தினமும் மாற்றப்படும் பூரி ஜெகன்நாதர் கோயில் கொடி.. ஏன் தெரியுமா?
ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன்நாதர் கோயிலில் தினமும் மாற்றப்படும் கொடி, பல நூற்றாண்டுகளாக காற்றின் எதிர் திசையில் பறப்பது இறைவன் அருளின் அடையாளம் என நம்பப்படுகிறது. ஒருநாள் இந்த கொடி மாற்றப்படாவிட்டால் கோயில் 18 ஆண்டுகள் மூடப்படும் என்பது ஆகம விதியாகும்.

பொதுவாக இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு விதமான மத வழிபாட்டு தலங்கள் நாம் திரும்பும் திசையெங்கும் அமைக்கப்பட்டுள்ளது. இங்கு ஒவ்வொரு மதத்தினரும், மற்ற மதத்தினருடன் நல்லிணக்கத்துடன் வாழ்ந்து வருகின்றனர். அதேசமயம் ஒவ்வொரு வழிபாட்டு தலங்களுக்கும் தனித்துவமான வரலாறு என்பது உள்ளது. அந்த வகையில் ஒடிசா மாநிலத்தில் உள்ள பூரி ஜெகன் நாதர் கோயிலில் பின்பற்றப்படும் சம்பிரதாயம் பற்றி நாம் காணலாம். இந்த கோயில் விஷ்ணு பகவானின் ஓர் அவதாரமாக கருதப்படும் ஜெகன்நாதருக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. அவந்தி மன்னர் இந்திரத்யும்னர் தான் இந்த கோயிலைக் கட்டினார். இந்த கோயிலில் ஆண்டுதோறும் 3 தெய்வங்களை பூஜிக்கும் வகையில் நடைபெறும் ரத யாத்திரை என்பது மிகவும் பிரசித்திப் பெற்றது. இப்படியான நிலையில் இந்த பூரி ஜெகன்நாதர் கோயில் கோபுரத்தில் உள்ள கொடி தினமும் மாற்றப்பட்டு வருகிறது. சுமார் 216 அடி உயரம் கொண்ட கோயில் கோபுரத்தின் உச்சிக்கு எந்தவித பாதுகாப்பு உபகரணமும் இல்லாமல் அர்ச்சகர் ஏறி சென்று வருகிறார். அது ஏன் என்பது பற்றி நாம் காணலாம்.
கொடி மாற்றப்படும் காட்சி
The #Jagannath temple in Puri, priest changes the flag atop the temple which is 214 feet high, everyday without any ropes or safety gear !!!! Pure faith 🙏🙏#RathYatra2025 #RathaJatrapic.twitter.com/7zSaTKDNMS
— Aryan (@chinchat09) June 27, 2025




என்ன காரணம் தெரியுமா?
பல நூற்றாண்டுகளாக பறந்து வரும் ஜகன்னாதர் கோவிலின் மேலே உள்ள கொடி காற்றின் எதிர் திசையில் பறந்து கொண்டிருப்பதாக சிறப்பான ஒன்றாகும். இயற்கைக்கு அப்பாற்பட்ட அடையாளமாகக் கருதப்படும் இந்த நிகழ்வு இறைவன் ஜெகன்நாதர் ஆசியால் நடைபெறுவதாக நம்பப்படுகிறது. ஒருவேளை இந்த கொடியை ஒருநாள் மாற்றாமல் விட்டால் கோயில் 18 ஆண்டுகளுக்கு மூடப்பட வேண்டும் என்பது ஆகம விதியாகும். இந்தக் கொடி பதிதபபன பன என்று அழைக்கப்படும் நிலையில் இது பூரியில் ஜெகன்நாதரின் இருப்யையும், அவர் மக்களின் பாதுகாப்பையும் உறுதி செய்வதாக ஐதீகமாக பார்க்கப்படுகிறது.
மேலும் ஆன்மிக ரீதியாக இந்த கோயில் மங்களகரமான இடம் என்பதை குறிப்பதாகவும் உள்ளது. இந்த விழாவில் ஜெகன்நாதர் , பாலபத்ரர் மற்றும் சுபத்ரா ஆகிய தெய்வங்களை வழிபடும் வகையில் நடக்கும் தேர் திருவிழா ஒவ்வொரு ஆண்டும் ஜூன் இறுதி அல்லது ஜூலை முதல் வாரத்தில் நடைபெறுவது வழக்கம். சுதந்திரம் அடைந்த பிறகு கோயில் சிறந்த நிர்வாக அமைப்பை பெறுவதற்கு என பூரி கோயிலுக்கு தனிச் சட்டம் இயற்றப்பட்டுள்ளது.ஒவ்வொரு ஆண்டும் இந்த கோயிலுக்கு 3 மில்லியனுக்கு அதிகமான மக்கள் வருகை தருவதாக சொல்லப்படுகிறது.