IPL 2025 Eliminator: எலிமினேட்டரில் களமிறங்கும் மும்பை இந்தியன்ஸ்.. பிளே ஆஃப் சுற்றில் இதுவரை எப்படி?
Mumbai Indians: 2025 ஐபிஎல் சீசனில், ஹர்திக் பாண்டியா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் அணி எலிமினேட்டர் சுற்றுக்குத் தள்ளப்பட்டது. இதுவரை நான்கு முறை எலிமினேட்டரில் விளையாடிய மும்பை, இறுதிப் போட்டிக்கு முன்னேறியதில்லை. இந்த சீசனில் பிளே ஆஃப் வாய்ப்பு குறைவாக உள்ளது. எலிமினேட்டர் போட்டி மே 30 அன்று நடைபெற உள்ளது.

ஐபிஎல் சீசன் 2025 (IPL 2025) ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya) தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) அணிக்கு சிறப்பான தொடக்கம் கிடைக்கவில்லை. காயத்திற்கு பிறகு ஜஸ்பிரித் பும்ராவின் வருகை மும்பை அணிக்கு பலமாக அமைந்து, பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறும் அளவிற்கு வாய்ப்பை கொடுத்தது. பஞ்சாப் கிங்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்ததை தொடர்ந்து, மும்பை அணி எலிமினேட்டர் போட்டியில் விளையாட வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது. இந்தநிலையில், மும்பை இந்தியன்ஸ் அணி இதற்கு முன்பு நான்கு முறை எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடியுள்ளது. எலிமினேட்டர் போட்டிகளில் விளையாடிய அனைத்து சீசன்களிலும், மும்பை அணியால் இறுதிப் போட்டிக்கு வர முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
எலிமினேட்டர் போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் சாதனை:
ஐபிஎல் 2025 சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப்களுக்கு முன்னேறியுள்ளது. மும்பை இந்தியன்ஸ் அணி பிளேஆஃப் சுற்றுக்கு முன்னேறுவது இது 10வது முறையாகும். இதில், ரோஹித் சர்மா தலைமையிலான மும்பை அணி 5 சாம்பியன் பட்டத்தை வென்றது.
2013ம் ஆண்டு ரோஹித் சர்மா தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக கோப்பையை வென்றது. இதன் பிறகு, மும்பை அணி 2015, 2017, 2019 மற்றும் 2020ம் ஆண்டுகளில் ஐபிஎல்லில் சாம்பியன் பட்டத்தை வென்றது. இந்த 5 சீசன்களிலும் மும்பை அணி முதல் 2 இடங்களில் இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 2010ம் ஆண்டு சச்சின் டெண்டுல்கரின் தலைமையில் மும்பை இந்தியன்ஸ் அணி முதன்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறியது. அப்போது மும்பை அணி புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தில் இருந்தது. இருப்பினும், அந்த சீசனில் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் தோற்கடித்தது.




இந்த அனைத்து சீசன்களையும் தவிர, மும்பை அணி 2011, 2012, 2014 மற்றும் 2023 ஆம் ஆண்டுகளில் பிளேஆஃப்களுக்கு முன்னேறியது. அந்த சீசன்களில் புள்ளிகள் பட்டியலில் 3வது அல்லது 4வது இடத்தைப் பிடித்தது. இந்த எல்லா சீசன்களிலும், மும்பை அணி சாம்பியன் பட்டத்தையும் வெல்லவில்லை, இறுதிப் போட்டிக்கு முன்னேறவும் இல்லை.
எலிமினேட்டர் போட்டி எப்போது, எங்கு நடைபெறுகிறது..?
ஐபிஎல் 2025 சீசனின் எலிமினேட்டர் போட்டி 2025 மே 30ம் தேதி முல்லன்பூர் கிரிக்கெட் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. 2025 மே 27ம் தேதியான நேற்று லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் vs ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு போட்டியின் முடிவுக்குப் பிறகு மும்பை இந்தியன்ஸ் அணியுடன் எந்த அணியுடன் எலிமினேட்டர் சுற்றில் விளையாடும் என்பதற்காக காத்திருந்தது. அதன்படி, பெங்களூரு அணி வெற்றி பெற்றால் குஜராத் அணி எலிமினேட்டர் சுற்றில் மும்பை அணிக்கு எதிராக விளையாடவுள்ளது.
ஐபிஎல் 2025 பிளேஆஃப்களுக்கான மும்பை இந்தியன்ஸ் அணி:
பெவோன் ஜேக்கப்ஸ், ரோஹித் சர்மா, சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, சரித் அஸ்லங்கா, ஹர்திக் பாண்டியா (கேப்டன்), மிட்செல் சான்ட்னர், நமன் தீர், ரிச்சர்ட் க்ளீசன், ராபின் மிஞ்ச் (விக்கெட் கீப்பர்), ஜானி பேர்ஸ்டோவ் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணன் ஸ்ரீகெட்ஸெபர்ஜித் (விக்கெட் கீப்பர்), கிருஷ்ணன் ஸ்ரீகெட்ஸெபர்ஜித் அஸ்வனி குமார், தீபக் சாஹர், ஜஸ்பிரித் பும்ரா, கர்ண் ஷர்மா, லிசாட் வில்லியம்ஸ், முஜீப் உர் ரஹ்மான், ரகு ஷர்மா, ரீஸ் டாப்லி, சத்யநாராயண் ராஜு, டிரெண்ட் போல்ட், விக்னேஷ் புத்தூர்