Latest Newsவீடியோதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்

Astrology: ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு திருமண யோகம் வந்தாச்சு!

ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சுக்கிரன் ரிஷப ராசியில் சஞ்சரிக்கிறது. இது மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ராசிகளுக்கு திருமணத்தில் நல்ல பலன்களைத் தரும் என ஜோதிடம் கூறுகிறது. இவர்கள் ஜூலை மாதத்தில் திருமண முயற்சிகளைத் தொடங்கலாம். வெளிநாட்டு வரன், காதல் திருமணம் போன்ற வாய்ப்புகளும் உள்ளன.

Astrology: ரிஷப ராசியில் சுக்கிரன்.. இந்த 6 ராசிக்கு திருமண யோகம் வந்தாச்சு!
ஜோதிடப்பலன்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Published: 30 Jun 2025 17:01 PM

ஜோதிட சாஸ்திரத்தில் கிரகங்களின் பெயர்ச்சி என்பது மிக முக்கியமானது. இது தனி மனித வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றங்களை உண்டாக்கும். இதில் சக்தி வாய்ந்த கிரகங்களில் ஒன்றாக உள்ள சுக்கிரன் தனது சொந்த ராசியான ரிஷபத்தில் ஜூன் 26 முதல் ஜூலை 26 வரை சஞ்சரிக்கிறார். இதனிடையே ஜோதிட சாஸ்த்திரத்தின்படி ரிஷப ராசியானது இயற்கையான குடும்ப ராசியாக குறிப்பிடப்படுகிறது. இந்த சுக்கிரன் பெயர்ச்சி காலக்கட்டத்தில் திருமண முயற்சிகள் மற்றும் திருமண தடை பாதிக்கப்பட்டவர்களுக்கு நல்ல செய்தி வந்து சேரும் என கணிக்கப்பட்டுள்ளது. இதில் 2025 ஆம் ஆண்டு ஜூலை 8 ஆம் தேதிக்குப் பிறகு சில ராசிக்காரர்களுக்கு திருமணம் தொடர்பான தகவல்கள் வந்து சேரும். அந்த வகையில் மேஷம், ரிஷபம், கடகம், கன்னி, விருச்சிகம் மற்றும் மகரம் ஆகிய ராசிக்காரர்களுக்கு என்னென்ன பலன்கள் பற்றிக் காணலாம்.

