AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

ராஜஸ்தான் மேனேஜர் போன் பயன்படுத்திய சர்ச்சை – பிசிசிஐ தடைவிதிக்காதது ஏன்?

IPL 2026 : ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வீரர்கள் அமரும் பகுதியில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேனேஜர் ரோமி பிந்தர் மொபைல் போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது . இந்த நிலையில் அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படாததற்கான காரணம் தற்போது வெளியாகியுள்ளது.

ராஜஸ்தான் மேனேஜர் போன் பயன்படுத்திய சர்ச்சை – பிசிசிஐ தடைவிதிக்காதது ஏன்?
வைபவ் சூர்யவன்ஷி - ரோமி பிந்தர்
Karthikeyan S
Karthikeyan S | Updated On: 17 Apr 2026 16:35 PM IST

ஐபிஎல் 2026 தொடரில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் மேனேஜர் ரோமி பிந்தர் தொடர்பான சர்ச்சை தற்போது சமூக வலைதலங்களில் பேசு பொருளாகியுள்ளது. அதன் படி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்கு எதிரான போட்டியில் வீரர்கள் அமரும் பகுதியில் அவர் மொபைல் போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது. இது பிசிசிஐ விதிகமுறைகளுக்கு எதிராக இருப்பதாக சர்ச்சை உருவாகியுள்ளது. பிசிசிஐ வெளியிட்ட அணி வீரர்கள் மற்றும் அணி நிர்வாகிகளுக்கான விதிமுறைபஏகளின் படி வீரர்கள் அமரும் பகுதியில் மொபைல் போன், டேப்லெட் போன்றவற்றை குறிப்பிட்ட சிலர் மட்டுமே பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

ராஜஸ்தான் மேனேஜர் போன் பயன்படுத்திய சர்ச்சை

குறிப்பாக ஐபிஎல் அணியின் மேனேஜர் மொபைல் போனை டிரெஸ்ஸிங் ரூமில் மட்டுமே பயன்படுத்த அனுமதி உண்டு. அதற்கு வெளியே அவர் பயன்படுத்த அனுமதியில்லை. இந்த நிலையில் ராஜஸ்தான் அணியின் மேனேஜர் ரோமி பிந்தர் வீரர்கள் அமரும் இடத்திலேயே போன் பயன்படுத்தியதாக கூறப்படுகிறது.

இதையும் படிக்க : IPL 2026: பிளேஆஃப்களுக்கு தகுதிபெற எத்தனை புள்ளிகள் தேவை..? ஆர்சிபி தகுதிபெற்றதா?

மேலும் அவருக்கு அருகில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷியும் அந்த போனின் ஸ்கீரீனை பார்த்ததாக கூறப்படுகிறது. இதனால் இந்த விவகாரம் கடந்த சில நாட்களாக பேசுபொருளாகியுள்ளது. இந்த நிலையில் பிசிசிஐ அவருக்கு கடுமையான தண்டனைகள் வழங்க வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.   இருப்பினும் அவரது உடல் நிலையைக் கருத்தில் கொண்டு மென்மையான அணுகுமுறையை மேற்கொள்ளலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும் அவருக்கு அதிகபட்சமாக எச்சரிக்கை அல்து அபராதம் மட்டும் விதிக்கப்படாலம் என்றும் ஏற்கனவே அவருக்கு இந்த விவகாரம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்லதாகவும் கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் 48 மணி நேரத்திற்குள் விளக்கமளித்து அதற்கான மருத்துவ ஆவணங்களையும் சமர்பித்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிக்க : IPL 2026: RCB புள்ளிகள் பட்டியலில் முதலிடம்.. MI, KKR பரிதாபம்.. CSK முன்னேற்றமா?

ரேமி பிந்தர் கடுமையான நுரையீர் பிரச்னையால் பாதிக்கப்பட்டவர் என்றும் அதற்காக ஏற்கனவே ஒருவாரம் வரை வெண்டிலேட்டரில் சிகிச்சை பெற்றிருக்கிறார் என்றும் கூறப்படுகிறது. அவருக்கு இரு நுரையீரலும் செயலிழந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர் என்றும் தற்போது அவருக்கு ஆஸ்துமா பிரச்னைகளும் இருப்பதாக கூறப்படுகிறது. இதன் காரணமாகவே அவசர நிலே ஏற்பட்டால் பயன்படுத்துவதற்காக அவர் மொபைல் போனை வைத்திருந்ததாகவும் கூறப்படுகிறது.

இதனையடுத்து அவர் விதிகளை மீறியிருந்தாலும் அது மருத்துவ காரணங்களுக்காக என்பதால் பிசிசிஐ கடுமையான நடவடிக்கை எடுக்காது என்றும் அவரை எச்சரித்து மட்டும் அனுப்புவார்கள் என்றும் கூறப்படுகிறது. இந்த பிரச்னை கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் விவாதிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது.

 

 

Follow Us