2026 Women’s T20 World Cup: இந்தியாவும், பாகிஸ்தானும் மோதுவது உறுதி! 2026 மகளிர் உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியீடு..!
India vs Pakistan Match Date: 2026 பெண்கள் டி20 உலகக் கோப்பைக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது. இந்திய அணி 2026 ஜூன் 14 அன்று பாகிஸ்தானுடன் முதல் போட்டியில் களமிறங்குகிறது. மொத்தம் ஐந்து போட்டிகளில் இந்தியா விளையாட உள்ளது. இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா ஆகிய அணிகள் குரூப் ஏ-வில் உள்ளன. போட்டிகள் 2026 ஜூன் 12 அன்று தொடங்கி, 6 மைதானங்களில் 33 போட்டிகள் நடைபெறும்.

ஐசிசி நடத்தும் போட்டிகளில் இந்தியா – பாகிஸ்தான் (India – Pakistan) இடையே நடைபெறும் பதட்டம் காரணமாக, இந்திய அணிக்கும் பாகிஸ்தான் அணிக்கும் போட்டி நடைபெறுமா என்ற கேள்வி எழுந்து வருகிறது. இந்தநிலையில், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையிலான கிரிக்கெட் போட்டியை காண வாய்ப்பு அமைந்துள்ளது. இருப்பினும், இந்த போட்டி ஆண்கள் அணிகளுக்கு இடையே நடைபெறாது என்பது குறிப்பிடத்தக்கது. அதேநேரத்தில், பெண்கள் கிரிக்கெட் அணிகளுக்கு இடையே, அதுவும் டி20 உலகக் கோப்பையில் இந்தியா – பாகிஸ்தான் அணிகள் மோதவுள்ளது. 2026 டி20 உலகக் கோப்பை (2026 Women’s T20 World Cup) போட்டியை நடத்தும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் அதற்கான அட்டவணையை வெளியிட்டுள்ளது. அதன்படி, உலகக் கோப்பை போட்டியின் முதல் போட்டி இங்கிலாந்து மற்றும் இலங்கை இடையே நடைபெறுகிறது.இதில், இந்திய அணி மொத்தம் 5 போட்டிகளில் விளையாட இருக்கிறது.
இந்தியா-பாகிஸ்தான் போட்டி எப்போது நடைபெறுகிறது..?
2026 மகளிர் டி20 உலகக் கோப்பை போட்டி 2026ம் ஆண்டு ஜூன் 12ம் தேதி தொடங்குகிறது. டி20 உலகக் கோப்பையில் மொத்தம் 12 அணிகள் பங்கேற்று, மொத்தம் 33 போட்டிகள் நடைபெறவுள்ளது. இந்த 12 அணிகளும் தலா 6 அணிகள் கொண்ட இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்படும். இந்திய அணியின் முதல் போட்டி வருகின்ற 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது.
ஒவ்வொரு குழுவிலும் முதல் 2 இடங்களைப் பிடிக்கும் அணி அரையிறுதிக்குள் நுழையும். இந்தியா, பாகிஸ்தான், தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா மற்றும் இரண்டு தகுதி பெறும் அணிகள் குரூப்-ஏ-வில் இடம் பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ், நியூசிலாந்து, இலங்கை மற்றும் தகுதி போட்டியின் அடிப்படையில் இரண்டு தகுதி பெறும் அணிகள் குரூப்-பி-யில் இடம் பெறும். 2026 உலகக் கோப்பை போட்டிக்காக மொத்தம் 6 மைதானங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன. அதன்படி லார்ட்ஸ், தி ஓவல், எட்ஜ்பாஸ்டன், ஓல்ட் டிராஃபோர்டு கிரிக்கெட் ஸ்டேடியம், பிரிஸ்டல் கவுண்டி ஸ்டேடியம் மற்றும் ஹாம்ப்ஷயர் பால் ஸ்டேடியங்களில் நடைபெறுகிறது. இந்த போட்டிகள் அனைத்தும் இந்திய நேரப்படி பிற்பகல் 3 மணி, இரவு 7 மணி மற்றும் இரவு 11 மணிக்கு தொடங்கும்.
டி20 உலகக் கோப்பையில் இந்திய அணியின் அட்டவணை:
Mark your calendars 🗓
The fixtures for the ICC Women’s T20 World Cup 2026 are out 😍
Full details ➡ https://t.co/X2BqQphwSC pic.twitter.com/gqkxaMudEP
— ICC (@ICC) June 18, 2025
2026 மகளிர் டி20 உலகக் கோப்பையில் இந்தியாவின் முதல் போட்டி 2026 ஜூன் 14ம் தேதி பாகிஸ்தானை எதிர்கொள்ளும். அதனை தொடர்ந்து, 2026 ஜூன் 17ம் தேதி குரூப்-ஏ-வில் தகுதி பெறும் அணியையும், 2026 ஜூன் 21ம் தேதி தென்னாப்பிரிக்காவையும், 2026 ஜூன் 25ம் தேதி இரண்டாவது தகுதிச் சுற்று அணியையும் இந்திய அணி எதிர்கொள்கிறது. இந்திய அணியின் கடைசி குரூப் போட்டி 2026 ஜூன் 28ம் தேதி ஆஸ்திரேலியாவை எதிர்கொள்கிறது.