AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IPL 2026: குவாலிஃபையர்-1ல் முதலிடம்.. ஆர்சிபி மீண்டும் ஐபிஎல் சாம்பியன் ஆகும்! ஏன் தெரியுமா?

Royal Challengers Bengaluru: ஆர்சிபி அணியின் இந்த வெற்றிக்குப் பிறகு, ஐபிஎல் 2018 முதல் தொடர்ந்து வரும் ஒரு சிறப்புப் போக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018 முதல், குவாலிஃபையர்-1-ஐ வென்ற அணியே சாம்பியன் ஆகியுள்ளது. குவாலிஃபையர்-1-ஐ வென்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் 2018, 2021 மற்றும் 2023-லும், மும்பை இந்தியன்ஸ் 2019 மற்றும் 2020-லும், குஜராத் டைட்டன்ஸ் 2022-லும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2024-லும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025-லும் சாம்பியன்களாகின.

IPL 2026: குவாலிஃபையர்-1ல் முதலிடம்.. ஆர்சிபி மீண்டும் ஐபிஎல் சாம்பியன் ஆகும்! ஏன் தெரியுமா?
ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: RCB/twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 27 May 2026 19:04 PM IST

ஐபிஎல் 2026 சீசனில் (IPL 2026) கிட்டத்தட்ட இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி, தொடர்ந்து இரண்டாவது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. கடந்த ஐபிஎல் 2025 சீசனில் பஞ்சாப் கிங்ஸ் அணியை வீழ்த்தி ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி (Royal Challengers Bengaluru) ஐபிஎல் வரலாற்றில் முதல் முறையாக சாம்பியன் பட்டத்தை வென்றது குறிப்பிடத்தக்கது. நேற்று அதாவது 2026 மே 26ம் தேதி தர்மசாலாவில் நடைபெற்ற தகுதிச்சுற்று-1 போட்டியில், முதலில் பேட் செய்த ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற பெரிய ஸ்கோரை பதிவு செய்தது. இலக்கைத் துரத்திய குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு நல்ல தொடக்கம் அமையவில்லை. சுப்மன் கில் மற்றும் சாய் சுதர்ஷன் போன்ற வலுவான பேட்டிங் வரிசை இருந்தபோதிலும், வெறும் 162 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. ஆர்சிபியின் பந்துவீச்சாளர்கள் ஆரம்பம் முதலே அழுத்தத்தைக் கொடுத்து, ஆட்டத்தை ஒருதலைப்பட்சமாக மாற்றினர்.

ALSO READ: பந்துவீச்சில் பயங்கரம்! குஜராத்தை வீழ்த்தி பைனலுக்கு சென்ற பெங்களூரு!

குவாலிஃபையர்-1-ஐ வென்ற அணியே சாம்பியன்:


ஆர்சிபி அணியின் இந்த வெற்றிக்குப் பிறகு, ஐபிஎல் 2018 முதல் தொடர்ந்து வரும் ஒரு சிறப்புப் போக்கு மீண்டும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 2018 முதல், குவாலிஃபையர்-1-ஐ வென்ற அணியே சாம்பியன் ஆகியுள்ளது. குவாலிஃபையர்-1-ஐ வென்ற பிறகு, சென்னை சூப்பர் கிங்ஸ் 2018, 2021 மற்றும் 2023-லும், மும்பை இந்தியன்ஸ் 2019 மற்றும் 2020-லும், குஜராத் டைட்டன்ஸ் 2022-லும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 2024-லும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு 2025-லும் சாம்பியன்களாகின. கடந்த 2025 சீசனிலும் குவாலிஃபையர்-1 போட்டியில் வெற்றி பெற்று ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு முதல் முறையாக கோப்பையை வென்றது. இப்போது அதே வரலாற்றை மீண்டும் நிகழ்த்த ஆர்சிபி அணிக்கு ஒரு வாய்ப்பு கிடைத்துள்ளது. விராட் கோலி உட்பட அணியின் அனுபவமிக்க வீரர்கள் தற்போது சிறப்பான ஃபார்மில் உள்ளனர்.

ALSO READ: மே மாதம் வாட்டி வதைக்கும் வெயில்..! செப்டம்பர் மாதத்தில் மாறுகிறதா ஐபிஎல்..? வெளியான தகவல்!

நடப்பு ஐபிஎல் 2026 சீசனிலும் ரஜத் படிதார் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு கோப்பையை வென்றால், சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிக்குப் பிறகு தொடர்ச்சியாக 2 ஐபிஎல் பட்டங்களை வென்ற 3வது அணியாக வரலாறு படைக்கும். இதன் அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியின் நம்பிக்கை தற்போது உச்சத்தில் உள்ளது, ரசிகர்களும் மீண்டும் கோப்பையை வெல்ல வேண்டும் என்று ஆர்சிபி ரசிகர்கள் காத்திருக்கின்றனர்.

Follow Us