டிருந்த டாடா சியரா காரின் மேல் விழுந்தது. காரின் மேற்பகுதியில் பந்து விழுந்ததன் காரணமாக அந்த இடத்தில் சிறிய பள்ளம் ஏற்பட்டிருந்தது. அரிதாக நடக்கும் இந்த சம்பவம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்து.

இதையும் படிக்க : தட்டித்தூக்கிய பஞ்சாப் அணி.. திணறும் முன்னாள் சாம்பியன்ஸ்.. ஐபிஎல் புள்ளி அட்டவணை!

இந்த நிலையில் 15வது ஓவர் வரை 148 ரன்களுடன் வலுவாக இருந்த கொல்கத்தா அணி, கடைசி 5 ஓவர்களில் வெறும் 32 ரன்கள் மட்டுமே எடுத்தது. மீதமிருந்த 6 விக்கெட்டுகளையும் இழந்ததால், அணி 180 ரன்களிலேயே முடங்கியது. கடைசிவரை களத்தில் இருந்த கேமரூன் கிரீன் அதிக பந்துகளை எதிர்கொள்ள முடியாமல் போனது அணிக்கு பின்னடைவாக அமைந்தது.

இதையும் படிக்க : IPL 2026: பிளேஆஃப்களுக்கு தகுதிபெற எத்தனை புள்ளிகள் தேவை..? ஆர்சிபி தகுதிபெற்றதா?

சுப்மன் கில் அதிரடி அரை சதம்

இதனையடுத்து 181 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய குஜராத் அணியின் துவக்க வீரர்கள்  சாய் சுதர்சன் 16 பந்துகளில் 2 சிக்சர் 1 பவுண்டரி என 22 ரன்கள் எடுத்து சுனில் நரேன் பந்தில் அவுட்டானார். அவரைத் தொடர்ந்து ஜோஸ் பட்லரும் வருண் சக்தரவர்த்தி பந்தில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். மற்றொரு பக்கம் ஒற்றை ஆளாக போராடிய குஜராத் கேப்டன் அணியை சரிவிலிருந்து மீட்டார்.  அதிரடியாக ஆடிய அவர் அரை சதம் கடந்தார். அவர் விக்கெட்டை எடுப்பது கொல்கத்தா அணிக்கு சவாலாக இருந்தது.

இந்த நிலையில் 50 பந்துகளில் 86 ரன்கள் அடித்திருந்த போது வைபவர் அரோரா பந்தில் கேமரூன் கிரீனிடம் கேட்ச் கொடுத்தார். அவர் விக்கெட் போனதும் கடைசி கட்டத்தில கொல்கத்தா தடுமாறியது.  இதனையடுத்து கிளென் பிலிப்ஸ் மற்றும் தெவாட்டியா இணைந்து நிதானமாக ஆடினர். கடைசி கட்டத்தில் 5 பந்துகளில் 4 ரன்கள் எடுக்க வேண்டும் என்ற நிலையில் கிளென் பிளிப்ஸ் தனது விக்கெட்டை பறிகொடுக்க ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இதனையடுத்து கடைசியில் ராகுல் தெவாட்டியா மற்றும் ஷாருக்கான் இணைந்து அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்து சென்றனர்.

Follow Us