ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் ஒரு கிலோ ஜப்பான் மாம்பழம்.. ஒடிசாவில் விளைய வைத்து அசத்திய விவசாயி!
Japan Mago Sells 3 Lakh Rupees Per KG | இந்தியாவில் பல வகையான மாம்பழங்கள் விளைய வைக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகின்றன. அந்த வகையில், ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படக்கூடிய ஜப்பான் மாம்பழத்தை ஒடிசாவை சேர்ந்த விவசாயி ஒருவர் விளைய வைத்துள்ளார்.
கோடை வெயிலுக்கு மட்டுமன்றி, சில பழங்களுக்கான சிறந்த காலமாகவும் இருக்கும். குறிப்பாக மாம்பழம், பலாப்பழம், தர்பூசணி உள்ளிட்ட பழங்கள் இந்த கோடை காலத்தில் அதிகமாக கிடைக்கும். அதிலும் குறிப்பாக மாம்பழம் பல்வேறு வகைகளில் விற்பனை செய்யப்படும். கோடைக்காலத்தில் மாம்பழங்கள் அதிகமாக கிடைக்கும் என்பதால் சற்று குறைவான விலைக்கே வாங்கிக்கொள்ள முடியும். ஆனால், ஒரு கிலோ மாம்பழம் ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது என்றால் உங்களால் நம்ப முடிகிறதா. உண்மை தான், அத்தகைய சிறப்பான வகை மாம்பழத்தை தான் ஒடிசாவை (Odisha) சேந்த விவசாயி ஒருவர் விளைய வைத்துள்ளார்.
ஒரு கிலோ ரூ.3 லட்சத்திற்கு விற்பனை செய்யப்படும் மாம்பழம்
இந்தியாவில் பல வகையான மாம்பழங்கள் விளைய வைக்கப்படுகின்றன. அந்த ஒவ்வொரு மாம்பழமும் ஒவ்வொரு விலைக்கு விற்பனை செய்யப்படும். உதாரணமாக சொல்ல வேண்டும் என்றால் மாம்பழத்தின் ரகத்தை பொருத்து அவை ஒரு கிலோ ரூ.60 முதல் ரூ.200 வரை விற்பனை செய்யப்படும். ஆனால், ஜப்பானை பூர்வீகமாக கொண்ட ஒருவகை மாம்பழம் ரூ.3 லட்சம் வரை விற்பனை செய்யப்படுகிறது.
இதையும் படிங்க : சோதனை நிறைவு.. விரைவில் பிஎஃப் பணத்தை யுபிஐ மூலம் எடுக்கலாம்?.. மத்திய அமைச்சர் சொன்னது என்ன?




இந்தியாவில் காஸ்ட்லி மாம்பழத்தை விளைய வைத்த விவசாயி
உலக அளவில் மிகவும் விலை உயர்ந்த மாம்பழங்களில் ஒன்றாக இந்த “மியாசாகி” என்று அழைக்கப்படும் ஜப்பான் வகை மாம்பழம் உள்ளது. இதனை இந்தியாவில் விவசாயி ஒருவர் விளைய வைத்துள்ளார். ஒடிசா மாநிலம், மல்கங்கிரி மாவட்டத்தை சேர்ந்த தேபா பதியாமி என்ற விவசாயி தான் இந்த முயற்சியை மேற்கொண்டுள்ளார். இவர் உலகிலேயே மிகவும் விலை உயர்ந்ததாக கருதப்படும் மியாசாகி என்ற மாம்பழத்தை தனது தோட்டத்தில் விளைய வைத்துள்ளார்.
இதையும் படிங்க : இனி வாட்ஸ்அப் மூலம் பிஎஃப் சேவைகளை பெறலாம் – வெளியான தகவல்
நான்கு ஆண்டுகளுக்கு முன்பு சமூக ஆர்வலர் ஒருவரிடம் இருந்து இந்த மாமர கன்றை விவசாயி வாங்கியுள்ளார். ஒடிசாவின் மிக கடுமையான கால சூழலிலும் அவர் அந்த மாமர கன்றை மிகவும் பாதுகாப்பாக வளர்ந்து வந்துள்ளார். தற்போது அந்த மரம், மாம்பழங்களை கொடுத்துள்ளது. உலகிலே மிகவும் விலை உயர்ந்த மாம்பழம் ஒடிசாவில் விளைந்துள்ள தகவலை கேட்டு அக்கம் பக்க கிராமத்தில் இருக்கு மக்கள் தேபாவின் தோட்டத்திற்கு படையெடுத்து வருகின்றனர். மாமரத்தை காண மக்கள் கூட்டம் வருவது மகிழ்ச்சியாக இருந்தாலும், மாம்பழங்கள் திருடு போய்விடுமோ என்ற அச்சத்தில் தேபா தினமும் மாமரத்தின் கீழே காவல் காத்துக்கொண்டு இருக்கிறார்.