AQI
TV9 NETWORK LOGO
Default Image
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Latest Newsதமிழ்நாடுதமிழ்நாடு தேர்தல்ஐபிஎல் 2026இந்தியாபொழுதுபோக்குஷார்ட் வீடியோஸ்ஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வணிகம்விளையாட்டுடெக்னாலஜிஉலகம்ஹெஃல்த்வைரல்போட்டோ கேலரிவெப் ஸ்டோரிஸ்

பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் மனைவி.. தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கணவன் வேண்டுகோள்!

Man Requested District Collector To Kill Himself | குஜராத்தில் தனது மனைவி தன்னிடம் தொடர்ந்து பணம் கேட்டு தொல்லை செய்து வருவதாகவும், அதன் காரணமாக தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்று அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்துள்ளார்.

பணம் கேட்டு தொல்லை கொடுக்கும் மனைவி.. தன்னை கருணை கொலை செய்ய மாவட்ட ஆட்சியரிடம் கணவன் வேண்டுகோள்!
புகார் மனு கொடுத்த நபர்
Vinalin Sweety
Vinalin Sweety | Published: 30 May 2026 23:20 PM IST

அகமதாபாத், மே 30 : குஜராத்தில் (Gujarat) மனைவி பணம் கேட்டு தொல்லை செய்வதால் தன்னை கருணை கொலை செய்துவிட கோரி, ஒருவர் மாவட்ட ஆட்சிய அலுவலகத்தில் மனு அளித்த விவகாரம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பெண்கள் பாதுகாப்பு சட்டங்களை வைத்து தனக்கு எதிராக மனைவி புகார் அளிப்பதாக அவர் மிகவும் வேதனையுடன் தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து விரிவாக பார்க்கலாம்.

பணம் கேட்டு மனைவி சிதர்வதை – கணவர் கண்ணீர் மல்க கோரிக்கை

குஜராத் மாநிலம், சூரத்தை சேர்ந்தவர் கிரீட் படேல். இவர் தன்னை தனது மனைவி பணம் கேட்டு சித்ரவதை செய்வதாகவும், அவரது கொடுமை தாங்க முடியாததால் தன்னை கருணை கொலை செய்ய வேண்டும் என்றும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.

இதையும் படிங்க : உலக அளவில் முதல் இடம்… தேநீர் தரவரிசையில் மகுடம் சூடிய “இந்தியாவின் மசாலா டீ”

புகார் மனுவில் கூறப்பட்டுள்ளது என்ன?

அவர் மாவட்ட ஆட்சியரிடம் அளித்த புகார் மனுவில் கூறியுள்ளதாவது, எனக்கும் எனது மனைவிக்கும் 2024 ஆம் ஆண்டு நவம்பர் 14 ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. எங்கள் இருவருக்குமே இது மூன்றாவது திருமணமாகும். எனக்கு ஏற்கனவே முந்தைய மனைவிக்கு பிறந்த குழந்தை உள்ளது. திருமணத்திற்கு பிறகு எனது மனைவி என்னை சித்ரவதை செய்கிறார். பணம் கேட்டு என்னை கொடுமை செய்கிறார் என்று கூறியுள்ளார்.

இதையும் படிங்க : ஆர்ட் ஆஃப் லிவிங் அமைப்பின் ஆண்டு நிறைவு – 5 திட்டங்களை தொடங்கி வைத்த துணைக் குடியரசுத்தலைவர்

பெண்களுக்கான சட்டங்களை தவறாக பயன்படுத்துகிறார் – கிரீட் படேல்

எங்களுக்குள் குடும்ப சண்டை நடக்கும்போதெல்லாம் எனது மனைவி பெண்களுக்கு ஆதரவான சட்டங்களை பயன்படுத்தி எனக்கு எதிராக புகார் அளிப்பார். அவர் முதலில் என்னிடம் தகராறு செய்வார், பிறகு உதவி எண்களுக்கு போன் செய்வார். அவர் எனது குழந்தையையும் சிதர்வதை செய்தார். அது குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால், அந்த புகாரின் மீது எந்த வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

எனது பிரச்னைகளில் இருந்து விடுபட வேறு வழியில்லை. இதனால் விரக்தியின் உச்சிக்கு சென்றுள்ளேன். எனவே, என்னை கருணை கொலை செய்துவிடுங்கள். குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் எனது பிரச்னைகளை தீர்க்காவிட்டால் நான் ஏதாவது செய்துக்கொள்ள நேரிடும் என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow Us