Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

India’s England Tour 2025: இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் சாதனை எப்படி..? தொடர் வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருப்பு!

India's Test Cricket History in England: இந்திய அணியின் இங்கிலாந்து டெஸ்ட் கிரிக்கெட் வரலாறு, 1932 முதல் 2025 வரை பல சவால்கள் மற்றும் வெற்றிகளை உள்ளடக்கியது. சுப்மன் கில் மற்றும் கவுதம் கம்பீர் தலைமையிலான 2025 சுற்றுப்பயணம், 18 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி பெற முடியுமா என்பதைப் பார்ப்போம். இந்த கட்டுரை, இந்தியாவின் இங்கிலாந்து டெஸ்ட் சாதனைகள், உயர்ந்த ஸ்கோர்கள் மற்றும் விக்கெட் எடுத்தவர்கள் பற்றிய தகவல்களை விரிவாக விளக்குகிறது.

India’s England Tour 2025: இங்கிலாந்து மண்ணில் இந்தியாவின் சாதனை எப்படி..? தொடர் வெற்றிக்காக 18 ஆண்டுகள் காத்திருப்பு!
இந்திய கிரிக்கெட் அணிImage Source: Twitter
Mukesh Kannan
Mukesh Kannan | Updated On: 18 Jun 2025 14:51 PM

இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் இந்திய அணிக்கு (Indian Cricket Team) இங்கிலாந்து சுற்றுப்பயணம் எப்போதும் ஒரு சவால் நிறைந்ததாகவே இருக்கிறது. ஸ்விங் மற்றும் சீம் பந்துவீச்சுக்கு பெயர் பெற்ற இங்கிலாந்து ஸ்டேடியங்களில் இந்திய வீரர்கள் இதற்கு முன்பு கடுமையாக போராடியுள்ளனர். இந்த முறையும் இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் இந்திய பேட்ஸ்மேன்களை திணறடிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 1932ம் ஆண்டு முதல் டெஸ்ட் சுற்றுப்பயணத்திலிருந்து 2025 வரை, இந்தியா பல வரலாற்று தருணங்களை இங்கிலாந்து மண்ணில் சாதனைகளை படைத்துள்ளது. வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி முதல் இந்திய அணியின் மற்றொரு இங்கிலாந்து சுற்றுப்பயணம் (India vs England Test Series 2025) தொடங்கவுள்ளது. இதில், புதிய கேப்டன் சுப்மன் கில் மற்றும் தலைமை பயிற்சியாளர் கவுதம் கம்பீர் (Gautam Gambhir) 18 ஆண்டுகளில் நடக்காததை நடத்தி கட்டுமா என்பதை பார்ப்போம்.

18 ஆண்டுகளுக்கு முன் என்ன நடந்தது..?

ராகுல் டிராவிட் தலைமையில் கடந்த 2007ம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த கடைசி டெஸ்ட் தொடரை இந்தியா வென்றது. சுப்மன் கில் மற்றும் கவுதம் கம்பீர் ஆகியோர் தொடரை வென்று 18 ஆண்டுகளாக காத்திருப்பு முற்றுப்புள்ளி வைப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கடந்த 1932ம் ஆண்டு முதல் தற்போது வரை இங்கிலாந்தில் இந்திய அணியின் டெஸ்ட் சாதனையை தெரிந்துகொள்வோம்.

இங்கிலாந்தில் இந்தியாவின் டெஸ்ட் வரலாறு எப்படி?

இந்தியா தனது முதல் டெஸ்ட் போட்டியை இங்கிலாந்தில் ஜூன் 25, 1932 அன்று லார்ட்ஸில் விளையாடியது. அதன் பிறகு, இங்கி 67 டெஸ்ட் போட்டிகளில் இந்திய அணி விளையாடி 9 போட்டிகளில் வெற்றியையும், 38 போட்டிகளில் தோல்வியையும் சந்தித்துள்ளது. அதேநேரத்தில், இரு அணிகளுக்கும் இடையே 20 போட்டிகள் டிராவில் முடிந்தன. இதன்மூலம், இந்திய அணி இங்கிலாந்து மண்ணில் எவ்வளவு போராட்டங்களை எதிர்கொண்டுள்ளது என்பதை தெரிந்துகொள்ளலாம்.

இங்கிலாந்து மண்ணியில் இந்தியா இதுவரை 20 டெஸ்ட் தொடர்களில் விளையாடுயுள்ளது. இதில், இந்திய அணி 3 டெஸ்ட் தொடர்களை மட்டுமே வென்றுள்ளது. 1971ம் ஆண்டு அஜித் வடேகர் தலைமையில் முதல் டெஸ்ட் தொடரை 1-0 என்ற கணக்கில் வென்றது. அதன் பிறகு, 1986ம் ஆண்டு கபில் தேவ் தலைமையில் இங்கிலாந்தில் இரண்டாவது டெஸ்ட் தொடரை 2-0 என்ற கணக்கில் வென்றது. ராகுல் டிராவிட் தலைமையில் மூன்றாவது தொடரை 2007ம் ஆண்டு 1-0 என்ற கணக்கில் வென்றது. 3 தொடர்களை வென்றது மட்டுமல்லாமல், 2021 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடந்த டெஸ்ட் தொடரையும் இந்தியா 2-2 என்ற கணக்கில் சமன் செய்துள்ளது.

இங்கிலாந்து மண்ணில் அதிக ரன்கள் அடித்த இந்திய பேட்ஸ்மேன்கள்:

இங்கிலாந்து மண்ணில் அதிக டெஸ்ட் ரன்கள் எடுத்த இந்திய பேட்ஸ்மேன்கல் பட்டியலில் சச்சின் டெண்டுல்கரின் பெயர் முதலிடத்தில் உள்ளது. சச்சின் டெண்டுல்கர் இங்கிலாந்தில் 23 டெஸ்ட் போட்டிகளில் 51 சராசரியில் 4 சதங்களுடன் 1571 ரன்கள் எடுத்துள்ளார். இங்கிலாந்து மண்ணில் இந்திய வீரர் அதிகபட்சமாக அடித்த தனிநபர் ஸ்கோரை பற்றி பார்க்கும்போது, முன்னாள் இந்திய கேப்டன் சவுரவ் கங்குலி 193 ரன்கள் அடித்துள்ளார்.

இங்கிலாந்து மண்ணில் அதிக விக்கெட் எடுத்த இந்திய பந்துவீச்சாளர்:

இங்கிலாந்தில் இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்கள் பட்டியலில் கபில் தேவ் முதலிடத்தில் உள்ளார். கபில் தேவ் இங்கிலாந்து மண்ணில் 21 டெஸ்ட் போட்டிகளில் 31.05 சராசரியுடன் 85 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். இங்கிலாந்தில் ஒரு இன்னிங்ஸில் சிறப்பாக பந்துவீசிய இந்திய பந்துவீச்சாளர் இஷாந்த் சர்மா ஆவார். இவர் கடந்த 2014ம் ஆண்டு லார்ட்ஸில் 74 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை வீழ்த்தினார். அதேநேரத்தில், இங்கிலாந்தில் அதிக முறை அதாவது 4 முறை 5 விக்கெட்டுகளை வீழ்த்திய பந்துவீச்சாளர்கள் கபில் தேவ் மற்றும் அனில் கும்ப்ளே ஆவார்கள்.