AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

அழுதுட்டேன், ஆனா விடல! நடிகை நிமிஷா 14 கிலோ எடையை ஏற்றி இறக்கியது எப்படி?

Nimisha Sajayan: நடிகை நிமிஷா சஜயன் தனது புதிய திரைப்படக் கதாபாத்திரத்திற்காக 14 கிலோ உடல் எடையை அதிகரித்து 72 கிலோ வரை உயர்ந்தார். படப்பிடிப்பு முடிந்த பின் எடையைக் குறைக்கும் முயற்சியில் கடுமையான மன அழுத்தம், தூக்கமின்மை மற்றும் உடல் சோர்வு போன்ற பல சவால்களைச் சந்தித்தார்.

அழுதுட்டேன், ஆனா விடல! நடிகை நிமிஷா 14 கிலோ எடையை ஏற்றி இறக்கியது எப்படி?
நடிகை நிமிஷாImage Source: pinrest
Sivasankari Bose
Sivasankari Bose | Published: 12 Sep 2026 13:32 PM IST

திரைப்படங்களில் தான் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு தத்ரூபமாகப் பொருந்துவதற்காக நடிகை நிமிஷா சஜயன் தனது உடல் எடையில் மிகப்பெரிய மாற்றத்தைச் செய்தார். ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ படத்தில் காவல அதிகாரியாக நடிக்க அவர் நாள் ஒன்றுக்கு 8,000 கலோரிகள் வரை உட்கொண்டு 14 கிலோ எடையை அதிகரித்தார். 58 கிலோவில் இருந்த அவரது உடல் எடை படப்பிடிப்பின் போது 72 கிலோவாக உயர்ந்தது. படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் பழைய எடைக்குத் திரும்புவது அவருக்கு மிகப்பெரிய உடல் மற்றும் மன ரீதியான போராட்டமாக மாறியது. எடை குறைப்பு பயணத்தின் போது கடுமையான தூக்கமின்மை, மனநிலை மாற்றங்கள் மற்றும் உடல் சோர்வு காரணமாக அவர் மனதளவில் பெரிதும் பாதிக்கப்பட்டார். தனது உடற்பயிற்சியாளரின் சரியான வழிகாட்டுதல் மற்றும் தொடர் முயற்சியால் அவர் மீண்டும் பழைய உடலமைப்பைப் பெற்றார். உடல் எடைக் குறைப்பு என்பது வெறும் உடற்பயிற்சி மட்டுமல்ல, அது மன உறுதியையும் சார்ந்த ஒன்று என்பதைத் தனது இந்த அனுபவத்தின் மூலம் அவர் நிரூபித்துள்ளார்.

கதாபாத்திரத்திற்காக உடல் எடையில் மாற்றம்

திரைப்படங்களில் தாங்கள் ஏற்கும் கதாபாத்திரத்திற்கு உயிர் கொடுப்பதற்காக நடிகர்கள் தங்களின் உடலமைப்பில் மாற்றங்களைச் செய்வது வழக்கமான ஒன்றாகும். அந்த வகையில் பிரபல நடிகை நிமிஷா சஜயன், ‘பபிதா சிங் ரிப்போர்ட்டிங்’ (Babita Singh Reporting) என்ற படத்தில் உதவி சப்-இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடிப்பதற்காகத் தனது உடல் எடையில் தீவிர மாற்றத்தைக் கொண்டு வந்தார். ஆரம்பத்தில் 58 கிலோ எடையில் இருந்த இவர், குறுகிய காலத்தில் நாள் ஒன்றுக்கு சுமார் 8,000 கலோரிகள் வரை உண உட்கொண்டு, தனது எடையை 72 கிலோவாக உயர்த்தி 14 கிலோ வரை அதிகரித்தார்.

எடையைக் குறைப்பதில் சந்தித்த சவால்கள்

கதாபாத்திரத்திற்காக எடையை அதிகரிப்பது ஒருபுறம் என்றால், படப்பிடிப்பு முடிந்த பிறகு மீண்டும் பழைய எடைக்குத் திரும்புவது அவருக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்தது. எடை குறைப்புப் பயணத்தின் தொடக்க நாட்களை நினைவுகூர்ந்த அவர், “முதல் 10 நாட்கள் மிகவும் கடினமாக இருந்தன. தூக்கமின்மை, கடுமையான மனநிலை மாற்றங்கள் (mood swings), உடல் சோர்வு மற்றும் விரக்தி போன்றவை என்னை மிகவும் பாதித்தன. ஒரு கட்டத்தில் என்னால் இதற்கு மேல் முடியாது என்று கூறி எனது பயிற்சியாளரின் முன்னே அழுதுவிட்டேன்” என்று தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

Also Read: ஜிம் பாடிக்கு இதுதான் சீக்ரெட்! அதர்வாவின் ‘டயட்’ லிஸ்ட் இதோ!

பயிற்சியாளரின் உறுதுணையும் வெற்றியும்

இந்தக் கடுமையான காலகட்டத்தில் தனது உடற்பயிற்சியாளர் அலி ஷிஃபாஸ் அளித்த ஆதரவே தனக்கு மிகப்பெரிய பலமாக இருந்தது என்று நிமிஷா தெரிவித்துள்ளார். கடுமையான உடற்பயிற்சிகள் மற்றும் கட்டுப்பாடான உணவுமுறையைப் பின்பற்றி, அவர் வெற்றிகரமாக மீண்டும் தனது பழைய உடலமைப்பைப் பெற்றுள்ளார். உடல் எடைக் குறைப்பு என்பது வெறும் எண்களைக் குறைப்பது மட்டுமல்ல, அது மன உறுதி மற்றும் சரியான வழிகாட்டுதலைப் பொறுத்தது என்பதைத் தனது இந்த அனுபவத்தின் மூலம் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

பொறுப்புத் துறப்பு: இத்தளத்தில் உள்ள லைப்ஸ்டைல், ஆரோக்கியம் மற்றும் உணவு சார்ந்த தகவல்கள் பொதுவான விழிப்புணர்விற்காக மட்டுமே; இவை மருத்துவ ஆலோசனையல்ல. இதில் உள்ள குறிப்புகளைப் பின்பற்றும் முன் தகுந்த நிபுணர் அல்லது மருத்துவரின் ஆலோசனையைப் பெறுவது அவசியமாகும்.

Follow Us