AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

CSKvsSRH: ஹைதராபாத்தில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி? – வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்

IPL 2026 : சென்னை சூப்பர் கிங்ஸ் அணி அடுத்தடுத்து 2 வெற்றிகளால் உற்சாகத்துடன் ஹைதராபாத் அணியை எதிர்கொள்ள தயாராகி வருகிறது. இந்த நிலையில் எம்.எஸ்.தோனி, மற்ற சிஎஸ்கே வீரர்களுடன் ஹைதரபாத் சென்றுள்ளதால் அவர் இந்த போட்டியில் விளையாடும் வாய்ப்பு அதிகரித்துள்ளது.

CSKvsSRH: ஹைதராபாத்தில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி? – வெளியான வீடியோவால் ரசிகர்கள் உற்சாகம்
Ms Dhoni
Karthikeyan S
Karthikeyan S | Published: 17 Apr 2026 15:01 PM IST

ஐபிஎல் 2026 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் ரசிகர்களுக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி செய்தி வெளியாகியுள்ளது. அணியின் முன்னாள் கேப்டனும் ரசிகர்களால் தல என அழைக்கப்படும் எம்.எஸ்.தோனி,  சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்க அதிக வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வருகிற ஏப்ரல் 18, 2026 அன்று ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் நடைபெறவிருக்கிறது.

ஹைதராபாத்தில் களமிறங்கும் எம்.எஸ்.தோனி?

கடந்த 2 போட்டிகளில் தொடர் வெற்றி பெற்ற சிஎஸ்கே அணி, இந்த போட்டியிலும் வெற்றி பெற வேண்டிய நம்பிக்கையில் களமிறங்குகிறது.  அதே போல சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணியும் இதுவரை விளையாடிய 5 போட்டிகளில் 2 வெற்றி பெற்றுள்ளது. ஆனால் அந்த அணி புள்ளி அடிப்படையில் 4வது இடத்தில் உள்ளது குறிப்பிடத்தக்கது. இதனையடுத்து 2 அணிகளுக்கும் இது வெற்றிபெற்றாக வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

இதையும் படிக்க : IPL 2026: பிளேஆஃப்களுக்கு தகுதிபெற எத்தனை புள்ளிகள் தேவை..? ஆர்சிபி தகுதிபெற்றதா?

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் ஸ்டார் பிளேயரான எம்.எஸ்.தோனி காலில் ஏற்பட்ட காயம் காரணமாக இதுவரை ஒரு போட்டியில் கூட விளையாடவில்லை. பயிற்சியில் ஈடுபட்டாலும் முழுமையான உடல் தகுதி பெறாததால் அவர் இதுவரை களமிறங்கவில்லை.  இந்த நிலையில் ஹைதராபாத் அணிகளுக்கு எதிரான போட்டியில் அவர் விளையாடுவாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்த நிலையில் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டியில் சென்னை அணி ஹைதராபாத் பயணம் மேற்கொண்டபோது தோனியும் அணி வீரர்களுடன் சென்றுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில், அவர் பிளேயிங் லெவனில் இடம்பெறுவாரா என்ற எதிர்பார்ப்பு தற்போது அதிகரித்துள்ளது.

சிஎஸ்கே வீரர்களுடன் எம்.எஸ்.தோனி

 

அவர் விளையாடவிட்டாலும் அவர் அணியுடன் இருப்பது சென்னை வீரர்களுக்கு கூடுதல் உற்சாகத்தை தரும் என கருதப்படுகிறது. தோனியின் அனுபவம், ஆலோசனகள் போன்றவை அணிக்கு கூடுதல் பலமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.  சென்னை சூப்பர் கிங்ஸ் அணி முதல் 3 போட்டிகளில் தோற்று அதிர்ச்சியளித்தாலும், அடுத்த 2 போட்டிகளில் வென்று இழந்த ரசிகர்களின் நம்பிக்கையை மீண்டும் பெற்றுள்ளது.

இதையும் படிக்க : Team India: பதவிக்காலத்தை நீட்டிக்க விருப்பம்.. கவுதம் கம்பீரின் அடுத்த இலக்கு இதுதான்!

மற்ற வீரர்கள் சிறப்பாக செயல்பட்டாலும், கேப்டன் ருத்துராஜ் கெய்க்வாட் எதிர்பார்த்த பங்களிப்பை வழங்கவில்லை. இந்த நிலையில் தோனி அணிக்கு திரும்பினால் அது அவருக்கு கூடுதல் பலமாக இருக்கும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

தோனி இந்த போட்டியில் விளையாடுவாரா என்பது இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ஆனால் அவர் அணியுடன் பயணம் செய்திருப்பது மட்டும் கூட சென்னை ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது. ஹைதராபாத் மைதானத்தில் மீண்டும் தல களம் காணும் தருணத்தை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow Us