AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

IND vs AFG: வீழ்ந்த ஆப்கானிஸ்தான்.. சாதித்த சுப்மன் படை.. இந்திய அணி மீது குவிந்த சாதனை..!

Indian Cricket Team Record: இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் சந்தித்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இந்திய அணி ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். முன்னதாக, 2018-ல் இந்தியா ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. அதேநேரத்தில், இது இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும்.

IND vs AFG: வீழ்ந்த ஆப்கானிஸ்தான்.. சாதித்த சுப்மன் படை.. இந்திய அணி மீது குவிந்த சாதனை..!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: BCCI/ Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 08 Jun 2026 17:26 PM IST

இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் (IND vs AFG) இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியின் 3வது நாளிலேயே இந்திய அணி ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது. இத்துடன், சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணி (Indian Cricket Team) தங்கள் பெயரில் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே ஒரேயொரு டெஸ்ட் போட்டி நடைபெற்றது. இப்போட்டி 3வது நாள் முடிவதற்குள் முடிவடைந்தது. இந்தியா வெற்றியைத் தன் வசப்படுத்தியது. இந்தப் போட்டியில், டாஸ் வென்ற இந்தியா முதலில் பேட்டிங் செய்யத் தீர்மானித்தது. இந்தியா 8 விக்கெட் இழப்பிற்கு 564 ரன்கள் எடுத்து இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது.

ALSO READ: ஆப்கானிஸ்தானுக்கு எதிராக அசத்தல்.. டெஸ்ட் வரலாற்றில் மிகப்பெரிய பதிவு செய்த இந்தியா!

இந்தியாவின் 564 ரன்கள் என்ற இலக்கை ஆப்கானிஸ்தானால் துரத்திப் பிடிக்க முடியவில்லை. முதல் இன்னிங்ஸ் 152 ரன்களில் முடிவடைந்தது. 412 ரன்கள் என்ற முன்னிலையில் இருந்த இந்திய அணி, ஆப்கானிஸ்தான் அணியை ஃபாலோ-ஆன் மூலம் மீண்டும் பேட்டிங் செய்ய அழைந்தது. மீண்டும் 3வது இன்னிங்ஸை தொடங்கிய ஆப்கானிஸ்தான் 112 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் அடிப்படையில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் போட்டியை வென்றது. இந்தியாவுக்கு எதிராக ஆப்கானிஸ்தான் குறைந்த ரன்களுக்கு ஆட்டமிழப்பது இது 3வது முறையாகும். முன்னதாக 2018-ல், இந்தியா அவர்களை 103 மற்றும் 109 ரன்களுக்கு ஆட்டமிழக்கச் செய்திருந்தது. தற்போது அவர்கள் இரண்டாவது இன்னிங்ஸில் 112 ரன்களுக்கு ஆட்டமிழந்துள்ளனர்.

மிகப்பெரிய தோல்வி மற்றும் வெற்றி:

இந்தியாவிற்கு எதிராக ஆப்கானிஸ்தான் சந்தித்த மிகப்பெரிய தோல்வி இதுவாகும். இந்திய அணி ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தனர். முன்னதாக, 2018-ல் இந்தியா ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்திருந்தது. அதேநேரத்தில், இது இந்திய அணி பெற்ற மிகப்பெரிய வெற்றியாகும். இந்தியா, ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. 2018-ல் ராஜ்கோட்டில் வெஸ்ட் இண்டீஸ் அணியை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 272 ரன்கள் வித்தியாசத்திலும், 2018-ல் பெங்களூரில் ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 262 ரன்கள் வித்தியாசத்திலும், 2007-ல் மிர்ப்பூரில் வங்கதேசத்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்திலும், 2017-ல் நாக்பூரில் இலங்கையை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 239 ரன்கள் வித்தியாசத்திலும் இந்திய அணி தோற்கடித்தது.

சாதனை:

ஒரு ஆசிய அணி பெற்ற 2வது மிகப்பெரிய வெற்றி இதுவாகும். இந்த பட்டியலில் பாகிஸ்தான் முதலிடத்தில் உள்ளது. 2002ம் ஆண்டு லாகூரில் நடந்த போட்டியில் பாகிஸ்தான், நியூசிலாந்தை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 324 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்தது. தற்போது இந்தியா, ஆப்கானிஸ்தானை ஒரு இன்னிங்ஸ் மற்றும் 300 ரன்கள் வித்தியாசத்தில் தோற்கடித்துள்ளது.

ALSO READ: முதல் ஓவரில் விக்கெட்.. வரலாறு படைத்த அறிமுக வீரர் மானவ் சுதார்..!

இந்திய மண்ணில் மிகப்பெரிய வெற்றி 1958-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்டது. ஈடன் கார்டன்ஸில், முதல் இன்னிங்ஸில் 614 ரன்கள் எடுத்த பிறகு வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது இன்னிங்ஸை டிக்ளேர் செய்தது. அதன்பிறகு, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 124 ரன்களுக்கும், இரண்டாவது இன்னிங்ஸில் 154 ரன்களுக்கும் ஆட்டமிழந்தது. இந்தப் போட்டியில் இந்தியா ஒரு இன்னிங்ஸ் மற்றும் 336 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

Follow Us