AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

தாமதமாகும் CBSE Re-Evaluation.. கலக்கத்தில் மாணவர்கள்.. நிலவரம் என்ன?

CBSE Re-Evaluation Getting Delayed | சிபிஎஸ்இ மறுமதிப்பீடு மற்றும் சரிப்பார்பு செயல்முறை இன்று (ஜூன் 01, 2026) தொடங்கும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில், இணையதள சிக்கல் இன்னும் சரிசெய்யப்படாமல் உள்ளது. இதன் காரணமாக ஜேஇஇ கவுன்சிலிங் உள்ளிட்டவற்றுக்காக காத்திருக்கும் மாணவர்கள் கடும் அதிர்ச்சிக்கு உள்ளாகியுள்ளனர்.

தாமதமாகும் CBSE Re-Evaluation.. கலக்கத்தில் மாணவர்கள்.. நிலவரம் என்ன?
மாதிரி புகைப்படம்
Vinalin Sweety
Vinalin Sweety | Updated On: 01 Jun 2026 18:22 PM IST

சென்னை, ஜூன் 01 : சிபிஎஸ்இ (CBSE – Central Board Of Secondary Education) மறுமதிப்பீடு மற்றும் சரிப்பார்பு செயல்முறை தொடங்கும் தேதியாக ஜூன் 01, 2026 அறிவித்திருந்தபோதிலும், விண்ணப்பம் செய்யக்கூடிய இணையதளம் இன்னும் திறக்கப்படாமல் இருப்பது மாணவர்கள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சிபிஎஸ்இ அதிகாரப்பூர்வ இணையதளம் இன்னும் “Under Maintenance” என காட்டி வருகிறது. இதனால் ஆயிரக்கணக்கான மாணவர்கள் குழப்பத்துடன் காத்திருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சிக்கலற்ற சேவையை வழங்க சிபிஎஸ்இ எடுத்த நடவடிக்கை

சிபிஎஸ்இயின் இணையதளம் இன்று இரவுக்குள் பயன்பாட்டுக்கு வரவுள்ளதாக சிபிஎஸ்இ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மாணவர்களுக்கு இணையதளத்தை திறப்பதற்கு முன்னதாக சிக்கல் இல்லாமல் பண பரிவர்த்தனை மேற்கொள்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. முன்னதாக, மாணவர்கள் எந்தவித சிக்கலும் இன்றி சேவைகளை பெற வழிவகை செய்துள்ளதாக அறிவித்தது.

இதையும் படிங்க : “ஒட்டுமொத்த நாட்டிற்கும் பெருமை!”… மீட்கப்பட்ட சோழர் காலப் பொக்கிஷம்.. பிரதமர் மோடி நெகிழ்ச்சி!

கால தாமதத்தால் மாணவர்கள் மத்தியில் அச்சம்

இந்த கால தாமதம் மாணவர்கள் மத்தியில் கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக பொறியியல் படிப்பு உள்ளிட்டவற்றில் இணைவதற்கு உள்ள மாணவர்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். சிபிஎஸ்இ மறுமதிப்பீடு மற்றும் சரிப்பார்பு செயல்முறை ஜூன் 01, 2026 அன்று தொடங்கும் என அறிவிக்கப்பட்ட நிலையில், ஜுன் 02, 2026 முதல் ஜேஇஇ கவுன்சிலிங் தொடங்க உள்ளது. மறுமதிப்பீடு மற்றும் சரிப்பார்பு மேற்கொள்ளப்பட்டு மாணவர்கள் ஜேஇஇ கவுன்சிலிங் பெற ஏதுவாக இருந்த நிலையில், தற்போது இந்த தாமதம் மாணவர்கள் மத்தியில் மிகுந்த குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : CUET-UG தேர்வில் நடந்த டெக்னிக்கல் குழப்பம் என்ன? விளக்கமளித்த TCS

பெரும்பாலான மாணவர்கள் மறுமதிப்பீடு மற்றும் சரிப்பார்பு செயல்முறை மூலம் தங்களது மதிப்பெண் 75 சதவீதத்திற்கு மேல் செல்லும் என்றும், இதன் காரணமாக தங்களுக்கு விருப்பமான கல்லூரியில் சேரலாம் என நினைத்துக்கொண்டு இருந்தனர். இந்த நிலையில், தற்போது இத்தகைய சிக்கல் உருவாகியுள்ளது மாணவர்கள் மத்தியில் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் மாணவர்கள் பதற்றமடைய வேண்டாம் என்றும் சிக்கல்கள் விரைவில் சரிசெய்யப்படும் என்றும் சிபிஎஸ்இ வாரியம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Follow Us