India’s Tour of England 2025: இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர்.. போட்டி எப்போது, எங்கு தொடங்கும்..? முழு விவரம்!
India vs England Test Series 2025: இந்திய கிரிக்கெட் அணி 2025 ஜூன் 20 முதல் ஆகஸ்ட் 4 வரை இங்கிலாந்தில் ஐந்து டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாட உள்ளது. சுப்மன் கில் கேப்டனாகவும், ரிஷப் பண்ட் துணை கேப்டனாகவும் நியமிக்கப்பட்டுள்ளனர். ஹெடிங்லி, எட்ஜ்பாஸ்டன், லார்ட்ஸ், ஓல்ட் டிராஃபோர்ட் மற்றும் ஓவல் ஆகிய மைதானங்களில் போட்டிகள் நடைபெறும். இந்திய நேரப்படி, போட்டிகள் பிற்பகல் 3:30 மணிக்குத் தொடங்கும். இந்தத் தொடர் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் மூன்றாவது சுற்றுக்கு முக்கியமானது.

ஐபிஎல் 2025 (IPL 2025) சீசன் வருகின்ற 2025 ஜூன் 3ம் தேதியுடன் முடிவடைகிறது. இதனை தொடர்ந்து, இந்திய வீரர்கள் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 போட்டிகள் (India vs England Test Series 2025) கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளது. இந்த 5 போட்டிகள் கொண்ட தொடரின் அட்டவணை நீண்ட காலத்திற்கு முன்பே வெளியிடப்பட்டது. இதற்கான, இந்திய டெஸ்ட் அணியும் சமீபத்தில் வெளியிடப்பட்டது. இந்திய டெஸ்ட் அணியின் புதிய கேப்டனாக சுப்மன் கில்லும் (Shubman Gill), துணை கேப்டனாக ரிஷப் பண்ட் நியமிக்கப்பட்டனர். இந்தநிலையில், இந்தியா – இங்கிலாந்து தொடரின் போட்டிகள் எந்த நேரத்தில் தொடங்கும் உள்ளிட்ட விவரங்களை இங்கே தெரிந்து கொள்வோம்.
இந்திய நேரப்படி போட்டி எப்போது தொடங்கும்..?
இந்தியாவுக்கும், இங்கிலாந்துக்கும் இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் தொடங்குகிறது. அதன்படி, முதல் போட்டி லீட்ஸின் ஹெடிங்லியில் நடைபெறுகிறது. இதற்கு முன்பு, இந்திய வீரர்கள் 2 நான்கு நாட்கள் போட்டிகள் கொண்ட பயிற்சி ஆட்டத்தில் விளையாடவுள்ளது.
இந்தியா – இங்கிலாந்து இடையிலான முதல் போட்டியானது இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. இதற்கு அரை மணிநேரத்திற்கு முன்பு டாஸ் போடப்பட இருக்கிறது. முதல் நாளில் டாஸ் போடப்பட்டாலும், மீதமுள்ள 4 நாட்களில் போட்டி நேரடியாக பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்கும். மழை பெய்யவில்லை என்றால், சரியாக 3.30 மணிக்கு தொடங்கும்.




முழு அட்டவணை:
5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் கடைசி போட்டி 2025 ஜூலை 31ம் தேதி முதல் தொடங்கி 2025 ஆகஸ்ட் 4ம் தேதி வரை நடைபெறும். இந்தியா – இங்கிலாந்து இடையிலான 5 டெஸ்ட் போட்டிகளும் ஒரே நேரத்தில் தொடங்குகிறது. மழை உள்ளிட்ட பிற காரணங்களால் பாதிக்கப்படாமல், நாள் முழுவதும் போட்டி சீராக நடந்தால், அன்றைய ஆட்டம் இரவு சுமார் 10:30-11:00 மணிக்கு முடிவடையும். உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப்பின் மூன்றாவது சுழற்சியின் முதல் தொடராக இது இருப்பதால் இந்தத் தொடர் இந்தியாவிற்கும் இங்கிலாந்துக்கும் முக்கியமானது.
- முதல் டெஸ்ட்: ஜூன் 20-24, ஹெடிங்லி (லீட்ஸ்)
- 2வது டெஸ்ட்: ஜூலை 2-6, எட்ஜ்பாஸ்டன் (பர்மிங்காம்)
- 3வது டெஸ்ட்: ஜூலை 10-14, லார்ட்ஸ் (லண்டன்)
- 4வது டெஸ்ட், ஜூலை 23-27, ஓல்ட் டிராஃபோர்ட் (மான்செஸ்டர்)
- 5வது டெஸ்ட்: ஜூலை 31 – ஆகஸ்ட் 4, ஓவல் (லண்டன்)
இங்கிலாந்து அணிக்கு எதிரான இந்திய டெஸ்ட் அணி:
சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரெல் (விக்கெட் கீப்பர்), ஷர்துல் தாக்கூர், வாஷிங்டன் சுந்தர், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.