IND vs AFG: விலகும் விராட் கோலி.. 3வது இடத்தில் களமிறங்கும் பேட்ஸ்மேன் யார்..? இந்த அதிரடி வீரருக்கு வாய்ப்பு!
Who will replace Virat Kohli in Playing XI: ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவார்கள். அதன்பிறகு, விராட் கோலி இன்னிங்ஸை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலி இல்லாததால், இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது.
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் இந்திய அணியின் (Indian Cricket Team) நட்சத்திர வீரர் விராட் கோலிக்கு தொடை தசைநார் காயம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, வருகின்ற 2026 ஜூன் 13 முதல் தொடங்கும் ஒருநாள் தொடரில் கோலி விளையாட மாட்டார். இதையடுத்து, அவருக்குப் பதிலாக யார் விளையாடுவார்? என்ற கேள்வி எழுகிறது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடரில் விராட் கோலி (Virat Kohli) விலகியதைத் தொடர்ந்து, அவருக்குப் பதிலாக இஷான் கிஷன் ஆடும் லெவனில் சேர்க்கப்படுவது உறுதியாகியுள்ளது. ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேனாக இஷான் கிஷன் தேர்ந்தெடுக்கப்பட்டார். நடந்து முடிந்த 2026ம் ஆண்டு ஐபிஎல் சீசனில் விராட் கோலி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இறுதிப் போட்டியில் கோலியின் பேட்டிங், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி 2வது முறையாக கோப்பையை வெல்ல உதவியது.
ALSO READ: ஒருநாள் போட்டிக்கு திரும்பும் விராட் கோலி.. இந்திய அணி பயிற்சியை எப்போது தொடங்குகிறது?
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் ஆடும் லெவன் கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. சுப்மன் கில் மற்றும் ரோஹித் சர்மா தொடக்க ஆட்டக்காரர்களாகக் களமிறங்குவார்கள். அதன்பிறகு, விராட் கோலி இன்னிங்ஸை வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. விராட் கோலி இல்லாததால், இஷான் கிஷனுக்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்காது என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இப்போது விராட் அணியிலிருந்து விலகிவிட்டார். எனவே, அவருக்குப் பதிலாக ஒருநாள் போட்டியில் இஷான் கிஷனுக்கு வாய்ப்பு கிடைக்கும்.




4வது அல்லது 5வது இடத்தைப் பிடிப்பவர் யார்?
ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிரான இந்திய அணியின் ஆடும் லெவனில் அணியின் துணை கேப்டன் ஷ்ரேயாஸ் ஐயர் 4வது இடத்தில் பேட்டிங் செய்யலாம். கே.எல். ராகுல் ஐந்தாவது இடத்தில் பேட்டிங் செய்வார். இந்திய ஒருநாள் அணியின் முதல் தேர்வு ஒரு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஆவார். ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்டியா ஆறாவது இடத்தில் உள்ளார். வாஷிங்டன் சுந்தர் ஏழாவது இடத்தில் சிறப்பாக விளையாடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
குர்னூர் பிரார் அறிமுகமாகிறாரா?
இந்திய அணியில் ஒரு சிறப்பு சுழற்பந்து வீச்சாளராக குல்தீப் யாதவிற்கு ஆடும் லெவனில் வாய்ப்பு கிடைக்கலாம். அது தவிர, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா மற்றும் குர்னூர் பிரார் என 3 வேகப்பந்து வீச்சாளர்கள் அணியில் இருப்பார்கள். குர்னூர் பிரார் ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தனது முதல் ஒருநாள் போட்டியில் அறிமுகமாகலாம்.
ALSO READ: காயத்தால் சிக்கலில் சிக்கிய கோலி.. ஆப்கானிஸ்தான் ODI தொடரில் இருந்து விலகல்?
இந்திய அணியின் உத்தேச ஆடும் XI
சுப்மன் கில் (கேப்டன்), ரோஹித் சர்மா, இஷான் கிஷன், ஷ்ரேயாஸ் ஐயர் (துணை கேப்டன்), கே.எல்.ராகுல், ஹர்திக் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா, குர்னூர் ப்ரார்