AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

IND vs PAK: ஹாங்காங் சிக்ஸஸ் 2026.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?

IND vs PAK Hong Kong Sixes 2026: இந்தியா-பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்த ஹாங்காங் சிக்ஸஸ் 2026 போட்டி அக்டோபர் 30 அன்று ஹாங்காங்கில் நடைபெறுகிறது. புவனேஷ்வர் குமார் தலைமையிலான இந்திய அணியும், முகமது அப்பாஸ் அஃப்ரிடி தலைமையிலான பாகிஸ்தான் அணியும் மோதுகின்றன. தேதி, நேரம், இடம், இரு அணிகளின் வீரர்கள் பட்டியல் மற்றும் கேப்டன் குறித்த முழு விவரங்கள் இங்கே.

IND vs PAK: ஹாங்காங் சிக்ஸஸ் 2026.. இந்தியா – பாகிஸ்தான் போட்டி எப்போது..?
இந்தியா - பாகிஸ்தான் போட்டிImage Source: AP
Mukesh Kannan
Mukesh Kannan | Published: 09 Oct 2026 16:37 PM IST

இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் (IND vs PAK) இடையே ஒரு போட்டி நடைபெறுகிறது என்றாலே உற்சாகம் புரளும். இரு அணிகளுக்கு இடையேயான போட்டி என்று வரும்போது, இரு நாட்டு ரசிகர்களும் அதை ஆவலுடன் எதிர்பார்க்கிறார்கள். இந்தியா (Indian Cricket Team)-பாகிஸ்தான் போட்டியானது, ஆட்டங்களை விட சர்ச்சைகளே அதிகம் நிறைந்தது. இப்போது இந்த இரண்டு அணிகளும் மீண்டும் ஒருவருக்கொருவர் எதிராக விளையாட களமிறங்கப் போகிறார்கள். இந்தப் போட்டி எப்போது, ​​எங்கே, எந்த நேரத்தில் நடைபெறும் என்பதை தெரிந்து கொள்வோம்.

ALSO READ: ‘தோல்வி இன்னும் என்னை வாட்டுகிறது’ – உடைந்து பேசிய பாகிஸ்தான் பேட்ஸ்மேன்

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், ஹாங்காங் சிக்ஸஸ் 2026 தொடருக்கான தனது 7 பேர் கொண்ட அணியை அறிவித்துள்ளது. பாகிஸ்தான் அணியின் அனுபவ ஆல்-ரவுண்டர் முகமது அப்பாஸ் அஃப்ரிடி அணிக்குத் தலைமை தாங்குவார். நடப்பு சாம்பியனான பாகிஸ்தான், இத்தொடரில் தனது முதல் போட்டியில் ஐக்கிய அரபு அமீரகத்தை எதிர்கொள்கிறது. பின்னர் அதே நாளில், ‘சி’ பிரிவின் 2வது மற்றும் கடைசி லீக் போட்டியில் இந்தியாவை எதிர்கொள்கிறது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இந்த முக்கியப் போட்டி, வருகின்ற 2026 அக்டோபர் 30ம் தேதி மோங் கோக்கில் உள்ள மிஷன் ரோடு ஸ்டேடியத்தில் நடைபெறும்.

இந்திய அணியின் கேப்டன் யார்..?

இந்திய அணியின் அனுபவ வேகப்பந்து வீச்சாளர் புவனேஷ்வர் குமார் இந்திய அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அதேபோல், இதற்கு முன்பு இந்தியாவுக்காக விளையாடிய க்ருணால் பாண்டியா மற்றும் நிதிஷ் ராணா போன்ற வீரர்களும் இடம்பெறுவார்கள். புவனேஷ்வர் குமார் இந்திய அணிக்காக நீண்ட நாட்களுக்கு பிறகு களமிறங்குகிறார். கடைசியாக, புவி கடந்த 2022 நவம்பரில் இந்தியாவுக்காக விளையாடினார்.

ஹாங்காங் சிக்ஸ் தொடருக்கான இந்திய அணி கடந்த 2026 அக்டோபர் 5ம் தேதி அறிவிக்கப்பட்டது. புவனேஷ்வர் குமார் இந்திய அணியின் கேப்டனாக அறிவிக்கப்பட்டார். அனுபவம் வாய்ந்த புவனேஷ்வருடன் சில ஐபிஎல் நட்சத்திரங்களும் இந்த அணியில் இடம்பெற்றுள்ளனர். தற்போது, ​​இதைத் தொடர்ந்து புவனேஷ்வர் குமாரும் இந்திய அணியில் மீண்டும் இடம்பிடித்துள்ளார். நியூசிலாந்துக்கு எதிரான டி20 தொடரில் புவிக்கு இடம் கிடைத்துள்ளது.

ALSO READ: 4 ஆண்டுகளுக்குப் பிறகு! இந்திய அணிக்குள் புவனேஷ்வர்.. எதிர்பார்ப்பில் NZ தொடர்!

புவனேஷ்வர் குமார் (கேப்டன்), க்ருணால் பாண்டியா, நிதீஷ் ராணா, ஷஷாங்க் சிங், டி. நடராஜன், ராகுல் திரிபாதி மற்றும் ராகுல் தெவாடியா ஆகியோர் இந்த அணியில் இடம்பெறுவார்கள். இந்தத் தொடருக்காக 7 வீரர்கள் கொண்ட அணி மட்டுமே உள்ளது. இந்தியாவிலிருந்து 7 வீரர்களும், பாகிஸ்தானிலிருந்து 7 வீரர்களும் இப்போது ஒருவருக்கொருவர் எதிராகப் போட்டியிடுவதைக் காணலாம். இந்தியா – பாகிஸ்தான் இடையிலான போட்டி வருகின்ற 2026 அக்டோபர் 30ம் தேதி காலை 11:45 மணிக்கு விளையாடுவார்கள். இப்போட்டி ஹாங்காங்கில் உள்ள டின் காங் ரோடு பொழுதுபோக்கு மைதானத்தில் நடைபெறும்.

Follow Us