AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

காரடையான் நோன்பு 2026.. கடைப்பிடிக்கும் முறை.. தாலிக்கயிறு மாற்ற உகந்த நேரம்.. முழு விவரம்..

Karadaiyan Nombu 2026: வரலட்சுமி விரதத்தைப் போலவே, இதுவும் சுமங்கலிப் பெண்கள் போற்றும் ஒரு புனிதமான விரதமாகும். வழக்கமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். அப்படி வழக்கம் இல்லாதவர்கள் அன்று அம்பாளை (குறிப்பாக காமாட்சி அம்மனை) வழிபாடு செய்தாலே போதுமானது என்பது ஐதீகம்.

esakkiraja selvarathinam
Esakkiraja Selvarathinam | Updated On: 13 Mar 2026 13:52 PM IST
காரடையான் நோன்பு (சாவித்திரி விரதம்) என்பது சுமங்கலிப் பெண்கள் தங்கள் கணவரின் ஆயுள் அதிகரிக்கவும், குடும்பம் சிறப்பாக இருக்கவும் கடைபிடிக்கும் ஒரு உன்னதமான விரதமாகும். இந்த ஆண்டு காரடையான் நோன்பு மார்ச் 14, 2026 (சனிக்கிழமை) அன்று வருகிறது. மாசி மாதத்தின் நிறைவும் பங்குனி மாதத்தின் பிறப்பும் இணையும் தருணத்தில் இது கொண்டாடப்படுகிறது. இந்த விரதத்தின் முக்கியத்துவத்தை விளக்கும் தொகுப்பு கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

1 / 5
விரதத்தின் நோக்கம்: கணவன்-மனைவி இடையே ஒற்றுமை நிலவவும், கணவன் தீர்க்காயுளுடன் வாழவும், குடும்பம் மற்றும் குழந்தைகள் ஆரோக்கியமாக இருக்கவும் இந்த விரதம் மேற்கொள்ளப்படுகிறது. வரலட்சுமி விரதத்தைப் போலவே, இதுவும் சுமங்கலிப் பெண்கள் போற்றும் ஒரு புனிதமான விரதமாகும். வழக்கமாக இருப்பவர்கள் இந்த விரதத்தைக் கடைபிடிக்கலாம். அப்படி வழக்கம் இல்லாதவர்கள் அன்று அம்பாளை (குறிப்பாக காமாட்சி அம்மனை) வழிபாடு செய்தாலே போதுமானது.

2 / 5
தாலிக்கயிறு மாற்றிக்கொள்ள உகந்த நேரம்: காலை: 7.35 மணி முதல் 8.20 மணி வரை. மாலை: 6.00 மணி முதல் 8.00 மணி வரை. இரவு: சிலருக்குப் பங்குனி பிறக்கும் தருணத்தில் மாற்றும் வழக்கம் இருந்தால், இரவு 9.00 மணி முதல் 10.00 மணிக்குள் செய்து கொள்ளலாம். தாலிக்கயிறு மாற்றுவது கட்டாயம் அல்ல, உங்களுக்கு வழக்கம் இருந்தால் மட்டுமே செய்யவும்.

3 / 5
வழிபாட்டு முறை மற்றும் நெய்வேத்தியம்: வீட்டில் காமாட்சி அம்மனின் திருவுருவப் படம் இருந்தால், அதற்குப் பூஜை செய்யலாம். கார அடை மற்றும் இனிப்பு அடை (வெல்லம் சேர்த்தது). வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு. இந்த வழிபாட்டிற்கு மிகவும் அவசியமானது உருகாத வெண்ணெய். "உருகாத வெண்ணையும் ஓரடையும் நான் நூற்றேன், ஒரு காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும்." என்று மந்திரம் சொல்லலாம்.

4 / 5
மந்திரம் சொல்லி, தூபதீப ஆராதனை செய்து பூஜையை நிறைவு செய்யலாம். பூஜைக்குப் பின், கணவரிடமிருந்து புதிய மஞ்சள் சரடு கட்டிக்கொண்டு, தாலியில் மஞ்சள் குங்குமம் இட்டு அவர் காலில் விழுந்து ஆசி பெறலாம். வீட்டில் உள்ள மூத்த சுமங்கலிகளின் ஆசி பெறுவதும், மற்ற சுமங்கலிகளுக்குத் தாம்பூலம் கொடுத்து ஆசி பெறுவதும் சிறப்பு.

5 / 5
Follow Us