Asian Athletics Championship 2025: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் பதக்க வேட்டை.. குல்வீர் சிங் தங்கம் வென்று அசத்தல்!
Gulveer Singh Wins GOLD Medal: ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா அசத்தலான ஆரம்பத்தைப் பெற்றுள்ளது. 10,000 மீட்டர் ஓட்டத்தில் குல்வீர் சிங் தங்கப் பதக்கம் வென்று தேசிய சாதனையை முறியடித்தார். 20 கிமீ நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியன் வெண்கலப் பதக்கம் வென்றார். கடந்த போட்டியை விட அதிக பதக்கங்களை வெல்லும் நோக்கில் இந்தியா 59 வீரர்களைக் கொண்ட அணியை அனுப்பியுள்ளது.

ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் (Asian Athletics Championship) இந்திய விளையாட்டு வீரர்கள் சிறப்பான தொடக்கத்தை கொடுத்து, முதல் நாளிலேயே பதக்க வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். அதன்படி, ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தேசிய சாதனையாளரான குல்வீர் சிங் (Gulveer singh) தங்க பதக்கம் வென்று அசத்தினார். இவருக்கு முன்பு, ஆசிய தடகள சாம்பியன்ஷிப் 2025ல் ஆண்களுக்கான 20 கிமீ நடைப் போட்டியில் செர்வின் செபாஸ்டியன் (Servin Sebastian) வெண்கலப் பதக்கம் வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா சிறப்பான தொடக்கத்தை பெற்றுள்ளது. கடந்த ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் இந்தியா வென்ற 27 பதக்கங்களை விட இந்த முறை அதிக பதக்கங்களை வெல்லும் நோக்கில் இந்தியா 59 பேர் கொண்ட அணியை அனுப்பியுள்ளது.
குல்வீர் சிங் அசத்தல்:
NEWS FLASH; 1st GOLD medal for India at Asian Athletics Championships 🔥
Gulveer Singh finished on top in 10,000m clocking 28:38.63. #AAC2025 pic.twitter.com/P91vwnJrH6
— India_AllSports (@India_AllSports) May 27, 2025




2023 ஆசிய விளையாட்டு போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற 26 வயதான குல்வீர், ஆசிய தடகள சாம்பியன்ஷிப்பில் 28 நிமிடங்கள் 38.63 வினாடிகளில் ஓடி தங்கப் பதக்கம் வென்றார். 2025ம் ஆண்டின் தொடக்கத்தில் குல்வீர் சிங், 27:00:22 வினாடிகள் ஓடி தேசிய சாதனை படைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரை தொடர்ந்து, ஜப்பானின் மெபுகி சுசுகி (28:43.84) வெள்ளிப் பதக்கத்தையும், பஹ்ரைனின் ஆல்பர்ட் கிபிச்சி ராப் (28:46.82) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
செர்வின் செபாஸ்டியன்:
Servin Sebastian wins the 20km Racewalk BRONZE🥉 medal with a new personal best time of 1:21:13.6s at the Asian Athletics Championships! 🔥🔥 pic.twitter.com/m5RpxweoqM
— The Bridge (@the_bridge_in) May 27, 2025
முன்னதாக, ஆண்டுகளுக்கான 20 கிமீ நடைப்பயணத்தில் செர்வின் செபாஸ்டியன் 1 மணிநேரம் 21 நிமிடங்கள் 13.60 வினாடிகள் (1:21:13.60) என்ற நேரத்தில் ஓடி வெண்கலப் பதக்கத்தை வென்றார் . சீனாவின் வாங் ஜாவோஜாவோ (1:20:36.90) தங்கம் மற்றும் ஜப்பானின் கென்டோ யோஷிகாவா (1:20:44.90) வெள்ளிப் பதக்கங்களை வென்றனர். இந்த போட்டியில் பங்கேற்ற மற்றொரு இந்தியரான அமித், 1:22:14.30 வினாடிகளில் 5வது இடத்தை பிடித்தார்.
2025 ஆண்டு பிப்ரவரியில் உத்தரகண்ட் தேசிய விளையாட்டுப் போட்டிகளில் தங்கம் வென்றபோது, இந்த ஆண்டு தொடக்கத்தில் செர்வின் செபாஸ்டியன் பதிவு செய்த 1:21:23 என்ற தனிப்பட்ட சிறந்த நேரத்தை விட இந்த முறை சிறப்பான ரெக்கார்டை பதிவு செய்தார்.
59 பேர் கொண்ட குழு:
ஆசிய தடகள சாம்பியன்ஷிப் கலந்து கொள்வதற்காக இந்தியா 59 பேர் கொண்ட குழுவை அனுப்பியுள்ளது. கடந்த முறை நடைபெற்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 27 பதக்கங்களை வென்றிருந்தது.