AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

England Playing XI: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. வலுவான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து!

IND vs ENG 1st Test: இங்கிலாந்து அணி, 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான தனது 11 பேர் அணியை அறிவித்துள்ளது. கிறிஸ் வோக்ஸ் 2024 டிசம்பர் பின்னர் முதன்முறையாக டெஸ்ட் போட்டியில் விளையாட உள்ளார். பிரைடன் கார்ஸ் தனது சொந்த மண்ணில் முதல் டெஸ்ட் போட்டியை விளையாட உள்ளார். ஜாக் க்ரௌலி மற்றும் பென் டக்கெட் தொடக்க வீரர்களாகவும், ஓலி போப், ஜோ ரூட், ஹாரி புரூக் ஆகியோரும் இடம்பெற்றுள்ளனர்.

England Playing XI: இந்தியாவிற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டி.. வலுவான பிளேயிங் லெவனை அறிவித்த இங்கிலாந்து!
இங்கிலாந்து அணிImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 08:10 AM IST

2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் தொடங்கும் இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து (IND vs ENG Test Series 2025) தனது பிளேயிங் லெவனை அறிவித்தது. இங்கிலாந்து அணியின் நட்சத்திர ஆல்ரவுண்டர் கிறிஸ் வோக்ஸ் (Chris Woakes), 2024 டிசம்பர் மாதத்திற்கு பிறகு முதல் முறையாக டெஸ்ட் போட்டிகளுக்கு திரும்புகிறார். அதேநேரத்தில் வேகப்பந்து வீச்சாளர் பிரைடன் கார்ஸ் தனது சொந்த மண்ணில் தனது முதல் டெஸ்ட் போட்டியை விளையாட இருக்கிறார். கார்ஸ் இதற்கு முன்பு, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆனால், இது சொந்த மண்ணில் அவரது முதல் டெஸ்ட் போட்டியாகும்.

முதல் போட்டியில் இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும்..?

இந்தியாவுக்கு எதிரான லீட்ஸ் டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணியின் தொடக்க வீரர்களாக ஜாக் க்ரௌலி மற்றும் பென் டக்கெட் களமிறங்குவார்கள். இருவரும் ஆக்ரோஷமாக, அதேநேரத்தில் வேகமாகவும் இங்கிலாந்து அணிக்காக அதிவேகமாக ரன்களை திரட்டுவார்கள். 3வது இடத்தில் ஓலி போப்பும், 4வது இடத்தில் ஜோ ரூட் களமிறங்குவார்கள். இந்தியாவுக்கு எதிராக 5வது இடத்தில் ஹாரி புரூக்கும் களமிறங்கவுள்ளது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட ஜாக்கல் பெத்தேல் முதல் டெஸ்ட் போட்டியில் தேர்வு செய்யப்படவில்லை.

3 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களம்:

இந்தியாவுக்கு எதிரான முதல் டெஸ்ட்க்கான இக்கிலாந்து அணியின் விளையாடும் 11 பேரில் 3 வேகப்பந்து வீச்சாளர்கள் இடம்பெற்றுள்ளனர். அதன்படி கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ் மற்றும் ஜோஷ் டோங் ஆகிய 3 வேகப்பந்து வீச்சாளர்கள் உள்ளனர். தேவைப்பட்டால் இங்கிலாந்து அணியின் கேப்டன் பென் ஸ்டோக்ஸ் 4வது வேகப்பந்து வீச்சாளராக பந்து வீச முடியும். இங்கிலாந்து அணியின் விளையாடும் பிளேயிங் லெவனில் ஒரே சுழற்பந்து வீச்சாளராக ஷோயப் பஷீருக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முதல் டெஸ்ட் போட்டிக்கான இங்கிலாந்து அணியின் பிளேயிங் லெவன்:

ஜாக் கிராலி, பென் டக்கெட், ஓலி போப், ஹாரி புரூக், பென் ஸ்டோக்ஸ் (கேப்டன்), ஜேமி ஸ்மித் (விக்கெட் கீப்பர்), கிறிஸ் வோக்ஸ், பிரைடன் கார்ஸ், ஜோஷ் டங், ஷோயப் பஷீர்

இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி:

சுப்மன் கில் (கேப்டன்), ரிஷப் பண்ட் (துணை கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கே.எல். ராகுல், சாய் சுதர்ஷன், அபிமன்யு ஈஸ்வரன், கருண் நாயர், நிதிஷ் குமார் ரெட்டி, ரவீந்திர ஜடேஜா, துருவ் ஜூரல், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாகூர், ஜஸ்பிரீத் பும்ரா, பிரசித் கிருஷ்ணா, முகமது சிராஜ், அர்ஷ்தீப் சிங், குல்தீப் யாதவ்.

Follow Us