விராட் கோலி அதிரடி… நியூசிலாந்தை வீழ்த்தி இந்தியா அபார வெற்றி
இந்தியா - நியூசிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டியில் இந்திய அணி 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த போட்டியில் அதிரடியாக ஆடி விராட் கோலி 93 ரன்கள் குவித்தார். இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை பெற்றார்.
இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கு 2026 ஆம் ஆண்டின் தொடக்கம் ஒரு மகிழ்ச்சியான தருணமாக அமைந்துள்ளது. இந்திய அணியின் நட்சத்திர வீரர் விராட் கோலி (Virat Kohli), நியூசிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் புதிய சாதனை ஒன்றை படைத்துள்ளார். சர்வதேச கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த இரண்டாவது வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார். வதோதராவில் நடைபெற்றுவரும் இந்தியா – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் சுப்மன் கில் டாஸ் வென்று பந்து வீச்சை தேர்வு செய்தார். அந்த அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை குவித்தது.
இதனையடுத்து முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணிக்கு டேவான் கான்வே, ஹென்ரி நிக்கோலஸ் நல்ல துவக்கம் தந்தனர். கான்வே 67 பந்துகளை எதிர்கொண்டு 56 ரன்களை குவித்தார். நிக்கோலஸ் 69 பந்துகளை எதிர்கொண்டு 62 ரன்களை குவித்தார். பின்னர் வந்த மிட்செல் அதிரடியாக ஆடி 3 சிக்சர், 5 பவுண்டரி என 81 ரன்கள் அடித்தார். பின்னர் வந்த வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டமிழந்தனர். இந்திய அணியின் சார்பில் முகமது சிராஜ், ஹர்ஷித் ராணா, பிரசித் கிருஷ்ணா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் குல்தீப் யாதவ் 1 விக்கெட்டையும் கைப்பற்றினர்.
இதையும் படிக்க : IPL 2026: முஸ்தாபிசுர் ரஹ்மானை ஐபிஎல்-க்கு திரும்ப அழைத்ததா பிசிசிஐ? வங்கதேச கிரிக்கெட் வாரியம் விளக்கம்!
அதனைத் தொடர்ந்து 301 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய அணியின் சார்பில் ரோகித் சர்மா, சுப்மன் கில் துவக்க வீரர்களாக களமிறங்கினர். அதிரடி துவக்கம் தந்த ரோகித் சர்மா 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் பிரேஸ்வெல் பந்தில் தனது விக்கெட்டை பறிகொடுத்து அதிர்ச்சி அளித்தார்.
சுப்மன் கில்லின் விக்கெட்டை வீழ்த்திய ஆதித்யா அசோக்
பின்னர் சுப்மன் கில் மற்றும் விராட் கோலி இருவரும் பார்ட்னர்ஷிப் அமைத்து ரன் வேட்டையில் இறங்கினர். நியூசிலாந்து அணியின் பந்து வீச்சுகளை நான்கு புறமும் சிதரடித்து விரைவான அரைசதம் கடந்தனர். இந்த நிலையில் தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட ஆதித்யா அசோக்கின் பந்தில் கேப்டன் சுப்மன் கில் அவுட்டாக, ஸ்ரேயாஸ் ஐயருடன் ஜோடி சேர்ந்து விராட் கோலி தனது ரன்வேட்டையைத் தொடர்ந்தார்.
இதையும் படிக்க : Tilak Varma Injury: இந்திய ரசிகர்களுக்கு அதிர்ச்சி! திலக் வர்மா திடீர் அறுவை சிகிச்சை.. உலகக் கோப்பையில் விளையாடுவாரா?
இதன் மூலம் சர்வதேச போட்டிகளில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற சாதனையை அவர் படைத்தார். இந்த நிலையில் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட அவர் கெயில் ஜேமிசன் பந்து வீச்சில் தனது விக்கெட்டை பறிகொடுத்தார். இதன் மூலம் 7 ரன்களில் தனது சதத்தை அவர் இழந்தார். ஒரு பக்கம் ரன்கள் உயர்ந்தாலும், விக்கெட்டுகள் விழுந்த வண்ணம் இருந்ததால் ஆட்டத்தில் பரபரப்பு தொற்றிக்கொண்டது. இந்த நிலையில் இந்திய அணி விக்கெட்டுகள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியை வீழ்த்தி தொடரில் 1-0 முன்னிலை வகிக்கிறது.