2026 Hockey Tournament: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் வெளியேறிய பாகிஸ்தான்! வங்கதேச அணிக்கு அடித்த லக்..
Asian Hockey Champions Trophy 2026: ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி 2026 போட்டியில் இருந்து பாகிஸ்தான் நீக்கப்பட்டு, வங்கதேசம் சேர்க்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கையை ஹாக்கி இந்தியா நிராகரித்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இப்போட்டிகள் 2026 அக்டோபர் 27 முதல் நவம்பர் 5 வரை ஜலந்தர் மற்றும் மொஹாலியில் நடைபெறும். இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தென் கொரியா ஆகியவற்றுடன் வங்கதேசம் மோதவுள்ளது.
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி (Asian Hockey Champions Trophy 2026) போட்டித்தொடர் குறித்து ஒரு முக்கியத் தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் போட்டித்தொடரிலிருந்து பாகிஸ்தான் வெளியேற்றப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் கோரிக்கைகளில் ஒன்றை நிராகரித்ததன் மூலம் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் இருந்து விலக்கப்பட்டுள்ளனர். பாகிஸ்தான் (Pakistan Hockey Team) போட்டித்தொடரிலிருந்து வெளியேற்றப்பட்டதால், அதற்குப் பதிலாக வங்கதேசத்திற்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபி போட்டியானது பஞ்சாபில் உள்ள ஜலந்தர் மற்றும் மொஹாலியில் நடைபெறும். இந்த ஹாக்கிப் போட்டித்தொடர் வருகின்ற 2026 அக்டோபர் 27 முதல் 2026 நவம்பர் 5ம் தேதி வரை நடைபெறும்.
ALSO READ: ஆசிய விளையாட்டில் இந்திய ஆடவர் ஹாக்கி அணிக்கு தங்கம்.. மலேசியாவை வீழ்த்தி அசத்திய வீரர்கள்..
பாகிஸ்தான் உட்பட 6 அணிகள் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் பங்கேற்க வேண்டுமெனில் தங்களது போட்டிகளை வேறு நாட்டில் நடத்தப்பட வேண்டும் என்று பாகிஸ்தான் ஹாக்கி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்திருந்தது. ஆனாலும், அதே நேரத்தில், போட்டி நடைபெறும் இடம் தொடர்பாக எந்த மாற்றமும் செய்யப்படாது என்று ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளரும், ஆசிய ஹாக்கி கூட்டமைப்பின் துணைத் தலைவருமான போலநாத் சிங் கூறியிருந்தார்.




பங்கேற்கும் 6 அணிகளின் பெயர்களை அறிவித்த ஹாக்கி இந்தியா:
இதை தொடர்ந்து ஹாக்கி இந்தியா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியில் பங்கேற்கும் 6 அணிகளின் பட்டியல் இடம்பெற்றுள்ளது. அதில் பாகிஸ்தானின் பெயர் இடம்பெறவில்லை. அந்த 6 அணிகளில் இந்தியா, ஜப்பான், சீனா, மலேசியா, தென் கொரியா மற்றும் வங்கதேசம் ஆகியவை அடங்கும்.
வங்கதேச அணிக்கு அடித்த லக்:
மொஹாலியில் போட்டி அட்டவணையை அறிவித்தபோது, பாகிஸ்தான் பங்கேற்கும் என்று பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த் மான் கூறியிருந்தார். அப்போது, ஹாக்கி இந்தியாவின் பொதுச் செயலாளர் போலநாத் சிங் மற்றும் முக்கிய அதிகாரிகளும் உடனிருந்தனர். ஒரு அணி விலகும் பட்சத்தில், மாற்று அணிகளாக வங்கதேசம் மற்றும் ஓமன் ஆகியவை காப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டன. பாகிஸ்தான் போட்டியிலிருந்து வெளியேறியதைத் தொடர்ந்து வங்கதேசம் இடம்பெற்றுள்ளது.
பாகிஸ்தான் அணியின் இதுவரையிலான பயணம்:
2008 மும்பை பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பிறகு இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையே இருதரப்பு ஹாக்கிப் போட்டிகள் எதுவும் நடைபெறவில்லை. இரு அணிகளும் சர்வதேசப் போட்டிகளில் மோதியுள்ளன. இந்திய ஹாக்கி அணி 2006-ல் பாகிஸ்தானுக்குச் சுற்றுப்பயணம் மேற்கொண்டது.
ALSO READ: 21 தங்கம்! 27 வெள்ளி! 2026 ஆசிய விளையாட்டு போட்டியில் இந்தியாவிற்கு எத்தனையாவது இடம்?
ஜலந்தர் மற்றும் மொஹாலியில் போட்டி
ஆசிய ஹாக்கி சாம்பியன்ஸ் டிராபியின் லீக் போட்டிகள் பஞ்சாபில் உள்ள ஜலந்தரில் நடைபெறும். இந்தப் போட்டிகள் ஒலிம்பியன் சுர்ஜித் சிங் ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். தொடரின் மீதமுள்ள போட்டிகள் மொஹாலியில் உள்ள பல்பிர் சிங் சீனியர் சர்வதேச ஹாக்கி மைதானத்தில் நடைபெறும். அரையிறுதிப் போட்டிகள் வருகின்ற 2026 நவம்பர் 4ம் தேதியும், இறுதிப் போட்டி 2026 நவம்பர் 5 ஆம் தேதியும் நடைபெறும்.