AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுகிரிக்கெட்பொழுதுபோக்குவெப் ஸ்டோரிஸ்லைஃப்ஸ்டைல்வணிகம்டெக்னாலஜிஇந்தியாஆன்மீகம்உலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரி

கொல்ஹாப்பூருக்கு திரும்பும் மாதுரி யானை.. 2 வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை!

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள வன்தாராவில் தங்கி சிசிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் கொல்ஹாப்பூருக்கு திரும்பவுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் யானையை நந்தானி எணன்ற பகுதிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கொல்ஹாப்பூருக்கு திரும்பும் மாதுரி யானை.. 2 வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவ பரிசோதனை!
மாதுரி யானை
Karthikeyan S
Karthikeyan S | Published: 11 Sep 2026 16:41 PM IST

குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள வன்தாராவில் தங்கி சிசிகிச்சை பெற்று வந்த நிலையில் மீண்டும் கொல்ஹாப்பூருக்கு திரும்பவுள்ளது. பல்வேறு கட்டுப்பாடுகளுடன் யானையை நந்தானி எணன்ற பகுதிக்கு அழைத்து செல்ல திட்டமிடப்பட்டுள்ளது. கொல்ஹாப்பூரை சேர்ந்த மாதுரி யானை கடந்த சில ஆண்டுகளாக நாடு முழுவதும் பரபரப்பாக பேசப்பட்டது. இந்த யானை கடந்த 2025 ஆம் ஆண்டு ஜூலை 30 ஆம் தேதி ஜாம்நகரில் உள்ள வன்தாராவுக்கு மாற்றப்பட்டது. உயர் அதிகாரக் குழுவின் உத்தரவின் பேரில் யானை மாற்றப்பட்ட நிலையில், அதனை மும்பை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றமும் உறுதி செய்ததது.

கொல்ஹாப்பூருக்கு திரும்பும் மாதுரி யானை

இந்த நிலையில் மாதுரி யானை, குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள வன்தாராவில் இருந்து மீண்டும் கொல்ஹாப்பூருக்கு திரும்ப உள்ளது. உயர் அதிகாரக் குழு பிறப்பித்த உத்தரவின்படி, பல்வேறு கட்டுப்பாடுகளுடன் யானையை மீண்டும் நந்தானி பகுதிக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மாதுரி யானை அழைத்து செல்லப்படும் காட்சி

 

View this post on Instagram

 

A post shared by NEWS9 (@news9live)


இந்த நிலையில், மாதுரியை மீண்டும் கொல்ஹாப்பூருக்கு அழைத்துச் செல்ல உயர் அதிகாரக் குழு தற்போது அனுமதி வழங்கியுள்ளது. கடந்த 2026 செப்டம்பர் 9ஆம் தேதி உயர் அதிகாரக் குழு இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி உத்தரவு பிறப்பித்தது. சம்பந்தப்பட்ட தரப்புகளின் கருத்துகளைக் கேட்டதுடன், நந்தானியில் மாதுரிக்காக ஏற்படுத்தப்பட்டுள்ள வசதிகளையும் குழு நேரில் ஆய்வு செய்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறிப்பிட்ட சில கடுமையான நிபந்தனைகளுடன் மாதுரியை மீண்டும் கொல்ஹாப்பூருக்கு அழைத்துச் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மாதுரி யானை இனி எந்தவிதமான ஊர்வலங்களிலும் பயன்படுத்தப்படக் கூடாது என்பது முக்கியமான நிபந்தனைகளில் ஒன்றாகும். அதேபோல், யானைக்கு 24 மணி நேரமும் தொடர்ந்து கண்காணிப்பு மற்றும் தேவையான பராமரிப்பு வழங்கப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், மாதுரிக்கு இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை மருத்துவப் பரிசோதனை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது.

Follow Us