Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

மத்திய பட்ஜெட் 2026: தெரிந்துக்கொள்ள வேண்டிய 10 முக்கிய பொருளாதார வார்த்தைகள்..

மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், வரும் பிப்ரவரி 1 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மத்திய பட்ஜெட் 2026-ஐ தாக்கல் செய்ய உள்ளார். இதில் தெரிந்துக்கொள்ள வேண்டிய விஷயங்கள் குறித்து பார்க்கலாம். பணவீக்கம் என்பது பொருளாதாரத்தில் பொருட்கள் மற்றும் சேவைகளின் விலைகள் தொடர்ந்து உயர்வதை குறிக்கிறது. பணவீக்கம் அதிகரிக்கும் போது, பணத்தின் வாங்கும் திறன் குறைகிறது. பணவீக்க விகிதம் என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் விலைகள் எவ்வளவு வேகமாக உயருகின்றன என்பதைக் காட்டுகிறது.

Aarthi Govindaraman
Aarthi Govindaraman | Published: 29 Jan 2026 14:55 PM IST

1 / 6
நேரடி வரி என்பது நேரடியாக தனிநபர்கள் அல்லது நிறுவனங்களின் மீது விதிக்கப்படும் வரியாகும். இந்த வரியை வேறு ஒருவருக்கு மாற்ற முடியாது. வருமானவரி மற்றும் நிறுவன வரி (கார்ப்பரேட் டாக்ஸ்) இதற்கான உதாரணங்களாகும். மறைமுக வரிகள் பொருட்கள் மற்றும் சேவைகளின் மீது விதிக்கப்படுகின்றன. ஆனால் இறுதியில் அதன் சுமையை பொதுமக்களே ஏற்கின்றனர். உற்பத்தி வரி (எக்சைஸ் டியூட்டி), சுங்க வரி (கஸ்டம்ஸ் டியூட்டி) ஆகியவை இதற்கான உதாரணங்கள்.

2 / 6
நிதிக் கொள்கை என்பது பொருளாதார வளர்ச்சி, வேலைவாய்ப்பு மற்றும் பொருளாதார நிலைத்தன்மையை நிர்வகிக்க அரசாங்கம் எடுக்கும் வரி மற்றும் பொது செலவுகள் தொடர்பான முடிவுகளை குறிக்கிறது. இந்த முடிவுகள் மத்திய பட்ஜெட்டில் நேரடியாக பிரதிபலிக்கப்படுகின்றன. நாணயக் கொள்கை இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) கட்டுப்பாட்டில் உள்ளது. இது பணப்புழக்கம் மற்றும் வட்டி விகிதங்களை கட்டுப்படுத்துவதன் மூலம் பணவீக்கத்தை நிர்வகித்து பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கிறது.

3 / 6
வருவாய் செலவுகள் என்பது சொத்து உருவாக்கம் அல்லது எதிர்கால வருமானத்தை உருவாக்காத செலவுகளை குறிக்கிறது. சம்பளங்கள், ஓய்வூதியம், மானியங்கள் மற்றும் நிர்வாகச் செலவுகள் இதில் அடங்கும். இந்தியாவின் மறைமுக வரி முறையை எளிமைப்படுத்தும் நோக்கில், பல்வேறு மத்திய மற்றும் மாநில வரிகளை ஒருங்கிணைத்து சரக்கு மற்றும் சேவை வரி (GST) அறிமுகப்படுத்தப்பட்டது.

4 / 6
மொத்த உள்நாட்டு உற்பத்தி என்பது ஒரு குறிப்பிட்ட காலப்பகுதியில் ஒரு நாட்டில் உற்பத்தி செய்யப்படும் அனைத்து பொருட்கள் மற்றும் சேவைகளின் மொத்த மதிப்பைக் குறிக்கிறது. இது ஒரு நாட்டின் பொருளாதார நிலையை மதிப்பிடும் முக்கிய குறியீடாகும்.  அரசின் மொத்த செலவுகள், கடன்களைத் தவிர்த்து பெறப்படும் வருவாயை விட அதிகமாக இருக்கும் போது உருவாகும் நிலைதான் நிதிப் பற்றாக்குறை. இது அரசு எவ்வளவு அளவு கடன் மீது சார்ந்துள்ளது என்பதை காட்டுகிறது.

5 / 6
வருவாய் செலவுகள் மற்றும் வருவாய் வரவுகள் (Revenue Receipts) இடையிலான இடைவெளியே வருவாய் பற்றாக்குறை. அரசின் வழக்கமான செலவுகள் அதன் நிலையான வருமானத்தை விட எவ்வளவு அதிகமாக உள்ளன என்பதை இது வெளிப்படுத்துகிறது.

6 / 6