AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

அங்கன்வாடி ஊட்டச்சத்து மாவில் பாம்பு.. ம.பியில் கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!

Dead Snake Found Inside The Nutrition Flour | மத்திய பிரதேசத்தில் உள்ள ஒரு அங்கன்வாடியில் கர்ப்பிணி ஒருவர் ஊட்டச்சத்து மாவு வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது, அவர் வாங்கி வந்த மாவில் இறந்த நிலையில் பாம்பு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

அங்கன்வாடி ஊட்டச்சத்து மாவில் பாம்பு.. ம.பியில் கர்ப்பிணிக்கு நடந்த அதிர்ச்சி சம்பவம்!
சத்து மாவில் கிடந்த பாம்பு
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 08 Jun 2026 07:12 AM IST

போபால், ஜூன் 08 : மத்திய பிரதேச (MP – Madhya Pradesh) மாநிலம், போபால் (Bhopal) பகுதியில் அங்கன்வாடியில் இருந்து வாங்கிவரப்பட்ட ஊட்டச்சத்து மாவு பாக்கெட்டில் இறந்த நிலையில் பாம்பு ஒன்று கிடந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கர்ப்பிணி பெண் ஒருவர் அந்த மாவு பாக்கெட்டை வாங்கி வந்த நிலையில், அதில் பாம்பு இருப்பதை கண்டு அவரது குடும்பத்தாரும், கிராம் மக்களும் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

அங்கன்வாடியில் வழங்கப்பட்ட சத்து மாவு பாக்கெட்டில் பாம்பு

மத்திய பிரதேச மாநிலம், பாண்டுர்னா மாவட்டத்தின், கர்காட் காம்தி கிராமத்தை சேர்ந்தவர் கர்ப்பிணி வச்சலா பாய் துர்வே. இவர் அந்த பகுதியில் உள்ள அங்கன்வாடிக்கு சென்று ஊட்டசத்து மாவு பாக்கெட் ஒன்றை வாங்கி வந்துள்ளார். வீட்டிற்கு வந்து அந்த மாவு பாக்கெட்டை திறந்து பார்த்தபோது அவருக்கு அதிர்ச்சி காத்திருந்துள்ளது. அதாவது, அவர் வாங்கி வந்த சத்து மாவு பாக்கெட்டில் இறந்த நிலையில் சிறிய பாம்பு ஒன்று கிடந்துள்ளது.

இதையும் படிங்க : ரேடியோ யுகம் முதல் ரீல்ஸ் யுகம் வரை… பிரதமர்கள் நேரு மற்றும் மோடி ஆகியோருக்கு இடையிலான வேறுபாடு

கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகிய கிராம மக்கள்

அங்கன்வாடி சத்து மாவில் பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண், அது குறித்து தனது குடும்ப உறுப்பினர்களிடம் கூறியுள்ளார். அது கிராமம் முழுவதும் பரவியுள்ளது. இதனால், அந்த கிராம் மக்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர். இந்த நிலையில், கர்ப்பிணி பெண்ணின் குடும்பத்தினர் அளித்த தகவலின் அடிப்படையில் காவல்துறையினர் மற்றும் அதிகாரிகள் சத்து மாவு பாக்கெட்டை கைப்பற்றியுள்ளனர்.

இதையும் படிங்க : மத்திய கிழக்கு போர்.. பொருளாதார ஆலோசனைக் குழுவுடன் பிரதமர் மோடி முக்கிய ஆலோசனை!

இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள ஐந்து போர் கொண்ட விசாரணை குழு நியமிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சத்து மாவு மாதிரி சேகரிக்கப்பட்டு, போபாலில் உள்ள உணவு பரிசோதனை மையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஆய்வக அறிக்கை மற்றும் விசாரணை முடிவுகள் வெளியாகும் பட்சத்தில் இந்த விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் கூறியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us