IPL 2025 Final: ஐபிஎல் இறுதிப்போட்டியில் கௌரவம்.. இந்திய இராணுவத்தினருக்கு அழைப்பு விடுத்த பிசிசிஐ!
Indian Armed Forces: ஐபிஎல் 2025 இறுதிப் போட்டி அகமடாபாத்தில் ஜூன் 3 அன்று நடைபெறுகிறது. பிசிசிஐ, 'ஆபரேஷன் சிந்தூர்' ஹீரோக்களான இந்திய ராணுவத்தினருக்கு நிறைவு விழாவை அர்ப்பணிக்கிறது. இந்திய ராணுவத்தின் தலைவர்கள் மற்றும் வீரர்கள் விழாவில் கலந்து கொள்வார்கள். இது இந்திய ராணுவத்தின் தியாகத்தையும் வீரத்தையும் கொண்டாடும் நிகழ்வாக அமையும்.

இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (BCCI) ஐபிஎல் 2025ன் நிறைவு விழாவில் இந்திய இராணுவத்தினரின் ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்க முடிவு செய்துள்ளது. ஐபிஎல் 2025 (IPL 2025) சீசனில் இறுதிப்போட்டியானது வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டிக்கு முன்னதாக நிறைவு விழா சுமார் 45 நிமிடங்கள் நடத்த பிசிசிஐ திட்டமிட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியின்போது இந்திய இராணுவத்தினரை கௌரவிக்கும் விதமாக ஆபரேஷன் சிந்தூரின் (Operation Sindoor) ஹீரோக்களை பிசிசிஐ அழைத்துள்ளது.
பிசிசிஐ அழைப்பு:
IPL 2025 CLOSING CEREMONY WILL BE DEDICATED TO INDIAN ARMED FORCES. 🇮🇳 pic.twitter.com/1mr9i1gEo9
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 26, 2025




இதுகுறித்து பிசிசிஐ செயலாளர் தேவ்ஜித் சைகியா வெளியிட்ட அறிக்கையில், “ ஆபரேஷன் சிந்தூரின் வெற்றியை கொண்டாட, அகமதாபாத்தில் நடைபெறும் ஐபிஎல் 2025 இறுதிப் போட்டிக்கு அனைத்து இந்திய ஆயுதப்படைத் தலைவர்கள், உயர் அதிகாரிகள் மற்றும் வீரர்களை நாங்கள் அழைத்துள்ளோம். ஆபரேஷன் சிந்தூரின் கீழ் இந்திய இராணுவத்தினரின் வீரம், துணிச்சல் மற்றும் தன்னலமற்ற சேவையை ஊக்கப்படுத்த முயற்சிக்கிறோம்.
நன்றி தெரிவிக்கும் விதமாக, நிறைவு விழாவை ஆயுதப் படைகளுக்கு அர்ப்பணிக்கவும், நமது ஹீரோக்களை கௌரவிக்கவும் முடிவு செய்துள்ளோம். கிரிக்கெட் ஒரு தேசிய அளவில் மிகப்பெரிய விளையாட்டாக உள்ளது. இதில், நமது நாட்டையும் அதன் இறையாண்மை, ஒருமைப்பாடு மற்றும் பாதுகாப்பையும் வெளிப்படுத்த விரும்புகிறோம்” என்றார்.
முப்படைகளின் தளபதிகள்:
– Chief of defence staff.
– Chief of Army staff.
– Chief of Navy staff.
– Chief of Air staff.IPL 2025 CLOSING CEREMONY DEDICATED TO OUR ARMED FORCES. 🇮🇳 pic.twitter.com/ezuYeFXbyD
— Mufaddal Vohra (@mufaddal_vohra) May 27, 2025
இந்திய இராணுவத்தில் ஜெனரல் உபேந்திர திவேதி ராணுவத் தலைவராகவும், அட்மிரல் தினேஷ் கே. திரிபாதி கடற்படைத் தலைவராகவும், விமானப்படைத் தளபதி அமர் பிரீத் சிங் விமானப்படைத் தலைவராக உள்ளார்.
கடந்த 2025 மே 27ம் தேதி ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் பயங்கரவாதிகள் சிலர், சுற்றுலா பயணிகள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் உள்ளூர்வாசி ஒருவர் உள்பட 26 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்பிறகு, 2025 மே 7ம் தேதி இந்தியா ஏவுகணை அம்ற்றும் ட்ரோன் தாக்குதல்கள் மூலம் பாகிஸ்தானிலும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் அழைக்கப்பட்டது. இந்த தாக்குதலில் சுமார் 100க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளனர்.
ஆபரேஷன் சிந்தூரை தொடர்ந்து பாகிஸ்தான் இந்திய பாதுகாப்பு நிறுவனங்கள் மற்றும் மதத் தலங்கள் மீது ஏவுகணை மற்றும் ட்ரோன் தாக்குதல்களை முயற்சித்தது. இவை அனைத்தையும் இந்தியா வான் பாதுகாப்பு படை முறியடித்தது.