  1. மேஷம்: தன்னுடைய ராசியில் சுக்கிரன் சஞ்சரிப்பதால், மேஷ ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் காலம் வந்து விட்டது. ஜூலை இரண்டாவது வாரத்தில் இருந்து நீங்கள் திருமண முயற்சிகளைத் தொடங்குவது நல்லது.இந்த காலக்கட்டம் மிகவும் சாதகமாக உள்ளது. பொதுவாக குடும்ப உறவுகளுக்குள் வரன் அமையும் வாய்ப்புள்ளது. சுக்கிரன் சஞ்சாரம் மிகவும் வசதியான குடும்பத்துடன் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது.
  2. ரிஷபம்: இந்த ராசியின் அதிபதியான சுக்கிரன் தன் ராசியிலேயே சஞ்சரிப்பதால், ராசிக்காரர்களுக்கு மிக விரைவில் திருமணம் நடக்க வாய்ப்புள்ளதாக சொல்லப்பட்டுள்ளது. திருமண வரன் நன்கு அறியப்பட்டவர்களிடையே ஏற்படலாம். இதற்காக நீங்கள் சிறிய முயற்சி மட்டுமே எடுப்பீர்கள். நீங்கள் ஜூலை முதல் வாரத்தில் இருந்து திருமண முயற்சிகளைத் தொடங்குவது நல்லது. காதல் திருமணத்திற்கும் வாய்ப்புள்ளதால் வெளிப்படையாக பேசுங்கள். வெளிநாட்டு வரன் கைகூடாது என்பதால் வீண் முயற்சி வேண்டாம். அக்டோபர் மாதத்திற்குள் உங்களுக்கு திருமணம் நடைபெறும்.
  3. கடகம்: இந்த ராசிக்கு லாப ஸ்தானத்தில் சுக்கிரன் சஞ்சரிக்கிறார். இந்த ராசிக்காரர்களுக்கு வசதியான குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருடன் திருமணம் வரன் அமையும் வாய்ப்புள்ளது. அதேசமயம் நண்பர்கள் மூலம் திருமண உறவு ஏற்படலாம். நீங்கள் ஜூலை மாதம் கடைசி வாரத்தில் திருமணம் தொடர்பாக முயற்சிப்பது நல்லது. வெளிநாட்டில் இருந்தும் வரன் வரும் வாய்ப்புள்ளதால் தீர விசாரித்து முடிவெடுங்கள். திருமணம் அக்டோபர் இரண்டாம் வாரத்திற்குள் உறுதியாகலாம்.
  4. கன்னி: இந்த ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்ட வீட்டில் சுக்கிரன் சஞ்சரித்துள்ளார். அதனால் இந்த ராசிக்காரர்களுக்கு விரைவில் திருமணம் நடப்பதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளது. குறிப்பாக வெளிநாட்டு வரன் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் ஜூலை முதல் வாரத்தில் திருமண ஏற்பாடுகளைத் தொடங்குவது சிறந்ததாகும். அக்டோபர் மாதத்திற்குள் திருமணம் நடப்பதற்கான அறிகுறிகள் உள்ளதால் முயற்சியை கைவிடாதீர்கள். வெளிநாட்டில் குடியேறிய உறவினர்கள் மூலம் திருமண வரன்கள் அமையலாம். கன்னி ராசிக்காரர்களின் திருமணம் பாரம்பரியமாகவும் மிகவும் ஆடம்பரமாகவும் அமையலாம்.
  5. விருச்சிகம்: இந்த ராசிக்காரர்களுக்கு திருமண வீட்டில் சுக்கிரன் சஞ்சரிப்பது மிகவும் சாதகமானதாக அமைந்துள்ளது. எடுக்கும் எந்தவிதமான திருமண முயற்சிகள் அமையும். அதற்காக இப்போது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டால் நவம்பர் மாதத்திற்குள் திருமணம் நடக்க வாய்ப்புள்ளது. அதிகப்பட்சமாக வெளிநாடு அல்லது தொலைதூரத்தில் உறவு வழியாக திருமண வரன் ஏற்பட வாய்ப்புள்ளது. காதல் திருமணத்திற்கும் சிறிது வாய்ப்பு உள்ளது. அதேசமயம் திருமணம் பிரமாண்டமாக நடக்க வாய்ப்புள்ளது.
  6. மகரம்: சுக்கிரன் இந்த ராசிக்கு 5வது வீட்டில் சஞ்சரித்துள்ளது. இதனால் இந்த ராசியில் பிறந்தவர்களுக்கு மிக விரைவில் திருமணம் நடக்கும். எந்த கவலையும் படாதீர்கள். ஜூலை மாதம் திருமண முயற்சிகள் எடுப்பது மிகவும் சாதகமாக அமையும். சிறிது முயற்சி செய்தால், குடும்ப உறவுக்குள்ளும் திருமணம் நிச்சயிக்கப்பட வாய்ப்புள்ளது. நவம்பர் மாதத்தின் இரண்டாம் பாதியில் இந்த ராசிக்காரர்களுக்கு திருமணம் நடக்க வாய்ப்புகள் உள்ளன. அதேசமயம் உங்களுக்குப் பிடித்த நபருடன் திருமணம் நடைபெறுவதற்கான அறிகுறிகள் உள்ளது.

(ஜோதிட சாஸ்திரங்களின் அடிப்படையில் இந்த கட்டுரையில் இடம் பெற்றுள்ள தகவல்கள் உள்ளது. இதற்கு அறிவியல்பூர்வ விளக்கம் இல்லை. அதனால் டிவி9 தமிழ் பொறுப்பேற்காது)