AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

India vs England 1st Test 2025: மழையுடன் தொடங்குமா முதல் டெஸ்ட்..? இந்தியா – இங்கிலாந்து போட்டியின் வானிலை நிலவரம்!

Leeds Yorkshire Cricket Ground Pitch Report: இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான 5 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரின் முதல் போட்டி லீட்ஸில் உள்ள ஹெடிங்லி ஸ்டேடியத்தில் ஜூன் 20, 2025 அன்று நடைபெறுகிறது. வானிலை மழை இல்லாமல் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹெடிங்லி பிட்ச் பந்து வீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். முதல் இன்னிங்ஸ் பேட்டிங் சவாலானதாக இருக்கும்.

India vs England 1st Test 2025: மழையுடன் தொடங்குமா முதல் டெஸ்ட்..? இந்தியா – இங்கிலாந்து போட்டியின் வானிலை நிலவரம்!
லீட்ஸ் கிரிக்கெட் ஸ்டேடியம்Image Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 14:39 PM IST

இந்தியா மற்றும் இங்கிலாந்து அணிகளுக்கு (India vs England Test Series 2025) இடையிலான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் போட்டி 2025 ஜூன் 20ம் தேதியான நாளை லீட்ஸில் உள்ள ஹெடிங்லி ஸ்டேடியத்தில் இந்திய நேரப்படி பிற்பகல் 3.30 மணிக்கு தொடங்குகிறது. டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து விராட் கோலி (Virat Kohli) மற்றும் ரோஹித் சர்மா போன்ற முக்கிய வீரர்கள் ஓய்வு பெற்ற நிலையில், சுப்மன் கில் (Shubman Gill) தலைமையிலான இந்திய அணி இங்கிலாந்தை எதிர்கொள்கிறது. இந்தநிலையில், இந்த போட்டிக்கான பிட்ச் மற்றும் வானிலை எப்படி இருக்கும் என்பதை இங்கே தெரிந்துகொள்வோம்.

வானிலை எப்படி..?

இந்திய மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட் ரசிகர்களுக்கு ஒரு நல்ல செய்தி என்னவென்றால், முதல் டெஸ்ட் போட்டியின்போது மழைய பெய்ய வாய்ப்பில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலின்படி, லீட்ஸில் அதிகபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 15 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், மழை பெய்ய வாய்ப்பில்லை என்பதால், முழு போட்டியையும் ரசிகர்கள் எந்த தடையும் இன்றி பார்க்கலாம்.

பேட்ஸ்மேன்களுக்கு எச்சரிக்கை:

ஹெடிங்கில் பிட்ச் எப்போதும் பந்து வீச்சாளர்களுக்கு அதாவது வேகப்பந்து வீச்சாளர்களுக்கு ஏற்றதாகவே பார்க்கப்படும். முதல் நாளின் முதல் இன்னிங்ஸில் பேட்ஸ்மேன்கள் எதிரணி பந்துவீச்சாளர்கள் வீசும் வேகப்பந்தை எதிர்கொள்ள சிரமப்படுத்துவார்கள். இத்தகைய சூழ்நிலையில், முதல் சில ஓவர்கள் பேட்ஸ்மேன்களுக்கு சவாலாக இருக்கலாம், எனவே பேட்ஸ்மேன்கள் கொஞ்சம் பொறுமையுடன் விளையாட வேண்டியிருக்கும். இருப்பினும், முதல் இன்னிங்ஸில் பேட்டிங்கில் சிறப்பாக செயல்படும் அணியே, வெற்றி பெறுவதற்கான வாய்ப்ப்கள் அதிகம் என்று கூறப்படுகிறது.

லீட்ஸில் உள்ள ஹெடிங்லி ஸ்டேடியத்தில் இதுவரை 84 டெஸ்ட் போட்டிகள் நடந்துள்ளன. இதில், முதலில் பேட்டிங் செய்த அணி 29 முறையும், 2வது பேட்டிங் செய்த அணி 36 முறையும் வென்றுள்ளது. டாஸ் வென்ற பிறகு பெரும்பாலான அணிகள் முதலில் பந்து வீச விரும்புவதற்கான காரணம் இதுதான். முதலில் பேட்டிங் செய்த அணி, ரன் எடுக்க ஆரம்பத்தில் கஷ்டப்பட்டாலும், இரண்டாவது இன்னிங்ஸில் பேட்டிங் செய்வது கொஞ்சம் எளிதாகிறது. இதுபோன்ற சூழ்நிலையில், இங்கிலாந்து அணி டாஸில் வென்று முதலில் பேட்டிங் செய்யுமா அல்லது பந்து வீசுமா என்பதை பொறுந்திருந்து பார்க்க வேண்டும்.

இங்கிலாந்து விளையாடும் லெவன்:

பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜாக் க்ரௌலி, பென் டக்கெட், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக், ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டோங்கு மற்றும் ஷோயப் பஷீர்

இங்கிலாந்து டெஸ்ட் போட்டிகளுக்கான இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்/விக்கெட் கீப்பர்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா, ஆகாஷ் தீப், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்

Follow Us