AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

46,000 மெட்ரிக் டன் LPG உடன் இந்தியா வந்த நந்தா தேவி டேங்கர் கப்பல்.. உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப ஏற்பாடு!

Nanda Devi Tanker Ship Arrived At Gujarat | இந்தியாவின் நந்தா தேவி டேங்கர் கப்பல், 46,000 மெட்ரிக் டன் எல்பிஜியை ஏற்றிக்கொண்டு ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத்தின் வதினார் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது. அங்கிருந்து இரண்டு கப்பல்கள் மூலம் எல்பிஜி தமிழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.

46,000 மெட்ரிக் டன் LPG உடன் இந்தியா வந்த நந்தா தேவி டேங்கர் கப்பல்.. உடனடியாக தமிழகத்திற்கு அனுப்ப ஏற்பாடு!
இந்தியா வந்த நந்தா தேவி
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 17 Mar 2026 14:48 PM IST

அகமதாபாத், மார்ச் 17 : ஹோர்முஸ் நீரிணை (Strait of Hormuz) வழியாக கப்பல்கள் கடந்துச் செல்வது சவாலாக இருந்து வந்தா நிலையில், இந்தியாவின் நந்தா தேவி என்ற டேங்கர் கப்பல் ஹோர்முஸ் நீரிணியை கடந்து குஜராத்தின் (Gujarat) வதினார் துறைமுகத்தை வந்தடைந்தது. இந்த கப்பலில் இருந்து எல்பிஜி இரண்டு கப்பல்களில் பிரிக்கப்பட்டுள்ள உடனடியாக தமிழ்நாட்டுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது.  கடந்த சில நாட்களாக இந்தியா கேஸ் சிலிண்டர் தட்டுப்பாட்டை சந்தித்து வந்த நிலையில், இதன் மூலம் சற்று சிக்கல் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஹொர்முஸ் நீரிணையை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஈரான்

ஈரான் மீது தொடர் தாக்குதல்களை நடத்தி வரும் இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஈரான், உலகின் பிரதான கப்பல் போக்குவரத்து வழித்தடமான ஹோர்முஸ் நீரிணையை மூடியது. இதன் காரணமாக கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல முடியாத நிலை நிலவி வந்தது. காரணம், ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்லும் கப்பல்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வந்தது.

இதையும் படிங்க : Odisha Fire : மருத்துவமனையில் பெரும் தீ விபத்து.. 10 பேர் உயிரிழப்பு.. ஒடிசாவில் சோகம்!

ஹோர்முஸ் நீரிணையை கடக்க முடியாததன் காரணமாக இந்தியாவில் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு நிலவி வந்தது. இந்த நிலையில் தான் ஈரான் வெளியுறத்துறை அமைச்சர் அப்பாஸ் அரஷி உடன் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெயசங்கர் பேச்சுவார்த்தை நடத்தினார். இதனை தொடர்ந்து இந்தியாவின் ஷிவாலிக் மற்றும் நந்தா தேவி ஆகிய எல்பிஜி டேங்கர் கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல ஈரான் அனுமதி வழங்கியது.

ஹோர்முஸ் நீரிணையை தாண்டி வந்த இரண்டு இந்திய கப்பல்கள்

ஹோர்முஸ் நீரிணையை கடந்து செல்ல இந்திய கப்பல்களுக்கு ஈரான் அனுமதி வழங்கிய நிலையில், அவற்றில் ஷிவாலிக் எல்பிஜி டேங்கர் கப்பல் குஜராத்தின் முந்தரா துறைமுகத்திற்கு மார்ச் 16, 2026 அன்று வந்தடைந்தது. இந்த நிலையில், ஈரான் அனுமதி வழங்கி மற்றொரு டேங்கர் கப்பலான நந்தா தேவி தற்போது ஹோர்முஸ் நீரிணையை கடந்து குஜராத்தின் வனிதார் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இதையும் படிங்க : தேர்தல் நடத்தை விதிகள்.. எவ்வளவு ரொக்கப்பணம் வாகனத்தில் கொண்டு செல்லலாம் தெரியுமா?

தற்போது இந்தியா வந்துள்ள நந்தா தேவி டேங்கர் கப்பல் சுமார் 46,000 மெட்ரிக் டன் எல்பிஜியை கொண்டு வந்துள்ளது. முன்னதாக இந்தியா வந்தடைந்த ஷிவாலிக் டேங்கர் கப்பல் சுமார் 40,000 மெட்ரிக் டன் எல்பிஜியை கொண்டு வந்தது. இதன் மூலம் இந்தியாவின் கேஸ் சிலிண்டர் பற்றாக்குறைக்கு தற்காலிகமாக திர்வு கிடைக்கும் சூழல் உருவாகியுள்ளது.

Follow Us