CWG 2026 : குத்துச்சண்டையில் 10 தங்கம் இலக்கு… பதக்க வேட்டையை தொடரும் இந்தியா!
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 10வது நாளான ஆகஸ்ட் 1, 2026 இன்று இந்தியா 10 தங்க பதக்கங்களை வெல்ல எதிர்நோக்கி காத்திருக்கிறது. தற்போது வரை இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்றுள்ளது
கிளாஸ்கோவில் நடைபெற்று வரும் 2026 காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் 10வது நாளான ஆகஸ்ட் 1, 2026 இன்று இந்தியா 10 தங்க பதக்கங்களை வெல்ல எதிர்நோக்கி காத்திருக்கிறது. தற்போது வரை இந்தியா 5 தங்கம், 12 வெள்ளி, 6 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களை வென்றுள்ளது. 9வது நாளான நேற்று இந்தியாவின் நீரஜ் சோப்ரா ஈட்டி எறிதல் போட்டியில் வெள்ளிப்பதக்கமும், யஷ்வீர் சிங் வெண்கல பதக்கமும் வென்றனர். மேலும் ஜூடோ போட்டியில் அஸ்மிதா டே மற்றும் ஹர்ஷ் சிங் தலா ஒரு தங்கப்பதக்கங்களை கைப்பற்றி இந்தியாவுக்கு பெருமை தேடித் தந்தனர்.
குத்துச்சண்டை போட்டியில் 10 தங்கப்பதக்கங்கள்?
இந்தியாவின் மிகப்பெரிய எதிர்பார்ப்பு குத்துச்சண்டை போட்டிகளில் உள்ளது. முதன்முறையாக 10 இந்திய குத்துச்சண்டை வீரர், வீராங்கனைகள் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர். இதன் மூலம் இந்தியாவுக்கு குறைந்தபட்சம் 10 வெள்ளிப் பதக்கங்கள் ஏற்கனவே உறுதியாகியுள்ளன.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவிற்கு வரப்போகும் மேலும் 2 பதக்கங்கள்.. பைனலில் களமிறங்கும் இரு சிங்கங்கள்!




அந்த வகையில் ஆகஸ்ட்1, 2026 இன்று தங்கப் பதக்கத்துக்காக களமிறங்கும் இந்திய வீரர், வீராங்கனைகள் குறித்து பாரக்கலாம்.
மகளிர் 54 கிலோ பிரிவில் ப்ரீத்தி பவார், மகளிர் 57 கிலோ பிரிவில் ஜாஸ்மைன் லம்போரியா, 51 கிலோ பிரிவில் சாக்ஷி சவுத்ரி, 60 கிலோ பிரிவில் பிரியா கங்காஸ், 70 கிலோ பிரிவில் அருந்ததி சவுத்ரி, 75 கிலோ பிரிவில் ல்வ்லினா போர்கோஹைன் களமிறங்குகின்றனர்.
ஆண்கள் போட்டியில் 55 கிலோ பிரிவில் ஜதுமணி சிங், 60 கிலோ பிரிவில், சச்சின் சிவாச், 80 கிலோ பிரிவில் அங்குஷ் பெர்வால், 90 கிலோவுக்கு மேற்பட்டோர் பிரிவில் நேரந்தர் பெர்வால் ஆகியோர் களமிறங்குகின்றனர்.
தடகள போட்டிகளிலும் பதக்கம் வெல்ல வாய்ப்பு
தடகளப் போட்டிகளில் பிரவீன் சித்ரவேல் மற்றும் செல்வ பிரபு திருமாறன் ஆடவர் மும்முறை தாண்டுதல் இறுதிப்போட்டியில் களமிறங்கினர். மேலும், தேவ் மீனா மற்றும் குல்தீப் குமார் கம்பம் தாண்டுதல் இறுதிப்போட்டியில் பங்கேற்கின்றனர். அதனைத் தொடர்ந்து 10,000 மீட்டர் ஓட்டத்தில் ஏற்கனவே வெள்ளிப் பதக்கம் வென்ற குல்வீர் சிங், இன்று 5,000 மீட்டர் இறுதிப்போட்டியில் மேலும் ஒரு பதக்கத்தை வெல்லும் நோக்கில் களமிறங்குகிறார்.
இதையும் படிக்க : CWG 2026: இந்தியாவுக்குத் தங்க வேட்டை… ஜூடோவில் தங்கம் வென்ற ஹர்ஷ் சிங் மற்றும் அஸ்மிதா டே
காமன்வெல்த் விளையாட்டின் இறுதி நாள் நாளை நடைபெறவுள்ள நிலையில் இன்று, குத்துச்சண்டையில் அதிகபட்ச தங்கப் பதக்கங்களை வென்று, மொத்த பதக்க எண்ணிக்கையை மேலும் உயர்த்த இந்திய அணி தீவிரமாக களமிறங்கியுள்ளது. குறிப்பாக 10 குத்துச்சண்டை வீரர்கள் தங்கப் பதக்கத்துக்காக விளையாடுவது, இந்திய குத்துச்சண்டை வரலாற்றிலேயே மிகப்பெரிய சாதனையாக பார்க்கப்படுகிறது. இதனால் காமன்வெல்த் போட்டியில் இன்றைய நாள் மிகுந்த முக்கியத்துவம் மிக்க நாளாக பார்க்கப்படுகிறது.