AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

இன்ஸ்டா ரீல்ஸ்க்கு அடிமையான மனைவி… ஆத்திரத்தில் கணவர் செய்த கொடூர செயல்.. நடந்தது என்ன?

Karnataka Murder : கர்நாடக மாநிலத்தில் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் தொடர்ந்து பார்த்து வந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கணவன் கொலை செய்துள்ளார். அடிக்கடி ரீல்ஸ் பார்த்து வந்ததால், இருவருக்கும் சண்டை ஏற்பட்டு வந்த நிலையில், ஆத்திரத்தில் கணவர் இந்த கொடூர செயலை செய்துள்ளது விசாரணையில் தெரியவந்துள்ளது.

இன்ஸ்டா ரீல்ஸ்க்கு அடிமையான மனைவி… ஆத்திரத்தில்  கணவர் செய்த கொடூர செயல்.. நடந்தது என்ன?
மாதிரிப்படம்
Umabarkavi K
Umabarkavi K | Updated On: 22 Jun 2025 18:21 PM IST

கர்நாடகா, ஜூன் 22 : கர்நாடக மாநிலம் உடுப்பி மாவட்டத்தில் பெண்ணை, அவரது கணவர் கொலை செய்துள்ளார். மனைவி அடிக்கடி இன்ஸ்டாகிராம் ரிலீஸை பார்த்து வந்ததால், ஆத்திரத்தில் அவரை கொலை செய்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.  கர்நாடக மாநிலம் உடுப்பு மாவட்டம் பிரம்மவரா தாலுகாவில் உள்ள ஹிலியானா கிராமத்தில் வசித் வருவர் 42 வயதான கணேஷ் பூஜார். அவரது மனைவி ரேகா (27). இவர் சங்கரநாராயணாவில் உள்ள ஒரு பெட்ரோல் பங்கில் உதவியாளராகப் பணிபுரிந்தார். பெண் ரேகா சமுக வலைதளங்களில் ஆக்டிவாக இருப்பதாக தெரிகிறது. அடிக்கடி இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பார்த்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால், கணவர் மனைவிக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளதாக கூறப்படுகிறது.   மேலும், பலமுறை மனைவி பெண் ரேகாவை அவர் தாக்கியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

மனைவியை கொன்ற கணவன்

இந்த நிலையில், சம்பவத்தன்று கணவர் கணேஷ் வேலை முடிந்து வீட்டிற்கு திரும்பி இருக்கிறார். அப்போது, கணவர் கணேஷ் வீட்டிற்கு வந்தபோதும், மனைவி ரேகா செல்போனில் இன்ஸ்டாகிராம் ரீல்ஸ் பார்த்துக் கொண்டிருந்ததாக தெரிகிறது.

இதனை பார்த்து ஆத்திரம் அடைந்த கணவர் கணேஷ் மனைவை திட்டி இருக்கிறார். இதனால், இருவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டு சண்டையாக மாறியது. ஒருகட்டத்தில் ஆத்தியில் அருகில் கிடந்த கத்தியை எடுத்து ரேகாவின் கழுத்தில் குத்தி இருக்கிறார்.

இதில், ரேகா ரத்த வெள்ளத்தில் சரிந்துள்ளார். இதனை அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார்,  ரேகாவின் உடலை மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் அவர் உயிரிழந்துவிட்டதாக வறியுள்ளனர்.

அதிர்ச்சி காரணம்

மேலும், பெண்ணின் உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து கணேஷை கைது செய்தனர்.  இன்ஸ்டாகிராமில் ரிலீஸ் பார்த்துக் கொண்டிருந்ததால், ஆத்திரத்தில் மனைவியை கணவன் கொலை செய்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

முன்னதாக, சென்னையிலும் கூட, இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் பதிவேற்று செய்து வந்ததால், கணவன் மனைவியை கத்தியால் குத்தி உள்ளார். இந்த சம்பவம் சென்னயில் கொருக்குபேட்டையில் நடந்துள்ளது. கொருக்குபேட்டையைச் சேர்ந்தவர் சங்கர். அவரது மனவி அடிக்கடி இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ரீல்ஸ் பதிவேற்றம் செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால், இவர்கள் இருவருக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்துள்ளது.

இதனால் கண்டுகொள்ளாமல், மனைவி தொடர்ந்து ரீல்ஸ் பதிவேற்றி வந்திருக்கிறார். இந்த நிலையில், 2025 ஜூன் 18ஆம் தேதி மது அருந்திவிட்டு வீட்டிற்கு வந்த சங்கர், இதுகுறித்து மனைவியிடம் சண்டையிட்டு, அவரை கத்தியால் குத்தியுள்ளார். இதனை அடுத்து, அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து காவல் நிலையத்தில் அவர் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து, சங்கர் கைதானார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us