AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

Jasprir Bumrah vs Joe Root: 24 போட்டிகளில் 9 முறை அவுட்.. ஜஸ்பிரித் பும்ரா vs ஜோ ரூட்! யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்..?

India-England Test Series 2025: 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் தொடங்கும் இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட் தொடரில், பும்ரா மற்றும் ரூட் இடையேயான கடும் போட்டி எதிர்பார்க்கப்படுகிறது. இருவரும் தங்கள் அணிகளின் முக்கிய வீரர்கள். ரூட்டின் பேட்டிங் இந்திய அணிக்கு சவாலாக இருக்கும், அதேபோல் பும்ராவின் பந்துவீச்சு இங்கிலாந்து அணிக்கு அச்சுறுத்தலாக அமையும். இருவரும் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் மோதியுள்ளனர், பும்ரா ரூட்டை 9 முறை அவுட் செய்துள்ளார். பும்ராவின் பந்துவீச்சை எதிர்கொள்ள ரூட் சிரமப்படுவது குறிப்பிடத்தக்கது.

Jasprir Bumrah vs Joe Root: 24 போட்டிகளில் 9 முறை அவுட்.. ஜஸ்பிரித் பும்ரா vs ஜோ ரூட்!  யார் ஆதிக்கம் செலுத்துவார்கள்..?
ஜோ ரூட் Vs ஜஸ்பிரித் பும்ராImage Source: PTI
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 19 Jun 2025 16:26 PM IST

இந்தியா – இங்கிலாந்து அணிகள் இடையிலான 5 போட்டிகள் (India vs England Test Series 2025) கொண்ட டெஸ்ட் தொடர் வருகின்ற 2025 ஜூன் 20ம் தேதி லீட்ஸில் தொடங்குகிறது. இந்த தொடரின்போது, இங்கிலாந்து பேட்ஸ்மேன் ஜோ ரூட் மற்றும் இந்திய பந்து வீச்சாளர் ஜஸ்பிரித் பும்ரா (Jasprit Bumrah) இடையே கடுமையான போட்டி நிலவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு காரணம், இரு வீரர்களும் அந்தந்த அணிகளுக்கு மேட்ச் வின்னர்கள். ஜோ ரூட் (Joe Root) பேட்டிங்கில் ஆதிக்கம் செலுத்தினால் இந்திய அணிக்கு பிரச்சனைகள் அதிகரிக்கும். அதேநேரத்தில், பும்ரா தனது மாயாஜாலத்தை காட்டினால் இங்கிலாந்து அணியின் பேட்ஸ்மேன்கள் திணற தொடங்கும். இங்கிலாந்து அணி பும்ராவின் கைகளால் விக்கெட்டுகளை எடுக்கக்கூடாது என்று நினைக்கிறது. அதேபோல், இந்திய அணி ஜோ ரூட்டை விரைவில் அவுட் செய்ய விரும்பும்.

பும்ரா vs ரூட்: நேருக்கு நேர் மோதல்:

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் ஜோ ரூட்டும், ஜஸ்பிரித் பும்ராவும் இதுவரை 24 டெஸ்ட் போட்டிகளில் நேருக்குநேர் மோதியுள்ளனர். டெஸ்ட் போட்டிகளில் ஜோ ரூட், ஜஸ்பிரித் பும்ராவின் 559 பந்துகளை எதிர்கொண்டுள்ளார். இதில் ரூட் 286 ரன்கள் மட்டுமே எடுத்துள்ளார். டெஸ்ட் வடிவத்தில் ஜோ ரூட்டின் மொத்த சராசரி 50.80, ஆனால் பும்ராவுக்கு எதிரான அவரது சராசரி வெறும் 31.77 ஆக மட்டுமே உள்ளது. மேலும், இங்கிலாந்து அணியின் நட்சத்திர பேட்ஸ்மேன் ஜோ ரூட், பும்ரா பந்துவீச்சில் இதுவரை 9 முறை அவுட்டாகியுள்ளார்.

கடந்த 2018ம் ஆண்டு இந்திய அணி இங்கிலாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டபோது ஜோ ரூட்டும், ஜஸ்பிரித் பும்ராவும் முதல் முறையாக நேருக்குநேர் சந்தித்தார். அந்த தொடரில், பும்ரா 127 பந்துகளை எதிர்கொண்டு 44 ரன்கள் மட்டுமே எடுத்து, 2 முறை அவுட்டானார். அதேபோல், 2021 தொடரில் பும்ரா, ரூட்டை 3 முறையும், 2024ம் ஆண்டு நடைபெற்ற இந்தியா-இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் பும்ரா, ரூட்டை 3 முறையும் அவுட் செய்துள்ளார்.

ரூட்டை அதிகமுறை அவுட்செய்த பந்துவீச்சாளர் யார்..?

இங்கிலாந்து அணியின் நட்சத்திர பந்துவீச்சாளர் ஜஸ்பிரித் பும்ராவை அதிகமுறை அவுட் செய்த பந்துவீச்சாளர்கள் பாட் கம்மின்ஸ் மற்றும் ஜோஷ் ஹேசில்வுட் மட்டுமே. ஆஸ்திரேலிய கேப்டன் பாட் கம்மின்ஸ், இங்கிலாந்து முன்னாள் கேப்டன் ஜோ ரூட்டை டெஸ்ட் கிரிக்கெட்டில் 11 முறை அவுட் செய்துள்ளார். அதேபோ, மற்றொரு ஆஸ்திரேலிய வேகப்பந்துவீச்சாளர் ஹேசில்வுட் 10 முறை ரூட்டின் விக்கெட்டையும் வீழ்த்தியுள்ளனர்.

Follow Us