AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. ரோஹித்திடம் இருந்து கம்பீருக்கு பறந்த வேண்டுகோள்!

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு முன்னர், முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா பயிற்சியாளர் கௌதம் கம்பீரீடம் தனிப்பட்ட கோரிக்கை வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள் நிலையில் சமீபத்தில் பணிநீக்கம் செய்யப்பட்ட திலீப் மீண்டும் பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. ரோஹித்திடம் இருந்து கம்பீருக்கு பறந்த வேண்டுகோள்!
ரோகித் சர்மா - கௌதம் காம்பீர்
Petchi Avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 30 May 2025 11:34 AM IST

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான டெஸ்ட் தொடர் நடைபெற உள்ள நிலையில் சமீபத்தில் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தனிப்பட்ட முறையில் இந்திய அணியின் பயிற்சியாளர் கௌதம் கம்பீரிடம் கோரிக்கை ஒன்றை வைத்ததாக தகவல் வெளியாகியுள்ளது. கிரிக்கெட் உலகின் திருவிழாவாக கொண்டாடப்படும் ஐபிஎல் இறுதிக் கட்டத்தை நெருங்கியுள்ளது. இதனைத் தொடர்ந்து அனைத்து அணி வீரர்களும் சர்வதேச போட்டியில் கவனம் செலுத்த தொடங்கியுள்ளனர். அடுத்து இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் இந்திய கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் போட்டி 2025 ஜூன் 20ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில் சமீபத்தில் இந்த போட்டி தொடருக்கான இந்திய கிரிக்கெட் அணி அறிவிக்கப்பட்டது.

இளம் வீரர்கள் தலைமையில் அணி

முன்னதாக டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகிய இரு நட்சத்திர வீரர்களும் அடுத்தடுத்து ஓய்வு பெற்றதால் இங்கிலாந்து தொடருக்கு யாரை கேப்டனாக நியமிக்கலாம் என்ற இழுபறி நீடித்தது. இப்படியான நிலையில் இந்திய அணியின் இளம் வீரர் சுப்மன் கில் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் இந்த இந்திய அணி அடுத்த கட்டத்திற்கு தயாராகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில் ஆஸ்திரேலியா அணியுடனான டெஸ்ட் தொடரை இந்திய அணி இழந்ததற்கு பிசிசிஐ கடும் நடவடிக்கை எடுத்தது.

அதன் ஒரு பகுதியாக இந்திய அணியின் உதவி பயிற்சியாளராக இருந்த அபிஷேக் நாயரும்,பீல்டிங் பயிற்சியாளராக இருந்த திலீப் ஆகிய இருவரும் பணி நீக்கம் செய்யப்பட்டனர். ஆனால் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கான திட்டத்தில் பீல்டிங் பயிற்சியாளராக சரியான நபரை இன்னும் தேர்வு செய்யாத நிலையில் மீண்டும் திலீப்பை நியமிக்க பிசிசிஐ முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ரோஹித் சர்மாவின் தனிப்பட்ட கோரிக்கை

இது தொடர்பாக பிடிஐ நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது. அதில், வெளிநாட்டைச் சேர்ந்த ஒருவரை பீல்டிங் பயிற்சியாளராக நியமிக்க பிசிசிஐ விருப்பம் கொண்டதாகவும், ஆனால் சரியான நேரத்தில் அதை செயல்படுத்த முடியவில்லை எனவும் கூறப்பட்டுள்ளது. மேலும் திலிப்பை மீண்டும் நியமிப்பதற்கான யோசனையை முன்னாள் கேப்டன் ரோஹித் சர்மா தெரிவித்ததாகவும் கூறப்பட்டுள்ளது. அவரது பதவி காலத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்க ரோஹித் சர்மா தலைமை பயிற்சியாளரான கௌதம் கம்பீரிடம் கோரிக்கை விடுத்ததாக கூறப்படுகிறது.

திலீப் தனது பதவி காலத்தில் இந்திய அணியில் பல்வேறு நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். அதன்படி ஒவ்வொரு போட்டியும் முடிந்த பிறகு சிறப்பாக பில்டிங் செய்த நபருக்கு பதக்கங்கள் வழங்குவது அதனை புகழ்பெற்ற நபர்களைக் கொண்டு அணிவிக்க வைப்பது போன்ற செயல்பாடுகள் வீரர்களிடம் பாராட்டை பெற்றிருந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு முன்பாக நடைபெறும் பயிற்சி ஆட்டத்தில் கேப்டன் சுப்மன் கில் மற்றும் ரிசர்வ் பேட்ஸ்மேன் ஆக களமிறங்கும் சாய் சுதர்சன் ஆகியோர் பங்கேற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. இருவரும் ஐபிஎல் தொடரில் குஜராத் அணிக்காக விளையாடி வரும் நிலையில் அந்த அணி பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது. ஒருவேளை இறுதிப் போட்டிக்கு குஜராத் அணி சென்றால் ஜூன் 6-ம் தேதி தொடங்கும் பயிற்சி ஆட்டத்தில் இவர்கள் இருவரும் பங்கேற்காமல் போகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow Us