CWG 2026 : குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற சாக்ஷி சௌத்ரி
CommonWealth 2026 : காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பெண்களின் ஆதிக்கம் தொடர்கிறது. குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சௌத்ரி 51 கிலோ எடைப் பிரிவில் அபாரமாகச் செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அவர் இங்கிலாந்தின் ரூபி வைட்டை எளிதாக வீழ்த்தினார்.
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் இந்தியப் பெண்களின் ஆதிக்கம் தொடர்கிறது. குத்துச்சண்டை வீராங்கனை சாக்ஷி சௌத்ரி 51 கிலோ எடைப் பிரிவில் அபாரமாகச் செயல்பட்டு தங்கப் பதக்கத்தை வென்றார். இறுதிப் போட்டியில் அவர் இங்கிலாந்தின் ரூபி வைட்டை எளிதாக வீழ்த்தினார். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளில் தனது அறிமுக போட்டியிலேயே தங்கம் வென்று சாக்ஷி முத்திரை பதித்தார். முன்னதாக 54 கிலோ எடைப் பிரிவில் போட்டியிட்ட அவர், தனது விளையாட்டு வாழ்க்கையின் முன்னேற்றத்திற்காக 51 கிலோ எடைப் பிரிவுக்கு மாறினார்.
குத்துச்சண்டை போட்டியில் தங்கம் வென்ற சாக்ஷி சௌத்ரி
தேசிய அளவிலான தகுதிச் சுற்றுகளில், இருமுறை சாம்பியனான நிகத் ஜரீன் மற்றும் உலக மற்றும் ஆசிய சாம்பியனான மீனாட்சி ஹூடா ஆகியோரைத் தோற்கடித்து அவர் காமன்வெல்த் போட்டிக்குத் தகுதி பெற்றார். இந்த நிலையில் காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியில் சாக்ஷி சௌத்ரி மிகச் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். 16 பேர் கொண்ட சுற்றில், போட்ஸ்வானாவின் லெதாபோ மொடுகனேலேயை சாக்ஷி தோற்கடித்தார்.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவிற்கு வரப்போகும் மேலும் 2 பதக்கங்கள்.. பைனலில் களமிறங்கும் இரு சிங்கங்கள்!




காலிறுதியில், அயர்லாந்தின் கெய்ட்லின் ஃப்ரையர்ஸை அவர் வீழ்த்தினார். அரையிறுதியில், கனடாவின் ஆம்பர்-ஜேன் வாலலைத் தோற்கடித்தார். இறுதிப் போட்டியில் இங்கிலாந்தின் ரூபி வைட்டை வீழ்த்தி அவர் காமன்வெல்த் சாம்பியனானார்.
சாக்ஷி சௌத்ரி 2000 ஆம் ஆண்டு செப்டம்பர் 9 ஆம் தேதி ஹரியானாவின் பிவானி மாவட்டத்தில் உள்ள தனனா கிராமத்தில் பிறந்தார். விஜேந்தர் சிங்கிற்குப் பயிற்சியளித்த ஜகதீஷ் சிங்கின் வழிகாட்டுதலின் கீழ் பிவானி குத்துச்சண்டை கிளப்பில் அவர் தனது பயிற்சியைத் தொடங்கினார். சிறுவயதில் சாக்ஷி மிகவும் குறும்புக்காரராகவும், அடிக்கடி சண்டையிடுபவராகவும் இருந்ததால், அவரை ஒரு குத்துச்சண்டை வீராங்கனையாக மாற்ற அவரது தந்தை முடிவு செய்தார்.
சாக்ஷி இந்திய ராணுவத்தில் ஹவில்தாராகப் பணியாற்றுகிறார், அதே சமயம் அவரது சகோதரர் இந்திய ராணுவத்தில் அதிகாரியாக உள்ளார். அவரது சகோதரர் அதிகாரியாக இருப்பது குறித்து அவர் அடிக்கடி கேலி செய்யப்படுவதுண்டு. ஆனால் இப்போது, தங்கம் வென்றதன் மூலம் சாக்ஷி நாட்டிற்குப் பெருமை சேர்த்துள்ளார்.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவுக்குத் தங்க வேட்டை… ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே
சாக்ஷியின் சிறப்பான விளையாட்டுப் பயணம்
உலக ஜூனியர் சாம்பியன்ஷிப் 2015 போட்டியில் தங்கம் வென்றார். கடந்த 2017 மற்றும் 2018 ஆம் ஆண்டுகளி் நடைபெற்ற உலக இளைஞர் சாம்பியன்ஷிப் தொடரில் அடுத்தடுத்து 2 முறை தங்கம் வென்று அசத்தினார். 2021 ஆம் ஆண்டில் ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் வெண்கலம் வென்றார். கடந்த 2025 ஆம் ஆண்டு உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தங்கம் வென்றார். குறிப்பாக உலக குத்துச்சண்டை கோப்பையில் தங்கம் வென்ற முதல் இந்தியப் பெண் என்ற சாதனையை அவர் படைத்துள்ளார்.