AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை: பிரபல கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் திருவிழா தொடக்கம்

Kollangode Bhadrakali Amman Temple: கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் பங்குனி மாதம் மீனபரணி நாளை முன்னிட்டு நடைபெறும் தூக்கத்திருவிழா இன்று தொடங்கியது. பச்சிளம் குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாக கருதப்படுகிறது. மாலை நடைபெறும் கொடியேற்றத்துடன் திருவிழா நிகழ்ச்சிகள் அதிகாரப்பூர்வமாக ஆரம்பமாகிறது.

குழந்தைகளுக்கான தூக்க நேர்ச்சை: பிரபல கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் திருவிழா தொடக்கம்
கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் திருவிழா Image Source: social media
Sivasankari Bose
Sivasankari Bose | Updated On: 13 Mar 2026 12:45 PM IST

கொல்லங்கோடு பத்ரகாளி அம்மன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி மாதம் மீனபரணி நாளை முன்னிட்டு நடைபெறும் தூக்கத்திருவிழா பக்தர்களிடையே முக்கியத்துவம் பெறுகிறது. குறிப்பாக பச்சிளம் குழந்தைகளுக்காக நடைபெறும் தூக்க நேர்ச்சை இந்த திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படுகிறது. குழந்தை பேறு வேண்டியும், பிறந்த குழந்தைகள் நோய் நொடி இன்றி நீண்ட ஆயுளுடன் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடனும் பக்தர்கள் அம்மனை நோக்கி இந்த நேர்ச்சையை நிறைவேற்றுவது வழக்கமாக இருந்து வருகிறது. பல ஆண்டுகளாக தொடரும் இந்த மரபு காரணமாக, சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவிழா காலத்தில் கோவிலுக்கு வருகை தருவது குறிப்பிடத்தக்கதாக கவனிக்கப்படுகிறது.

இரண்டு முக்கிய கோவில் அமைப்புகள்

இந்த திருவிழாவுடன் தொடர்புடைய இரண்டு முக்கிய கோவில் அமைப்புகள் கொல்லங்கோடு பகுதியில் காணப்படுகின்றன. கொல்லங்கோடு கண்ணனாகத்தில் இருந்து மேற்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தொலைவில் வட்டவிளையில் மூலஸ்தான கோவில் அமைந்துள்ளது. அதேபோல் கண்ணனாகத்தில் இருந்து கிழக்கு நோக்கி சுமார் 500 மீட்டர் தொலைவில் வெங்கஞ்சியில் தூக்கத்திருவிழா கோவில் அமைந்துள்ளது. இந்த இரண்டு கோவில்களையும் மையமாகக் கொண்டு திருவிழா நிகழ்ச்சிகள் நடைபெறுவது வழக்கமாக இருந்து வருகிறது. திருவிழா காலத்தில் இந்த இரு கோவில்களிலும் நடைபெறும் பூஜை மற்றும் ஊர்வல நிகழ்ச்சிகள் பக்தர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நடைபெறுகின்றன.

அதிகாலை பூஜைகளுடன் தொடங்கிய நிகழ்ச்சிகள்

இந்நிலையில் இந்த ஆண்டுக்கான தூக்கத்திருவிழா இன்று வெள்ளிக்கிழமை மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அதனை முன்னிட்டு இன்று அதிகாலை 5 மணிக்கு மூலஸ்தான கோவிலில் பள்ளி உணர்த்தல் நிகழ்ச்சியும் மகா கணபதி ஹோமமும் நடைபெற்றது. தொடர்ந்து காலை 6 மணிக்கு திருவிழா கோவிலில் மகா கணபதி ஹோமம் நடைபெற்றதாக கோவில் நிர்வாகத்தினர் தெரிவித்துள்ளனர். இந்த பூஜை நிகழ்ச்சிகளில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு அம்மனை வழிபட்டது குறிப்பிடத்தக்கதாக இருக்கிறது.

கொடிமரம் வரவேற்பு மற்றும் காலை ஊர்வலம்

இதனை தொடர்ந்து காலை 7 மணிக்கு கொடிமரம் மேளதாளங்களுடன் திருவிழா கோவிலுக்கு கொண்டுவரப்பட்டது. அதன் பின்னர் காலை 8.30 மணியளவில் அம்மன் மூலஸ்தான கோவிலில் இருந்து எழுந்தருளி புறக்கால் கிணறு வலம் வந்து கரிவயல், கொல்லங்கோடு மடம், சாஸ்தா நகர் மற்றும் திருமன்னம் சந்திப்பு ஆகிய பகுதிகளுக்கு சென்று பூஜைகள் பெற்றது. இந்த வழிபாட்டு நிகழ்ச்சிகள் முடிந்த பின்னர் அம்மன் மீண்டும் மூலஸ்தான கோவிலுக்கு வந்து சேர்ந்தது. இந்த ஊர்வலத்தை வழியெங்கும் பக்தர்கள் மலர் தூவி வரவேற்றதாக கூறப்படுகிறது.

Also Read: காரடையான் நோன்பு 2026.. விரத முறைகள் மற்றும் வழிபாட்டு ரகசியங்கள்..

மாலை ஊர்வலம் மற்றும் கொடியேற்ற நிகழ்ச்சி

இதனை தொடர்ந்து மாலை 3 மணிக்கு அம்மன் மீண்டும் மேளதாளங்கள் முழங்க எழுந்தருளி கண்ணனாகம் சந்திப்பு வழியாக கீழ வீடு நாகராஜா காவு மற்றும் இளம்பாலமுக்கு மகாதேவர் கோவில் வழியாக திருவிழா கோவிலை அடைகிறது. பின்னர் இரவு 7 மணியளவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வாகக் கருதப்படும் கொடியேற்றம் நடைபெறுகிறது. இந்த கொடியேற்ற நிகழ்வை தந்திரி கொட்டாரக்கரை நீலமனை மடம் ஈஸ்வரன் போற்றி நடத்துகிறார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வாணவேடிக்கையுடன் திருவிழா தொடக்கம்

கொடியேற்ற நிகழ்ச்சிக்கு பின்னர் வாணவேடிக்கை நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதனைத் தொடர்ந்து தூக்கத்திருவிழாவின் தொடக்க நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. திருவிழாவின் அடுத்தடுத்த நாட்களில் நடைபெறும் பல்வேறு பூஜைகள் மற்றும் வழிபாட்டு நிகழ்ச்சிகளுக்காக பக்தர்கள் பெரும் எதிர்பார்ப்புடன் காத்திருப்பதாக கோவில் வட்டாரங்களில் பேசப்படுகிறது. இந்த ஆண்டும் தூக்க நேர்ச்சை நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்க வாய்ப்புள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

Follow Us