Baba Vanga Predictions: ஜூலை 5ல் பேரழிவு உண்டாகுமா? – புதிய பாபா வங்கா கணிப்பால் அச்சம்!
புதிய பாபா வங்காவின் 2025 ஜூலை 5ம் தேதி ஜப்பானில் ஏற்படப் போகும் பயங்கர சுனாமி கணிப்பு பற்றிய செய்தி பலரையும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. ஜப்பானின் கடல் நீருக்கடியில் வெடிப்பு, பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பானில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகிறது. இதனால் மக்கள், சுற்றுலாப் பயணிகள் அச்சமடைந்துள்ளனர்.

பொதுவாக எதிர்காலம் பற்றிய கணிப்பும், அதுதொடர்பாக நடைபெறும் சம்பவங்களும் நம்மை மிகப்பெரிய அளவில் பீதிக்குள்ளாக்கும். அந்த வகையில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 5 ஆம் தேதி உலகை சுனாமி பேரலைகள் தாக்கும் என்ற கணிப்பு பலரையும் கவலைக்குள்ளாக்கியுள்ளது. பொதுவாக ஜோதிடத்தில் நம்பிக்கைக் கொண்டவர்களுக்கு எதிர்காலம் குறித்து வெளியாகும் எதிர்மறையான தகவல்கள் மிகுந்த தாக்கத்தை ஏற்படும் என சொல்வார்கள். அப்படியான காலத்தை கணிப்பவர்களும் ஒவ்வொரு காலக்கட்டத்திலும் இருக்கிறார்கள். அந்த வகையில் எதிர்காலத்தைக் கணிக்கும் தீர்க்கத் தரிசிகளில் ஒருவராக பாபா வங்கா அறியப்படுகிறார். கண் பார்வை இல்லாத அவர், எதிர்காலம் குறித்து பல விஷயங்களை தெரிவித்திருந்தார். 1996 ஆம் ஆண்டு பாபா வங்கா மறைந்தாலும் அவரின் கணிப்புகள் பல சம காலத்தில் நடைபெற்று வருகிறது.
புதிய பாபா வங்கா
இந்த நிலையில் ஜப்பானைச் சேர்ந்த ரியோ டாட்சுகி “புதிய பாபா வங்கா” என அழைக்கப்படுகிறார். இவர் தனது கையால் எழுதப்பட்ட எதிர்கால கணிப்புகளைக் கொண்ட “தி ஃபியூச்சர் ஐ சா” என்ற புத்தகத்தை 1999ம் ஆண்டு வெளியிட்டார். இதில் இடம் பெற்ற இளவரசி டயானாவின் மரணம்,2011 ஜப்பான் பூகம்பம் மற்றும் சுனாமி,கோவிட்-19 தொற்றுநோய் உள்ளிட்டவை குறித்த கணிப்புகள் மிக துல்லியமாக நடந்ததாக சொல்லப்படுவதால் அவர் கூறும் தகவல்கள் மீது மக்கள் அபரிமிதமான நம்பிக்கை கொண்டுள்ளனர்.
அந்த வகையில் ஜூலை 2025க்கான புதிய பாபா வாங்காவின் சில கணிப்புகள் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. இதனைக் கண்டு மக்கள் இப்போது பீதியடைந்துள்ளனர். அவரது கணிப்புகளின்படி, ஜூலை 5ஆம் தேதி ஒரு பெரிய பேரழிவு ஏற்படப் போகிறது என சொல்லப்பட்டுள்ளது. இதனால் மக்களிடையே பதட்டமானது இன்னும் அதிகரித்துள்ளது.
அப்படி என்ன நடக்கப் போகிறது?
அதாவது ஜப்பானின் கடல் நீருக்கடியில் ஏற்படும் வெடிப்பு அந்நாட்டை பேரழிவிற்கு உட்படுத்தும் வகையில் ஒரு பெரிய சுனாமியைத் தூண்டும் என கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்வின் காரணமாக பிலிப்பைன்ஸ் மற்றும் ஜப்பான் இடையே மிகப்பெரிய பாதிப்பு உண்டாகும் என சொல்லப்படுகிறது. கடற்கரையில் ஏற்படும் நிலநடுக்கங்கள் வழக்கத்தை விட மூன்று மடங்கு அதிக அலைகளை உண்டாக்கி அழிவை நிகழ்த்தும். மேலும் நெருப்பு, காற்று தொடர்பான விபத்துகளும் ஜூலை மாதத்தில் நிகழும் என சொல்லப்படுகிறது.
இந்த தகவலைத் தொடர்ந்து உலகம் முழுவதும் இருந்து ஜூலை மாதத்தின் முதல் வாரத்தில் ஜப்பானுக்கு டிக்கெட் போட்டிருந்த சுற்றுலாப் பயணிகள் பலரும் தங்கள் பயணத்தை ரத்து செய்துள்ளனர். ஆனால் அப்படி எதுவும் இருக்காது என ஜப்பானிய அரசு நம்பிக்கை தெரிவித்திருக்கிறது. ஜோதிடத்தில் கிரக நிலைகளின்படி, இந்த நேரத்தில் செவ்வாய், ராகு மற்றும் கேதுவின் அசுப சேர்க்கை ஏற்படுவதால் அரசியல் ரீதியான பிரச்னைகளும் உலகளவில் உருவாகும் என கணிக்கப்படுகிறது. ஒருவேளை இந்த கணிப்புகள் நடந்தால் அது வரலாற்றில் மறக்க முடியாத பேரழிவாக இருக்கும் என சொல்லப்படுகிறது.