Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

IPL 2025: ஐபிஎல் 2025 லீக்கின் கடைசி போட்டி.. பெங்களூருடன் மோதும் லக்னோ.. யாருக்கு வெற்றி..?

Lucknow Super Giants vs Royal Challengers Bengaluru: ஐபிஎல் 2025 இன் 70வது மற்றும் இறுதிப் போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதுகின்றன. பெங்களூரு அணி குவாலிஃபையர் 1-க்கு முன்னேற இந்தப் போட்டியில் வெற்றி பெற வேண்டியது அவசியம். ஏகானா ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட், இரு அணிகளின் தலை-தலை மோதல் மற்றும் பிளேயிங் லெவன் விவரங்கள் இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ளன.

IPL 2025: ஐபிஎல் 2025 லீக்கின் கடைசி போட்டி.. பெங்களூருடன் மோதும் லக்னோ.. யாருக்கு வெற்றி..?
லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் Vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருImage Source: PTI
mukesh-kannan
Mukesh Kannan | Published: 27 May 2025 11:27 AM

ஐபிஎல் 2025 (IPL 2025) லீக் சுற்றில் இன்று அதாவது 2025 மே 27ம் தேதி கடைசி மற்றும் 70வது போட்டியில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் (Lucknow Super Giants) மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிகள் மோத இருக்கிறது. இந்த போட்டியானது இரவு 7.30 மணிக்கு லக்னோவில் உள்ள பாரத் ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாஸ் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. இந்த போட்டியை நடத்தும் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணி தோல்வியுற்றாலும் ஒன்றும் இல்லை. அதேநேரத்தில், குவாலிஃபையர் 1 சுற்று அடிப்படையில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூருக்கு இந்த போட்டி மிகவும் முக்கியமானது. பெங்களூரு அணி முதல் 2 இடங்களுக்குள் இருக்க இந்த போட்டியில் வெற்றி பெறுவது அவசியம். இந்த போட்டிக்கு முன் இரு அணிகளுக்கு இடையிலான ஹெட் டூ ஹெட், பிளேயிங் லெவன் மற்றும் பிட்ச் ரிப்போர்ட் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்துகொள்வோம்.

ஏகானா ஸ்டேடியத்தின் பிட்ச் ரிப்போர்ட்:

லக்னோவில் உள்ள பாரத ரத்னா அடல் பிஹாரி வாஜ்பாய் ஏகானா கிரிக்கெட் ஸ்டேடியத்தில் 9 பிட்ச்கள் உள்ளது. இவை அனைத்தும் கருப்பு மற்றும் சிவப்பு மண்ணால் உருவாக்கப்பட்டவை. இதன் காரணமாக, சில நேரங்களில் குறைந்த ஸ்கோரும், சில நேரங்களில் அதிக ஸ்கோரும் கொண்ட போட்டிகள் ஏற்படும். சிவப்பு மண் பிட்ச்சில் வேகப்பந்து வீச்சாளர்கள் அதிக பவுன்ஸ் மற்றும் வேகத்தை கொடுக்கும். இது சில நேரங்களில் பேட்ஸ்மேன்களுக்கு சாதகமாக அமையும். அதேசமயம், கருப்பு மணி பிட்ச்களில் பந்து சிறிது நின்று வரும் என்பதால் சுழற்பந்து வீச்சாளர்களுக்கு அதிக திருப்பத்தை கொடுக்கும்.

ஹெட் டூ ஹெட்:

ஐபிஎல் வரலாற்றில் லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இதுவரை 5 போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளன. இதில், பெங்களூரு அணி அதிகபட்சமாக 3 போட்டிகளிலும், லக்னோ அணி 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளது. இரு அணிகளும் கடைசியாக ஐபிஎல் 2024ல் நேருக்குநேர் மோதியது. இந்த போட்டியில் லக்னோ அணி 28 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றியை பதிவு செய்தது. இன்று இரு அணிகளுக்கும் இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கணிக்கப்பட்ட இரு அணிகளின் விவரம்:

லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ்:

ஐடன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ரிஷப் பண்ட் (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), அப்துல் சமத், ஆயுஷ் படோனி, ஹிம்மத் சிங், ஷாபாஸ் அகமது, ஆகாஷ் தீப், திக்வேஷ் சிங் ரதி, அவேஷ் கான், வில்லியம் ஓ’ரூர்க்.

இம்பேக்ட் வீரர்: மிட்செல் மார்ஷ்

ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு:

விராட் கோலி, பில் சால்ட், மயங்க் அகர்வால், ஜிதேஷ் சர்மா (கேப்டன் மற்றும் விக்கெட் கீப்பர்), ரொமாரியோ ஷெப்பர்ட், டிம் டேவிட், க்ருனால் பாண்டியா, புவனேஷ்வர் குமார், யாஷ் தயாள், லுங்கி என்கிடி, சுயாஷ் சர்மா.

இம்பேக்ட் வீரர்: ரஜத் படிதார்

 

டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
டார்க் சாக்லேட் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?...
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!
நியாபக மறதி பிரச்னையா? இந்த ஜப்பானிய பயிற்சிகளை டிரை பண்ணுங்க!...
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்
குழந்தைகளிடையே அதிகரிக்கும் டைப் 1 சர்க்கரை நோய்...
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்
தனுஷின் குபேரா படத்திற்கு வந்த முதல் விமர்சனம் - வைரலாகும் போஸ்ட்...
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்
சோளிங்கர் அருகே வீடு புகுந்து சிறுமி கொலை - பரபரப்பு சம்பவம்...
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!
பிக்பாஸ் தர்ஷன் நாயகனாக நடித்த சரண்டர் படத்தின் டீசர் இதோ!...
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?
தாய்ப்பால் கொடுக்கும் போது குல்கந்து சாப்பிடலாமா?...
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!
2025 ஆம் ஆண்டு பக்ரீத் பண்டிகை எப்போது? - தேதி அறிவிப்பு!...
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ
ஜூன் மாதம் ஓடிடியில் வெளியாகும் டூரிஸ்ட் ஃபேமிலி... அப்டேட் இதோ...
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்
அன்பு மன்னிப்பு கேட்காது - சர்ச்சைக்கு கமல் விளக்கம்...
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!
ரெட்ரோ படத்தின் புதிய ஓடிடி வெளியீட்டு தேதியை அறிவித்த படக்குழு!...